TNPSC POLITY
மனித உரிமைகள் என்றால் என்ன ?
ஐ . நா . சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது . " இன , பாலின , தேசிய , இனக்குழு , மொழி , மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும் . எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது .
மனித உரிமை நாள்
ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் 10ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை ( UDHR )
வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறுபகுதிகளிலிருந்து , கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவியமனித உரிமைகள் பேரறிக்கை
( Universal Declaration of Human Rights ) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும் .
1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ . நா . பொது சபையில் நிறைவேற்றப்பட்ட ( பொது சபை தீர்மானம் 217A ) இந்தப் பேரறிக்கை , அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும் .
அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது . மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் ( articles ) உள்ளன .
அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை , அரசியல் , சமூக , பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது . இவ்வுரிமைகள் இனம் , பால் , தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும் . ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் , சம உரிமையோடும் பிறக்கின்றனர் .
இந்திய மனித உரிமைகள் ஆணையம்
( National Human Rights Commission )
NATIONAL HUMAN RIGHTS COMMISSION
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம் . இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும் .
இவ்வமைப்பு ஒரு தலைவரையும் , சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு , சுதந்திரம் , சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் , மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது .
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் :
மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல் , மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல் .
மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல் .
சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல் .
மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல் .
மாநில மனித உரிமைகள் ஆணையம்
( State Human Rights Commission )
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21 , மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் , 1993ல் உள்ளது .
மனித உரிமைகள் பாதுகாப்பு
மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும் .
மேலதிகமாக , எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும்கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும் , மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்று விதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது .
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்
மாநிலபட்டியல் , பொதுப்பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல் .
இதன் நோக்கங்களும் பணிகளும் தேசிய போன்றே உள்ளன . ஆனால் மாநில எல்லைக்குட்பட்டதாகும் .
இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர் . இவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு .
எனவே , தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம் .
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரைகளும் செய்யலாம் .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
Click here to view pdf
⚓TELEGRAM
click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
மனித உரிமைகள் குறித்த முழு விளக்கம்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment