TNPSC GK
போக்குவரத்து சாலைகளின் வகைகள் :
* மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும் .
* இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது .
* பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் ( PPP ) மொத்த சாலைத் திட்டங்களில் 20 % பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது , சாலைகளின் வகைகள் நீளம் ( கி . மி )
தேசிய நெடுஞ்சாலைகள் 14,994 .
மாநில நெடுஞ்சாலைகள் 57,291.
மாநகராட்சி மற்றும்
நகராட்சி சாலைகள் 23,350
ஊராட்சி ஒன்றிய சாலைகள் - 1,47,543.
கிராம பஞ்சாயத்து சாலைகள் 21,049 மற்றவை ( வனச் சாலைகள் ) 3,348. வணிகரீதியிலான சாலைகள் 1213.
( ஆதாரம் - 2017 தமிழ்நாடு புள்ளியியல் கையேடு )
இரயில்வே போக்குவரத்து
* தெற்கு இரயில்வே தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது . * தற்போது தெற்கு இரயில்வேயின் வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்பப் பகுதிகளான தமிழ்நாடு , கேரளா , புதுச்சேரி , கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளான தமிழ்நாடு , கேரளா , புதுச்சேரி , கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது .
* தமிழ்நாட்டின் மொத்த இருப்புப் பாதையின் நீளம் 6,693 கிலோ மீட்டர் ஆகும்.
* இம்மண்டலத்தில் 690 இரயில் நிலையங்கள் உள்ளன .
* இந்த இரயில்வே வலைப்பின்னல் அமைப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது .
சென்னை , கோயம்புத்தூர் , ஈரோடு , மதுரை , சேலம் , திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகியவை இம்மாநிலத்தில் உள்ள முக்கிய இரயில் சந்திப்புகள் ஆகும் .
* சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன , தற்பொழுது மெட்ரோ இரயில்வே அமைப்பு , மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன் இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது .
வான்வழி போக்குவரத்து
* தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன .
CHENNAI AIRPORT
சென்னை சர்வதேச விமான நிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது .
கோயம்புத்தூர் , மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமானநிலையங்கள் ஆகும் .
தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகும் . இவை நாட்டின் பல பகுதிகளை இணைக்கின்றன .
தொழில்துறையின் அதீத வளர்ச்சியானது , பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத் துகளை அதிகரித்துள்ளது.
இது ஆண்டிற்கு 18 சதவீதத்திற்கும் அதிகமான விமான போக்குவரத்து வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44 - ஐ உடையதாகும் இது ஒசூரிலிருந்து தர்மபுரி , சேலம் , கரூர் , திண்டுக்கல் , மதுரை , திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் - 785 - ஐக் கொண்டதாகும் .
இது மதுரையிலிருந்து நத்தம் வரை செல்கிறது . இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும் .
நீர்வழி போக்குவரத்து
சென்னை , எண்ணார் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும் . நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகம் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் உள்ளன .
துறைமுகங்கள் ஏறத்தாழ 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை ஆண்டுதோறும் கையாளுகிறது
( இந்தியாவில் 24 சதவீத பங்கு ) .
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது .
சென்னை துறைமுகம் செயற்கைத் துறை முகமாகும் . இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் நாட்டின் துறைமுகங்களில் இரண்டாவது பெரிய துறைமுகமாகும் .
தற்பொழுது 4 இலட்சம் வாகனங்களைக் கையாளும் திறன் கொண்ட பிரத்தியேக முனையம் மேம்படுத்தப்பட்டுள்ளது .
இடைநிலை துறைமுகமான எண்ணார் சமீபத்தில் பெரிய துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு தமிழகத்தில் அதிக நிலக்கரி மற்றும் தாதுக்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது .
UNIT 9 - தமிழ்நாடு போக்குவரத்து குறித்த குறிப்புகள்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment