தேசிய பணியாளர் தேர்வு முகமை - உண்மை அறிக...
இச்செய்தியை பார்த்து அரசு தேர்வர்கள்(Aspirant's) எதிர்மறை எண்ணங்கள் கொள்ள வேண்டாம்... மத்திய அரசில் (UPSC தவிர்த்து) உள்ள பணிகள் & தேசிய வங்கிப் பணிகளுக்கு SSC, RRB, IBPS, மட்டுமே பொது தகுதி தேர்வு.. TNPSC, TNUSRB தேர்வுகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை... மாநில அரசின் பணிகள் இதில் வராது.. பயத்தைவிட்டு படிக்க தொடங்குங்கள்......
#விரிவான_விளக்கம்_கீழே...
ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் பணிகளுக்குப் பொதுவான தகுதித் தேர்வு நடத்துவதற்காகத் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ரயில்வே(RRB) , வங்கி(IBPS) , பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆகிய மூன்று வகையான தேர்வு வாரியங்களுக்குப் பதில் பொதுவான தகுதித் தேர்வு நடத்த ஏதுவாகத் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூன்றாண்டுகளுக்குச் செல்லும் என்றும், மதிப்பெண்களை உயர்த்த ஒருவர் மீண்டும் தேர்வெழுதலாம் என்றும், உயர்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும், இப்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளிலேயே நடத்தப்படும் தேர்வுகள் இனி 12 மொழிகளில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை வேலைதேடும் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். விடுதலைக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்றும், இதனால் தேர்வு, பணியமர்த்தம் ஆகியவை எளிமையாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave Comments
Post a Comment