TNPSC GK
நாளந்தா பல்கலைக் கழகம்
பண்டைக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணிகள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர் . அவற்றுள் வாலாபியில் இருந்த ஹீனயான பல்கலைக்கழகமும் , நாளந்தாவிலிருந்த மகாயான பல்கலைக்கழகமும் குறிப்பிடத்தக்கவை.
நாளந்தா பல்கலைக் கழகம் பற்றி யுவான் சுவாங் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார் . ' நாளந்தா ' என்ற சொல்லுக்கு ' அறிவை அளிப்பவர் ' என்று பொருள் . குப்தர் காலத்தில் முதலாம் குமாரகுப்தரால் இது நிறுவப்பட்டது . அவருக்குப்பின்வந்த ஆட்சியாளர்களும் , ஹர்ஷரும் அதனை ஆதரித்தனர் .
பல்கலைக்கழகப் பேரரசிரியர்கள் பண்டிதர்கள் என்று அழைக்கப்பட்டனர் . திங்கநாகர் , தர்மபாலர் , ஸ்திரமதி , சிலபத்திரர் போன்றவர்கள் ஒரு சில புகழ்மிக்க பண்டிதர்கள்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் . மாணவர்கள் தங்கிப் படிக்கும் உள்ளிருப்பு பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியது .
உணவும் , இருப்பிடமும் இலவசமாக வழங்கப்பட்டன . நூறு முதல் இருநூறு கிராமங்களிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு அது பராமரிக்கப்பட்டது . அது ஒரு மகாயான பல்கலைக்கழகம் என்ற போதிலும் , வேதங்கள் , ஹீனயானக் கோட்பாடு , சாங்கிய மற்றும் யோக தத்துவங்கள் போன்றவையும் போதிக்கப்பட்டன .
இதை தவிர , பொதுவான பாடங்களான , தர்க்கம் , இலக்கணம் , வான இயல் , மருத்துவம் , கலை போன்றவையும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தன . நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கப்பட்டனர் . நுழைவுத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்தது.
மொத்த மாணாக்களில் முப்பது சதவிகிதம்பேரே அதில் வெற்றி பெற முடிந்தது . விரிவுரைகளைத்தவிர , விவாதங்களும் நடைபெற்றன . வடமொழியே பயிற்றுமொழியாக விளங்கியது . நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன .
சீனப் பயணிகள் விவரித்துள்ள அந்த நிறுவனத்தின் பொலிவினை அவை உறுதிப்படுத்துவதாக உள்ளன . ஏராளமான வகுப்பறைகளும் , மாணவர் விடுதியும் இருந்துள்ளன . சீனப் பயணியான இட்சிங் என்பவரது கூற்றுப்படி அங்கு மூன்றாயிரம் மாணவர் தங்கிப்படித்தனர் . கோளரங்கம் மற்றும் மிகப்பெரிய நூலகம் மூன்று கட்டிடங்களில் செயல்பட்டன .
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்வி பயில்வதற்குத் திரண்டனர் என்பதிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்வி பயில்வதற்குத் திரண்டனர் என்பதிலிருந்தே அதன் பெருமை விளங்குகிறது . உயர்கல்வி நிறுவனமாகவும் ஆய்வு நிறுவனமாகவும் அது விளங்கியது .
Whatsapp ல் இணைந்திட
Click here to join tnkural.com
நாளந்தா பல்கலைக்கழகம்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment