Ads Right Header

டெல்லி சுல்தான்கள் பற்றிய தகவல்கள்!


டெல்லி சுல்தான்கள் பற்றிய தகவல்கள்:

1.      இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது.
2.      டெல்லி சுல்தானியர்களின் ஆட்சியானது கி.பி. 1206 முதல் 1526 ஆம் ஆண்டுவரை நீடித்தது.
3.      ஐந்து வம்சங்களான: அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி ஆகியன டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்தன.
4.      வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியதோடு நிற்காமல், அவர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் நுழைந்தனர்.
5.      இந்தியாவில் அவர்களது ஆட்சி, சமூகம், ஆட்சித் துறை மற்றும் பண்பாட்டு நிலைமைகளில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.

அடிமை வம்சம்:

1.      அடிமை மரபை தோற்றுவித்தவர் – குத்புதின் ஐபக்
2.      அடிமை என்பதன் பொருள் – மம்லுக்
3.      முகமது கோரியின் அடிமை – குத்புதின் ஐபக் ஆவார்.
4.      குத்புதின் ஐபக் டெல்லியில் கட்டி தொடங்கிய மசூதியின் பெயர் – க்யூவாட் உல் இஸ்லாம்
5.      குத்புதின் ஐபக் ‘லக்பாக்க்ஷா’ என அழைக்கப்பட்டார்
6.      ”லக்பாக்க்ஷா” என்பதன் பொருள் – லட்சங்களை அள்ளி தருபவர்
7.   குத்புதின் ஐபக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் – குதுப்மினார்
8.      குத்புதின் ஐபக் போலோ விளையாட்டின் போது தவறி விழுந்து இறந்து போனார்.
9.      போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் – சவ்கன்
10. குத்புதின் ஐபாக் பின் ஆட்சிக்கு வந்தவர் – இல்துமிஷ்

இல்துமிஷ்:

1.      குத்புதின் ஐபக் பின் ஆட்சிக்கு வந்தவர் – இல்துமிஷ்.
2.      இல்துமிஷ் என்பவர் குத்புதின் ஐபக்கின் மருமகன் ஆவார்.
3.      குத்புதின் ஐபாக் மருமகன் – இல்துமிஷ்
4.      குத்புதின் ஐபாக் மகன் – அராம்
5.      இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் – டாங்கா
6.      குதுப்மினாரை கட்டி முடித்தவர் -இல்துமிஷ்
7.      இல்துமிஷ் மகளின் பெயர் – இரசிய சுல்தான்
8.      இல்துமிஷ் பின் ஆட்சிக்கு வந்தவர் – இரசிய சுல்தான்
9.      டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் – இரசிய சுல்தான்
10.  இரசிய சுல்தான் கணவர் பெயர் – அல்துனியா
11.  இரசிய சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் – நஸ்ருதீன் முகமது
12.  இல்துமிஷ் கடைசி மகன் – நஸ்ருதீன் முகமது
13.  நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் – கியாசுதின் பால்பன்
14.  நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் – கியாசுதின் பால்பன்
15.  அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் – கியாசுதின் பால்பன்
16.  40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் – கியாசுதின் பால்பன்
17.  கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் – அமீர் குஸ்ரு
18.  இந்துஸ்தான் கிளி என்று அழைக்கப்படுபவர் – அமீர் குஸ்ரு
19.  கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் – கைகுபாத்
20. அடிமை மரபின் கடைசி அரசர் – கைகுபாத்

கில்ஜி மரபு:

1.      கில்ஜி மரபை தோற்றுவித்தவர் – ஜலாலுதீன் கில்ஜி
2.      ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது – 70
3.      ஜலாலுதீன் கில்ஜிக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் – அலாவுதீன் கில்ஜி
4.      ஜலாலுதீன் கில்ஜி மருமகன் – அலாவுத்தீன் கில்ஜி
5.      ஜலாலுதீன் கில்ஜி, அலாவுத்தீன் கில்ஜியால் கொல்லப்பட்டார்
6.      கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.
7.      ஜலாலுதீன் கில்ஜி மருமகன் அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.
8.      அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்த ஆண்டு கி.பி. 1297
9.      குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி – மாலிக்காபூர்
10.  அலாவுத்தீன் கில்ஜி யால் தோற்கடிக்கப்பட்ட மேவர் அரசர் – ராணபீம்சிங்
11.  ராணபீம்சிங் மனைவி பெயர் – ராணி பத்மினி
12.  ராணி பத்மினி, ஜவகர் முறையில் தன் கணவரின் இறப்பிற்கு பின் உயிர் துறந்தார்.
13.  ஜவகர் முறை என்பது தீக்குளித்து உயிர் விடும் முறையாகும்.
14.  தென்னிந்தியாவில் இராமேஸ்வரம் வரை படையெடுத்து வந்த முதல் கில்ஜி படைதளபதி மாலிக்காபூர் ஆவார்.
15.  அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் – அலாவுத்தீன் கில்ஜி
16.  குதிரைக்கு சூடு போடும் முறைக்கு தாக் முறை என்று பெயர்.
17.  தாக் முறை அறிமுக படுத்தியவர் – அலாவுத்தீன் கில்ஜ
18.  அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் – அமீர் குஸ்ரு
19.  அமீர் குஸ்ரு எழுதிய நூல் – லைலா மஜ்னு
20.  அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி – ஷெனாய்
21.  அலாவுத்தீன் கில்ஜி இறப்பு – கி.பி. 1316
22.  அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் – குத்புதின் முபாரக்
23. கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் – குத்புதின் முபாரக்

துக்ளக் மரபு:

1.      துக்ளக் மரபு தோற்றுவித்தவர் – கியாசுதின் துக்ளக்
2.      கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு – துருக்கி
3.      கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு – பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு
4.      கியாசுதின் துக்ளக் மகன் பெயர் – முகமது பின் துக்ளக்
5.      முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் – பரணி
6.      இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி – தோவாப்
7.      தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் – முகம்மது பின் துக்ளக்
8.      தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் – தௌலதாபாத்
9.      அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் – முகம்மது பின் துக்ளக்
10.  முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு – 1. பாரசீக 2. குமோன்
11.  முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் – முகம்மது பின் துக்ளக்
12.  முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் – பெரோஸ் துக்ளக்
13.  கியாசுதின் இளைய சகோதரர் – பெரோஸ் துக்ளக்
14.  துக்ளக் மரபில் சிறந்த அரசர் – பெரோஸ் துக்ளக்
15.  ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு முறையை அறிமுகம் படுத்தியவர் – பெரோஸ் துக்ளக்
16.  துக்ளக் மரபு சிதறுண்டு போக காரணம் – தைமூர் படையெடுப்பு
17. துக்ளக் மரபு கடைசி அரசர் – பெரோஸ் துக்ளக்

சையது மரபு:

1.      சையது மரபு தோற்றி வித்தவர் – கிசிர்கான்
2.      கிசிர்கான் தலைநகரம் – டெல்லி
3.      கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் – முபாரக் ஷா
4.      முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் – முகம்மது ஷா
முகம்மது ஷா அமைச்சர் – பஹ்லுல் லோடி
6.சையது மரபின் கடைசி அரசர் – முகம்மது ஷா

லோடி மரபு:

1.       லோடி மரபு தோற்றுவித்தவர் –
பஹ்லுல் லோடி

2.  பஹ்லுல் லோடி மகன் – சிக்கந்தர்லோடி

3.    லோடி வம்சத்தில் சிறந்த அரசர் –
சிக்கந்தர் லோடி

4.  டெல்லியில் இருந்து தலைநகரை
ஆக்ராவிற்கு மாற்றியவர் –சிக்கந்தர் லோடி
5.சிக்கந்தர் லோடியின் மகன் –
இப்ராஹிம் லோடி

6.      சிக்கந்தர் லோடி படைதளபதிதௌலத்கான் லோடி ஆவார்.

7.  பாபரை இந்தியாவின் மீது
படையெடுத்து வருமாறு அழைப்பு
விடுத்தவர் – தௌலத்கான் லோடி

8.  பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும்ஏற்பட்ட போர் – முதலாம் பானிபட்போர் (1526)

9.   லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டு– 75 ஆண்டுகள்.

1.   இதனை ஒருமுறை படிச்சிட்டு
விட்டுடமா, இதனை பல முறை
நினைவுப்படுத்தினால் , டெல்லி
சுல்தான்கள் பற்றிய தகவல்கள்பசுமரத்தாணி போல மனதில்பதிந்து விடும்.

2. இவ்வளதாங்க! நீங்க நினைவில்வைத்து கொள்ள வேண்டியது மேலேகுறிப்பிட்ட டெல்லி சுல்தான்கள் பற்றிய தகவல்கள் மிகமுக்கியமானவை.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY