TNPSC MATERIAL
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்
1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்ற காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களில் வ.உ.சிதம்பரம்பிள்ளை , சுப்ரமணிய சிவா , சுப்ரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் .
1907 மே திங்களில் பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சத்திரபால் என்பவரை சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தார் .
1907 ஆம் ஆண்டு சூரத் பிளவுக்குப் பிறகு வ.உசியும் சுப்ரமணிய பாரதி மற்ற தேசியவாதிகளும் இணைந்து சென்னை ஜன சங்கத்தை தோற்றுவித்தனர் .
சுப்ரமணியபாரதி சிறந்த முற்போக்குவாதியாகவும் , பழமைவாதத்தை சாடுபவராகவும் , புரட்சிகரமான அரசியல் சமூக சிந்தனைகளைக் கொண்டவராகவும் விளங்கினார் .
அவர் ' இந்தியா ' என்ற தமிழ்வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார் . ' சுதேசி கீதங்கள் ' என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை அவர் எழுதினார் . வ.உசிதம்பரம் பிள்ளை ஒரு வழக்குரைஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார்.
1905 ல் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார் . பால கங்காதர திலகரின் சீடராக அவர் திகழ்ந்தார் . 1908 ல் தூத்துக்குடியில் நடைபெற்ற பவழ ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார் .
1906 ல் தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை நிறுவினர் . எனவே , ' கப்பலோட்டிய தமிழன் ' என்று அவர் அழைக்கப்பட்டார் . சுதேசி நீராவிக்கப்பல் கழகத்திற்கும் பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்திற்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.
பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்தை புறக்கணிக்குமாறு வ.உ.சி பிரச்சாரம் செய்தார் . இதனால் 1908 மார்ச் திங்களில் திருநெல்வேலி கலகம் நடைபெற்றது . இவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர் சுப்ரமணிய சிவா .
இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர் . ஆறு ஆண்டு காலம் கடும் சிறைவாசத்தை இருவரும் அனுபவித்தனர் . சிறைக்குள் அவர்கள் கடுமையான தண்டனைகளுக்குட்படுத்தப்பட்டனர் . செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளானதால் , வ.உசி . ' செக்கிழுத்தச் செம்மல் ' என்று அழைக்கப்பட்டார் .
தேசியத் தலைவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டனர். சிறைக்குள் சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சுதேசி கப்பல் கழகத்தின் சிதைவு போன்ற காரணங்களால் சினந்தெழுந்த சிலர் பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பை ஏற்படுத்தினர் . இதில் , நீலகண்ட பிரம்மச்சாரியின் பங்கு மகத்தானதாகும் .
இச்சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜூன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி.ஆஷ் . என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார் .
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment