CURRENT AFFAIRS
தமிழ்நாடு
Current Affairs August 03 ,2020.
பாரதி உரையின் நூறாவது ஆண்டு
1921 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி மகாகவி பாரதி ஈரோடு , கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு வந்து மனிதன் அறிவற்றவன் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
கருங்கல்பாளையத்தில் அவர் ஆற்றிய உரைதான் பொதுமக்கள் மத்தியில் அவர் ஆற்றிய கடைசி உரையாகும் பின்னர் அந்த வாசிப்பு அறையானது மகாகவி பாரதி நினைவு நூலகம் என மறு பெயர் இடப்பட்டது .
சா கந்தசாமி காலமானார்
பிறப்பு -1940 - நாகப்பட்டினம் மயிலாடுதுறை * 1968 இல் வெளியான சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு கந்தசாமி அறிமுகமானார் * 1998 ல் விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
தேசிய நிகழ்வுகள்
வான்வழி விதை விதைத்தல்
ஹரியானா மாநில வனத்துறையானது அம்மாநிலம் எல்லா இடத்திலும் வான்வழியாக விதை விதைத்தல் சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது.
இந்த நுட்பமானது செல்ல முடியாத அல்லது செல்வதற்கு கடினமாக உள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் விதை விதைத்தலை மேற்கொள்ள அனுமதிக்கின்றது யமுனை நீரில் அமோனியா.
யமுனை ஆற்றில் அதிக அளவு
( 3 பிபிஎம் ) அமோனியா சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இந்திய தர நிர்ணய பணியகத்தின் படி குடிநீரில் அம்மோனியாவின் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச வரம்பு 0.5 பிபிஎம் ஆகும் .
ஒரு முகமூடி பல உயிர்கள்
மத்திய பிரதேச மாநில அரசு ஒரு முகமூடி பல உயிர்கள் என்ற விழிப்புணர்வை தொடங்கி வைத்தது
நோக்கம்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
மேலும் ஏழை மக்களுக்கு இலவச முக கவசம் விநியோகிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பாலம்
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின்கட்காரி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
பாட்னா ஹாஜிபூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழி பாலம் 5.5 கிலோ மீட்டர் தூரம் உடையது.
இந்தப் பாலம் பணிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக புது விதமான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
அறிவியல்மற்றும் தொழில்நுட்பம்
சுரக்ஷா.
அறிவியல் சார் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றமானது அமேசிஸ் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து சுரக்க்ஷா என்ற நுண்ணுயிர் தூய்மையாக்கல் பெட்டியை மேம்படுத்தியுள்ளது.
வெப்பம் மற்றும் யுவிசி ஒளியை பயன்படுத்தி 10-15 நிமிடத்திற்குள் ஒரு பொருளை தூய்மையாக்கும் திறன் கொண்டது.
Telegram
Previous article
Next article
Leave Comments
Post a Comment