Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் (02/05/2020)


1) தமிழக பொது சுகாதார துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A) குழந்தைசாமி
B) செல்வவிநாயகம்✓
C) கோமதி விநாயகம்
D) பாலசுப்பிரமணியன்

2) உலகிலேயே அதிகம் பேர் பார்த்த டிவி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ள தொடர் எது?

A) ராமாயணம்✓
B) சக்திமான்
C) டேலண்ட்
D) இந்தியா

3) எந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ஜிங்கிவிர்-எச் என்ற ஆயுர்வேத மாத்திரையை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பயன்படுத்தி சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது?

A) பதஞ்சலி
B) மேன் கைன்ட் பார்மா
C) சன் பார்மா
D) பங்கஜ கஸ்தூரி✓

4) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி எத்தனையாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது?

A) 2
B) 3✓
C) 4
D) 5

5) மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?

A) ராகுல் சிங்
B) ப்ரீத்தி குரானா
C) தருன் பஜாஜ்✓
D) அய்யூப் ராணா

6) சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A) ராதாகிருஷ்ணன்✓
B) குழந்தைசாமி
C) அதுல்ய மிஸ்ரா
D) சுகன் தீப் சிங்

7) கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் எத்தனை மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியுள்ளது?

A) 284
B) 319
C) 130✓
D) 150

8) சமீபத்தில் ஜப்பானின் ஆர்டர் ஆஃப் ரைசிங் சன் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது

A) சுசி யாகி
B) தங்ஜம் தபாலி சிங்✓
C) அஸ்வினி குமார்
D) மேரி கோம்

9) சுகாதர ஊழியர்களுக்காக #we will win என்ற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ள விளையாட்டு அமைப்பு எது?

A) ICC
B) NBA
C) UEFA
D) FIFA✓

10) கோவிட்-19 நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக karmi-bot என்ற ரோபோவை பயன்படுத்தும் மாநிலம் எது?

A) மேற்கு வங்கம்
B) கேரளா✓
C) பஞ்சாப்
D) ஆந்திரா

சர்வதேச நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை: பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து WHO விளக்கம்.

 கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோசித்த பிறகு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு WHO விளக்கம் அளித்துள்ளது.

அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள ரஷ்யா.

ரஷ்யாவின் ஆபத்தான அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணை கடலோரத்தில் உள்ளது. என்றும் கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு போர் வெடித்தால் கடைசி முயற்சியாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.

செயல்படுத்தப்பட்டதும், ஸ்கிஃப் ஏவுகணை 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இது 60-மைல் வேகத்தில் பயணிக்க கூடியது.

நியூயார்க்கில் நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது

கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையில், நியூயார்க் மாகணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இந்தக் கல்வியாண்டு முழுவதும் மூடப்பட்டு இருக்கும் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரூ க்யூமோ அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம்: அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி.

கொரோனா நோய் நடவடிக்கைகள் இந்தியா தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளது அமெரிக்கா பாராட்டு.



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY