Ads Right Header

TNPSC & TET தமிழ் இலக்கணம் - ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்தும்...



புறப்பொருள்

புறப்பொருள் எனப்படுவது , வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி , செல்வம் , புகழ் வீரம் , அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது . அகப்பொருள் வாழ்வியல் எனில் , புறப்பொருள் உலகியல் ஆகும் . புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை.

புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும் .

1 . வெட்சித்திணை : பகைநாட்டின்மீது போர் தொடங்குமுன் , அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன் , தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது வெட்சித்திணை . அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிக் செல்வார்கள் .

2 . கரந்தைத் திணை : வெட்சி வீரர்களால் கவர்ந்துசெல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் கரந்தைப் பூவைச் சூடிச்சென்று மீட்பது , கரந்தைத்திணை .

3 . வஞ்சித்திணை : மண்னாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது , வஞ்சித்திணை .

4 . காஞ்சித்திணை : தன் நாட்டைக் வகப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைக் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை .

5 . நொச்சித்திணை : பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி , உள்ளிருந்தே , வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிய போரிட்டு , அம்மதிலைக் காப்பது நொச்சித்திணை .

6 . உழிஞைத்திணை : உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை .

7 . தும்பைத் திணை : பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு , தம் வீரர்களுடன் போரிடுவது தும்பைத் திணை . இவ்வீரர்கள் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவர் .

8 . வாகைத்திணை : வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது , வாகைத்திணை

9 . பாடாண்திணை : பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி , வீரம் , செல்வம் புகழ் , கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது , பாடாண்திணை . ( பாடு + ஆண் + திணை = பாடாண்திணை )

10 . பொதுவியல் திணை : வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் , அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது , பொதுவியல் திணை .

11 . கைக்கிளைத்திணை : கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் . இஃது ஆண்பால் கூற்று , பெண்பால் கூற்று என இருவகைப்படும் .

12 . பெருந்திணை : பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் . இதுவும் ஆண்பாற் கூற்று , பெண்பாற் கூற்று என இருவகைப்படும் .

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY