Ads Right Header

ɢʀᴏᴜᴘ1&ɢʀᴏᴜᴘ2&ɢʀᴏᴜᴘ4 Model Question and Answer!


1.1)அடர்த்தி குறைந்த சூடான காற்றினால் பலூன் மேல்நோக்கிச் செல்கிறது
2)கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது
3)குளிர்ந்த காற்று அதிக அழுத்தப் பகுதியில் இருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி நகர்கிறது
இவற்றின் அடிப்படை?

A)வெப்பச்சலனம்
B)வெப்பமாற்றி
Cவெப்பக்கடத்தல்
D)வெப்பக்கதிர்வீச்சு

2.அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில்
உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின்
இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு

A)வெப்பக்கடத்தல்
B)வெப்பச்சலனம்
C)வெப்பமாற்றி
D)நிலைமாற்றும் வெப்பம்

3.மின்காந்தத்தின் பயன்கள்
1)ஒலிபெருக்கி
2)காந்தத்தூக்கல் தொடர்வண்டி
3)MRI ஸ்கேன்
4)மின்னாக்கப் பொறி
தவறானவை:

A)1
B)2
C)3
D)4

4.காந்தப் புலத்திற்கு செங்குத்தாக  வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளமுடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை F க்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தப்புலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்?

A)2 மடங்கு
B)6 மடங்கு
C)8 மடங்கு
D)12 மடங்கு

5.பொருத்துக.
1)காந்தப்பாயம்-அ) H.A. லாரன்ஸ்
2)மின்னாக்கப் பொறி-ஆ)மைக்கேல் ஃபாரடே
3)காந்தப்புலத்தில் விசை-இ) வெபர் (Wb)
4)டயா காந்தத்தன்மை-ஈ) டைனமோ

A)ஈ ஆ இ அ
B)இ ஈ அ ஆ
C)ஆ அ ஈ இ
D)அ இ ஆ ஈ

6.ஒரு கடத்தியில் மின்னோட்டம் பாயும்பொழுது, அதனைச் சுற்றி காந்தப்புலம் உருவாகி
 கடத்தியானது காந்தம் போல் செயல்ப
டுகிறது. ஆனால் மின்னோட்டம் பாயாத ஒரு காந்தக்கல் எவ்வாறு காந்தமாக முடியும் ?

A)மின்சுற்றில் மின்னூ
ட்டமானது மின்கலத்தின் எதிர் முனையிலிருந்து நேர்முனைக்குச் செல்வதால்மின்னோட்டம் உருவாகிறது. அதன் விளைவாக காந்தப்புலம்
உருவாகிறது
B)எலக்ட்ரான்கள் உட்கருவை சுற்றி உள்ளதால் காந்தப்புலம் உருவாகிறது
C)இயற்கையாகவை  காந்தப்புலம் உருவாகிறது
D) செயற்கை முறையில் தூண்டப்படுகிறது

7.பொருத்துக.
1)மின்மோட்டார்-அ)மைக்கேல் ஃபாரடே
2)மின்னியற்றி-ஆ)ஃபிளெமிங்கின் வலக்கை விதி
3)மின்காந்தத் தூண்டல்-இ)மின்னழுத்தத்தை மாற்றுகிறது
4)மின்மாற்றி-ஈ)மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக

A)ஈ ஆ அ இ
B)ஆ இ அ ஈ
C)இ ஆ ஈ அ
D)ஈ ஆ இ அ

8.ஃபிளெமிங்கின் வலக்கை விதி
1)சுட்டு விரல் காந்தப்புலத்தின் திசை
 2)பெருவிரல் கடத்தி இயங்கும் திசை
3)நடு விரல் மின்னோட்டத்தின்
 திசையைக் குறிக்கும்
4)மின்னியற்றி விதி என்றும் அழைக்க
ப்படுகிறது
தவறானவை:

A)1 2 4
B)2 3 4
C)1 3 4
D)ஏதுமில்லை

9.தண்ணீரில் சில பொட்டாசியம் பெர்மாங்கனேட் படிகங்களைச் சேர்த்து
அதனை வெப்பப்படுத்தும் போது ____நிறக்கோடுகளோடு நீர் மேலே எழும்?

A)பச்சை
B)மஞ்சள்
C)ஊதா
D)சிவப்பு

10. வெப்பக் கதிர்வீச்சு முறையில் சூடான பொருட்களில்  இருந்து வெப்பமானது எவ்வாறு பரவுகிறது?

Aநுண்துகள்களாக
B)ஒளிக்கற்றையாக
C) அலைகளாக
D)வெப்பக் கதிராக

11.கூற்று:
சமையல் அறைகளிலும்
தொழிற்சாலைகளிலும் உயரமான புகைபோக்கிகளை வைக்கப்பட்டுள்ளது.
காரணம்:
சூடான காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால் எளிதாக வளிமண்டல
த்திற்குச் சென்று விடுகிறது.

A)கூற்று சரி காரணம் சரி
B)கூற்று,காரணம் சரி;விளக்கமும் சரி
C)கூற்று காரணம் சரி;விளக்கம் சரியல்ல்
D)கூற்று சரி காரணம் தவறு

12.100°C வெப்பநிலையில் இருக்கும் நீரைப் பயன்படுத்தி 2 கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன்
 சேர்த்த கலவையை 0°C வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்?
Hints:
நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் = 4.2 JKg-1 K-1மற்றும்
பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1.

A)1.7கிகி
B)1.4 கிகி
C)1.6 கிகி
D) 1.3 கிகி

13.சிலநேரங்களில் நாய் தனது நாக்கை வெளியே
தொங்கவிட்டுக்கொண்டேசுவாசிப்பதைப் பார்த்தி
ருப்பீர்கள்.ஏன்??

A) நாய் சுவாசிக்கும் போது மூச்சுக்குழல் விரிவடைய
B)காற்றில் உள்ள வாயுக்கள் உட்கிரக்கிக
C)நாய் தன் நாக்கில் இருக்கும் தன் வெப்ப
த்தை வெளியேற்றி தன்னைக் குளிர்வித்துக்
கொள்கிறது.
D)உமிழ்நீரை வெளியேற்றுகிறது

14.பிணைப்பிற்குத் தேவையான இரண்டு எலக்ட்ரான்களையும், பிணைப்பில் ஈடுபடும் இரண்டு அணுக்களில் ஏதேனும் ஒரு அணு
வழங்கி ஏற்படுத்தும் பிணைப்பு ?

A) எளிய பிணைப்பு
B )மும்மை பிணைப்பு
C) சகப்பிணைப்பு
D) ஈதல் பிணைப்பு

15.H2Oல் உள்ள H மற்றும் Oன் ஆக்ஸிஜனேற்ற எண்?

A)+1, -2
B)+2,+1
C)-2,-1
D) -1,+2

16.1)ஹீலியத்தைத் தவிர, மற்ற மந்த வாயுக்கள்
அனைத்தும் அவற்றின் இணைதிறன் கூட்டில்
எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கின்றன
2)மந்த வாயு அணுக்கள் இணைதிறன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெற்றிரு
ப்பதால் அவை எலக்ட்ரா
ன்களை இழக்கும்அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருக்கும்
3)ஒரு அணு அதன் இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை
மற்றொரு அணுவிடமிருந்து ஏற்றே நிலையான மந்த வாயு
எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
4)அயனிப்பிணைப்பு என்பது ஒரு நேர்மின்
அயனிக்கும், எதிர்மின் அயனிக்கும் இடையே
நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு.
சரியானவை:

A)1 2
B)2 3
C)3 4
D) 1 4

17.ஒரு தனிமத்தின் அணு எலக்ட்ரானிய இணை திறன் பிணைப்பை உருவாக்கும்போது அவ்வணு இழக்கும் அல்லது ஏற்கும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதன் __________
எனப்படுகிறது.

A)எலக்ட்ரான் அணுஎண்
B)எலக்ட்ரான் ஏற்புத்திறன்
C)எலக்ட்ரான் இணைதிறன
D)எலக்ட்ரான் இழக்கும் திறன்

18.ஃபஜானின் விதி

A) ஒரு சேர்மம் அயனிப்பிணைப்பைப் பெற்றுள்ளதா அல்லது சகப் பிணைப்பை பெற்றுள்ளதா என்பதை ஒரு சிலகாரணிகளைக் கொண்டு கண்டறிய ஒரு விதிமுறைகள்.
 B )ஒரு சேர்மத்திலுள்ள
அணுக்கள் நேர் மற்றும் எதிர் மின்சுமை கொண்ட அயனிகளாக முற்றிலுமாக
 பிரிவுறுதல் முனைவுறுதல்
 எனப்படும்.
C), ஒரு சில சேர்மங்களில் சகப்பிணைப்பு
உருவாகத் தேவையான இரு எலக்ட்ரான்களையும் பிணைப்பில் ஈடுபடும் ஏதேனும் ஒரு அணு வழங்கி, பிணைப்பை
உருவாக்குகிறது.
D )ஒரு மூலக்கூறில் உள்ளஅணுக்களுக்கிடையேயான
பிணைப்பின் தன்மையே அம்மூலக்கூறின்
பண்புகளை நிர்ணயிக்கும்
 முக்கியக் காரணி ஆகும்.

19.ஆக்ஸிஜனேற்ற வினைகள்
1)உலோகங்களின் அரிமானம்
2)முட்டையை கெடச்செய்தல்
3)திறந்து வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள்
கெட்டுப்போதல்
4)வெட்டப்பட்ட காய்கறிகளும்,
பழங்களும் சிறிது நேரத்தில் நிறம் மாறுவது
தவறானவை:

A)1
B)2
C)3
D)4

20.ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது
அந்த உலோகம் _______
எண்ணிக்கை ஆகும். ஒரு அலோகத்தின்
இணைதிறன் என்பது அது _______எண்ணிக்கை ஆகும்.

A)e-,e+
B)e+,e-
C)e+2,e-2
D)e-2, e+2

21.1)ஒரு கிலோகிராம் நிறை யுள்ள ஒரு பொருளை 1°C வெப்பநிலைக்கு உயர்த்து வதற்குக் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றலே தன் வெப்ப ஏற்புத் திறன்
2)ஒரு பொருளின் வெப்ப நிலையை 1°C உயர்த்து வதற்குத் தேவையான வெப்ப ஆற்றல் வெப்ப
ஏற்புத் திறன் ஆகும்
3)தன் உள்ளுறை
வெப்பத்தின் SI அலகு
J/kg
4)அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தமும்
-273.15˚C வெப்பநிலையில் சுழியாகிவிடும்.
சரியானவை

A)1 2 3
B)1 3 4
C)1 3 4
D)அனைத்தும்

22. தன்வெப்ப ஏற்புத்திறன் அளவு:
1)திரவம்= 460 JKg-1 K-1
2)வாயு= 2100 JKg-1 K-1
3)திடம்=4200 JKg-1 K-1

A) 1 2 3
B )2 3 1
C) 3 1 2
D) 3 2 1

23.தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு?

தவறானது:

A) Jkg-1 K-1
B ) Jkg°c K-1
C) J/kg°C
D) J/g°C

24.வெப்பநிலை அளவீட்டை மாற்றுக:
i. 25°C ஐ கெல்வின் அளவீட்டிற்கு மாற்றுக.
ii. 200 K ஐ °C அளவீட்டிற்கு மாற்றுக

A)159.69 k, -61.28°c
B)234.18k,-63.25°c
C)256.25k,-70.22°c
D)298.15k,-73.15 °c

25.ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில்
இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு
மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால்
வெப்பம் பரவுவதை எவ்வாறு அழைக்கிறோம்?

A) வெப்பக் கடத்தல் 
B)வெப்பச் சலனம்
C)வெப்பக் கதிர்வீச்சு
D) நிலைமாற்றம்

26.மின்கடத்தியால் உருவாக்கப்படும் காந்தப்
புலமானது மின்னோட்டத்தின் திசைக்கு எத்திசையில் அமையும்.

A)கிடைமட்டமாக
B)எதிர் திசையில்
C)செங்குத்து திசையில்
D)சுழியாக அமையும்

27.ஒரு மின்மாற்றியின் முதன்மைச் சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துணைச் சுருள் 8
சுற்றுகளைக் கொண்டுள்ளது.இது ஒரு 220 V
 AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?

A)2.2 வோல்ட்
B)5.2 வோல்ட
C)6 வோல்ட
D) 2வோலல்ட்

28.மின்னோட்டத்தின் காந்த விளைவு?

A) H.A.லாரன்ஸ் ஜான்ஸ்
B)ஹான்ஸ் கிறிஸ்டியன் அயர்
C)மைக்கல் ஃபாரடே
D)W.R.மியார்டின்ஸ் ஃபெரிக்

29.1)சில கடல் ஆமைகள் (லாஜெர்ஹெட் கடல் ஆமை)தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்தஉருப்பதித்தல் என்னும் முறையைக் கையாளுகின்றன.
 2)காந்தப்புலமானது காற்றில் மட்டும் ஊடுரு
விச் செல்லும். பூமி அதன் காந்தப்புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.
3)காந்தப்புலத்தில் ஒரு சிறிய திசைகாட்டியைவைப்பதன் மூலம், ஒரு காந்தத்தைச்சுற்றியுள்ளகாந்தப் புலத்தின் திசையை அறியலாம்.
 தவறானவை:

A) 1
B)2
C)3
D)அனைத்தும்

30.ஒரு காந்தத்தை சில இரும்புக் காகித இணைப்பான்களை நோக்கி நகர்த்தும் பொழுது ஒரு புள்ளியில் காகித இணைப்பான்கள் காந்தத்துடன் ஒட்டிக்
கொள்கின்றன. இதிலிருந்து தெரிவது?

A)காந்தவிசைக்கோடுகள் இருப்பது
B)காந்தத்திற்கு ஈர்ப்புவிசை உள்ளது.
C)காந்தத்தை சுற்றிலும் கண்ணுக்குப் புலப்படாத
புலம் உள்ளது
D)புவியீர்ப்பு விசை காந்தத்தை தூண்டுகிறது

31. ஒப்படர்த்தியின் அலகு?

A.பாஸ்கல்
B.கி.கி/மீ
C.பிக்நோமீட்டர்
D.அலகு இல்லை

32. திரவத்தின் ஒப்படர்த்தி என்பது?

A.  திரவத்தில் ஒரு பொருளின் தோற்ற எடை இழப்பு/ நீரில் அப்பொருளின் தோற்ற எடை இழப்பு
B.நீரில் ஒரு பொருளின் தோற்ற எடை இழப்பு/ திரவத்தில் ஒரு பொருள் தோற்ற எடை இழப்பு
C. திரவத்தில் ஒரு பொருளின் தோற்ற எடை உயர்வு/ நீரில் அப்பொருளின் தோற்ற எடை இழப்பு
D. திரவத்தில் ஒரு பொருளின் தோற்ற எடை இழப்பு/  நீரில் அப்பொருளின் தோற்ற எடைஉயர்வு

33. நீரியல்மானி கீழ்கண்ட எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

A.  மிதத்தல்
B. கார்ட்டீசியன் மூழ்கி ஆய்வு
C. பாஸ்கல் விதி
D. ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

34. பெட்ரோலியப் பொருட்கள் நீரில் மிதப்பதற்கு காரணம்?

A. அவற்றின்  தன்னடர்த்தி அதிகமாக உள்ளதே காரணம்
B. கார்ட்டீசியன் மூழ்கி தத்துவத்தின்படி செயல்படுவதால்
C. அவற்றின் இடப்பெயர்ச்சி செங்குத்தான மிதப்பு விசையை உண்டாக்குவதே காரணம்
D. அவற்றின் தன்னடர்த்திட குறைவாக உள்ளதே காரணம்

35.கீழ்கண்ட எந்த வெப்பநிலையில் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்?

A.60℃
B.55℃
C.70℃
D.32℃

36 அடர்த்தியின்  SI அலகு?

A.கி/மீ
B.கிகி/மீ
C.கிகி/செ.மீ
D.A மற்றும் B

37. கீழ்க்கண்ட எந்த காற்றழுத்தமானி குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்தம் மாற்றத்தை கணக்கிடுகிறது?

A.பாரோ கிராப்
B.அனிராய்டு காற்றழுத்தமானி
C.ஃபோர்டின் காற்றழுத்தமானி
D.அளவி

38.அலைநீளத்தின் SI அலகு?

A.மீட்டர்
B.ஹெர்ட்ஸ்
C.வினாடி
D.மீ.வி⁻¹

39.அதிர்வெண்ணின் SI அலகு?

A.செ⁻¹
B.ஹெர்ட்ஸ்
C.மீட்டர்
D.A &B

40. எதிரொலிக்கபட்ட ஒலியை தெளிவாக கேட்க வேண்டுமெனில் ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம்?

A.0.1 விநாடி
B.17மீ
C.0.01 விநாடி
D.0.1 மணி

41.எதிர் முழக்கத்துடன் தொடர்புடையது?

A. பன்முக எதிரொளிப்பு
B. முழு அக எதிரொளிப்பு
C. சோனார்
D. மீயொலி

42. 90 கிலோ நிறையைக் கொண்ட மனிதன் ஒருவன் தன் இரு கால்களிலும் ம தரையில் நிற்கிறான் தரையுடன் கால்களின்  பரப்பளவு 0.036m^2.ஆகும். (g=10ms^-2)எனில் அந்த மனிதனின் உடல் எவ்வளவு அழுத்தத்தை தரையில் ஏற்படுத்துகிறது?

A. 50000டைன் cm^-2
B. 250000டைன் cm^-2
C. 250000paskal
D. 50000paskal

43.கூற்றுகளை கவனி.
1.பரப்பளவின் CGS அலகு cm-2
2.அழுத்தத்தின் CGS அலகு டைன் cm-2
3.அடர்த்தியின் SI அலகு கி/மீ 3
4. வளிமண்டல அழுத்தத்தின் அலகு பார் (1பார் =1×10^5பாஸ்கல்).

A. அனைத்தும் சரி
B. 1 4 சரி
C. 2 4 சரி
D. 1 3 சரி

44.கூற்றுகளில் தவறானது எது?
1. ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒளியானது தொனி எனப்படுகிறது.
2. பல்வேறு துணிகளின் தொகுப்பு இசைக்குறிப்பு எனப்படுகிறது.
3. தொனி என்பதை வேறுபடுத்திக் கூடிய பண்பு சுருதி  ஆகும்.

A.அனைத்தும்  தவறு
B.1மட்டும் தவறு
C.2மட்டும் தவறு
D.3மட்டும் தவறு

45. திடப் பொருளில் உள்ள ஒரு ஒலியின் வேகத்தின் காரணிகளில் பொருந்தாதது எது?

A. ஊடகத்தின் அழுத்தம்
 B.ஊடகத்தின் அடர்த்தி
 C.ஊடகத்தின் வெப்பநிலை
D. ஊடகத்தின் நீட்சியில் பண்பு

46.பொருத்துக.
கோள்      -சுற்று காலம்.
1.சனி         -224.7 நாள்
2.வியாழன் -687நாள்
3.வெள்ளி -29.46ஆண்டு
4.செவ்வாய் -11.862ஆண்டு.

A.4321
B.3412
C.3421
D.4312

47. பன்னாட்டு விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் இருந்தவர் ஆன பெக்கி வில்சன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்?

A.665நாட்கள்
B.655நாட்கள்
C.565நாட்கள்
D.555நாட்கள்

48.கிராபின் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இது ஒரு அணுவின் தடிமனை மட்டும் கொண்டது
2. இதில் கார்பன் அணுக்கள் அறுகோண வடிவில் ஒரே வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும்
3. ராபர்ட் கார்ல்  மற்றும் ரிச்சர்ட் சுமாலி என்பவர்களால் 2004 ல் அறிவிக்க பட்டது.
4. ஒட்டும் காகிதத்தை உபயோகித்து கிராபைட் இலிருந்து ஒரு வரிசை அணுக்களை பிரித்து எடுத்து கிராபின் தயாரித்தனர்.

A.அனைத்தும் சரி
B.124சரி
C.234சரி
D.134சரி

49. கீழ்க்கண்டவற்றுள் அமில நீக்கியாக பயன்படுவது எது?

A.CaCo3
B.NaHCo3
C.Cs2
D.CaC2

50.பொறுத்துக.
1.கனிமம் -ஆஸ்பிரின்
2.விலங்கு -குயினைன்
3.ரசாயன தொகுப்பு -பாரஃபின்
4.தாவரங்கள்-ஹெபாரின்

A.3412
B.3142
C.4312
D.4321

51. நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு எது?

A.ரேடான்
B.கிரிப்டோன்
C.செனான்
D.ரேயான்

52. கூற்று: வௌவ்வால் குளிர்கால உறக்கம் மேற்கொள்கிறது.
காரணம்: குளிர்காலங்களில் வளர்ச்சிதை மாற்றம் குறைவு படுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு.

A.கூற்று காரணம் சரி
B.கூற்று சரி காரணம் தவறு
C.கூற்று சரி காரணம்சரி. சரியான விளக்கம்ஆகும்
D.கூற்று காரணம் சரி சரியான விளக்கம் அல்ல.

53. உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத் தன்மை கொண்ட முக்கிய 34 இடங்களில் இந்தியாவில் உள்ள
4 இடங்களில் பொருந்தாதது.

A.இமய மலை
B.மேற்கு தொடர்ச்சி மலை
C.நிகோபார் தீவு
D.வட மேற்கு பகுதிகள்

54. மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?

A.அசட்டோபாக்டர்
B.மைக்கோரைசா
C.அசோலா
D.அசோஸ்பைரில்லம்

55. கீழ்கண்டவற்றுள் உணவு காளான் எது?

A.அகரிகஸ் பைஸ்போரஸ்
B.புளோரோட்டஸ்
C.வால்வேரியல்லா
D.கானோடெர்மா லூஸிடெம்.

56. திடமான சுருள் வடிவம் உடைய பாக்டீரியம் எது?

A.ஸ்பைரோகீட்ஸ்
B.விப்ரியோ.
C.ஸ்பைரில்லா
D.ட்ராபோனிமா பெல்லிடம்

57. போர்ட்டோ டெல்லா பெர்டுசிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்?

A.காசநோய்
B.டிப்திரியா
C.கக்குவான் இருமல்
D.நிம்மோனியா

58. குழந்தை பிறந்து 9to12 ஆவது மாதங்களில் கொடுக்கப்படும் தடுப்பு மருந்து?

A.DPT &போலியோ
B.DD&DAB
C.MMR
D.தட்டம்மை

59.டெர்பின் எனும் மருந்து ________ தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?

A.யூகலிப்டஸ்
B.சின்கோனா
C.ஹெமிடெஸ்மாஸ் இண்டிகா
D.ஆசிமம் சாங்க்டம்.

60.கூற்றுகளை கவனி.
1. டோக்கியோ உலகிலேயே மிகப்பெரிய நகரமாகும் இது 36 மில்லியன் மக்கள் தொகை கொண்டது.
2. டமாஸ்கஸ் உலகின் மிகப் பழமையான மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் ஒரு நகரமாகும்.
3.2016ம் ஆண்டின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்று வாழ்ந்து வருவதில் வியன்னாமுதலிடமும் சூரிச் 2ம் இடமும்  பெற்றுள்ளன.

A. மூன்றும் சரி
B. 23சரி
C. 13சரி
D. 12சரி

61. ஓசோன் அடுக்கு பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்?

A. Oct 16
B. Sept 16
C. Aug 16
D. June 16

62. GNHI என்னும் பதத்தை பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே  வாங்சுக் என்பவர் 1970ல்  உருவாக்கி  நடைமுறைப்படுத்தப்பட்ட வருடம்?

A. 2008 ஜூலை 18
B. 2008ஜூலை 28
C. 2008ஜூன் 18
D. 2008ஜூலை 28

63."grass without roots" என்ற அடைமொழி கொண்ட குழு உருவாக்க பட்ட வருடம்?

A. 1977
B. 1957
C. 1985
D. 1986

64. மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட வருடம்?

A. 1958
B. 1957
C. 1950
D. 1952

65. தவறானது எது?

A. மாவட்ட ஊராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
B. அமெரிக்க அதிபரின் ஆட்சிக் காலம் நான்கு ஆண்டுகள்
C. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
D. நகரசபைத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

66. தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது?

A. கம்பு
B. மக்காசோளம்.
C. கோதுமை
D. பருப்பு வகை

67. இந்தியா உலக அளவில் எத்தனையாவது மறை நீர் ஏற்றுமதியாளராக விளங்குகிறது?

A. 4வது
B. 5வது
C. 8வது
D. 6வது

68. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு எத்தனை விழுக்காடு?

A. 57%
B. 67%
C. 47%
D. 56%

69.5Aமின்னோட்டம் பாயும்50cm நீளமுடைய ஒரு கடத்தியானது 2×10^-3 டெஸ்லா வலிமையுடைய காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தி மீது செயல்படும் விசையை கண்டுபிடி

A.0.05N
B.0.005N
C.0.0005N
D. 0.006N

70) கர்மன் கோடு எந்த அடுக்கிற்கு மேல் உள்ளது ?

அ) கீழ் அடுக்கு
ஆ) படுகை அடுக்கு
இ) இடைய அடுக்கு
ஈ)வெப்ப அடுக்கு

71) சரியானதை கண்டறிக
1. UNDP 16 வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்துள்ளது
2.நவீன உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பாபிலோனில் நடந்தது

அ) 1 சரி
ஆ)2 சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு

72) சமூதாய அபிவிருத்தி திட்டம் ஆண்டு?

அ) 1952
ஆ)1953
இ)1954
ஈ)1957

73.பொருத்துக
அ)பல்வந்த்ராய் மேத்தா - வேரற்ற புற்கள்
ஆ) அசோக் மேத்தா- மூன்று அடுக்கு முறை
இ)ஜி.வி.கே. ராவ்- இரண்டு அடுக்கு முறை
ஈ)எல்.எம். சிங்வி-1986

அ)2341
ஆ)2314
இ)3241
ஈ)4321

74) தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம்?

அ)1993
ஆ)1992
இ)1994
ஈ)1996

75) தமிழகத்தின் மொத்த புவியியல் பரப்பளவு?

அ)14433000 ஹெக்டேர்
ஆ)13330000 ஹெக்டேர்
இ)13033000 ஹெக்டேர்
ஈ)14544000 ஹெக்டேர்

76) தமிழகத்தில் காணப்படும் தரிசு நிலத்தின் சதவீதம்?

அ)13%
ஆ)14%
இ)16%
ஈ)17%

77 ) ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்ய சராசரியாக____கியூபிக்.மீ, நீர்  தேவை?

அ)840
ஆ)1275
இ)1340
ஈ)1700

78.பொருத்துக(25°C) ஒலியின் வேகம்
1.எத்தனால்-1207
2.ஹைட்ரஜன்-1284
3.மெத்தனால்-1103
4.ஹீலியம்- 965

அ) 1432
ஆ)1324
இ)1243
ஈ)1234

79) அமைதியான நூலகத்தின் ஒலிசெறிவு(dB)?

அ)20
ஆ)30
இ)40
ஈ)50

80) அண்டத்தின் இருண்ட ஆற்றல்%?

அ) 27%
ஆ)52%
இ)68%
ஈ)83%

81) சூரியனின் ஈர்ப்பு விசை புவியை போல் எத்தனை மடங்கு?

அ)24
ஆ)26
இ)28
ஈ)30

82)சாக்கடலின் வளிமண்டல அழுத்தம்(kPa)?

அ)33.7
ஆ)101.3
இ)106.7
ஈ)105.4

83) எதிரொலியை கேட்கவேண்டுமாயின் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம்___இருக்க வேண்டும்?

அ)15
ஆ)17
இ)18
ஈ)25

84) கிராஃபைட் கார்பனின் மற்றொரு வடிவம் என கூறியவர்?

அ) ஆண்டனி லவாஷியர்
ஆ)கார்ல் ஷீலே
இ)ஸ்மித்சன் டென்னன்ட்
ஈ)அண்ட்ரே ஜெய்

85) ரெசின் குறியீடு உருவாக்கப்பட்ட ஆண்டு?

அ)1973
ஆ)1988
இ)1993
ஈ)1964

86) ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம்___ நானோ மீட்டர்?

அ)0.2
ஆ)2
இ)9.34
ஈ)1.7

87) மலேரியா நிவாரண மருந்தான பைரீமித்தமின் கண்டறியப்பட ஆண்டு?

அ)1956
ஆ)1961
இ)1984
ஈ)1995

88) மனித உடலின் நீரின் அளவு அறிய பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு?

அ) அயோடின் 131
ஆ) ஹைட்ரஜன் 3
இ) இரும்பு 59
ஈ) சோடியம் 24

89) உலக நீர் தினம்?

அ) மார்ச் 21
ஆ) மார்ச் 22
இ) மார்ச் 23
ஈ) மார்ச் 24

90.சூரிய கதிர்வீச்சு தாக்கதை குறைக்கும் களிம்பு பொருளில் காணப்படுவது?

அ)சிங்க் பாஸ்பேட்
ஆ) சிங்க் சல்போட்
இ) சிங்க் ஆக்சைடு
ஈ) டைட்டானியம் பாஸ்பேட்

91.ஹெபாரின் என்ற மருந்து எதன் மூலம் உருவாக்கப்படுகிறது?

அ) தாவரம்
ஆ) விலங்கு
இ) கனிமம்
ஈ) நுண்ணுயிரி

92.சரியானதை கண்டறிக
1)1% ஃபினால் கரைசல் கிருமி நாசினியா பயன்படுகிறது.
2)0.3 ஃபினால் கரைசல் புரைத்தடுப்பானாக பயன்படுகிறது.

அ)1 சரி
ஆ)2 சரி
இ) இரண்டுமே தவறு
ஈ) இரண்டுமே சரி

93.முதல் வணிகரீதியான நுண்ணுயிரி எதிர் பொருள் உருவாக்கப்பட்ட ஆண்டு?

 அ) 1927
ஆ)1932
இ)1946
ஈ)1954

94.கருவுறுதல் சம்மந்தமான
குறைப்பாடுகளை கண்டறிய பயன்படும்
கதிரியக்க ஐசோடோப்பு?

அ) அயோடின் 131
ஆ) சோடியம் 24
இ) இரும்பு 59
ஈ) கோபால்ட் 60

95.ஹென்னா என்ற இயற்கை சாயம் எந்த தாவரத்தின் இருந்து கிடைக்கிறது?

அ)தமிரண்டஸ் இண்டிகா
ஆ)யுபோர்பியோசி எம்பிலிக்கா
இ)லவ்சோனியா இன்ர்மிஸ்
ஈ)கர்குமா லங்கா

96.கீழ்க்கண்டவற்றுள் எது செயற்கை இனிப்பூட்டி?

அ)குர்குமியன்
ஆ)சைக்லமேட்
இ) மோனோ சோடியம் குளுட்டாமேட்
ஈ) கால்சியம் டை குளுட்டாமேட்

97."அதேசியா" என்பது எதனை குறிக்கும்?

அ)கள்ளிசெடி
ஆ) கருவேலமரம்
இ)எருக்கலை
ஈ) ஆகாய தாமரை

98.ஐ.யூ.சி.என் நிறுவனம்__நாட்டில் தொடங்கப்பட்டது?

அ) ஜெர்மனி
ஆ) சுவிட்சர்லாந்து
இ) அமெரிக்கா
ஈ) மெக்சிகோ

99.சரியானதை கண்டறிக
1. கொய்யா,விழுதிபழம்& மாம்பழம் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது?
2.சப்போட்டா பழ உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

அ) 1சரி
ஆ)2சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு

100. கிச்சன் கேபினட் என்பது?

A. தேர்ந்தெடுக்கப்படாத துறை சார்ந்த தலைவர்களைக் கொண்ட சிறு ஆலோசனை குழு
B. தேர்ந்தெடுக்கப்படாத துறை சார்ந்த செயலர்களைக் கொண்ட சிறு ஆலோசனை அமைப்பு
C. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைசார்ந்த செயலர் களைக் கொண்ட சிறு ஆலோசனை அமைப்பு
D. தேர்ந்தெடுக்கப்படாத துறை சார்ந்த அதிபர்களை கொண்ட சிறு ஆலோசனைக் குழு.

விடைகள் அறிய
Click here to view

Whatsapp ல் இணைந்திட
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY