Ads Right Header

எண்ணங்கள் உயர்வாக்கும்!



விடா முயற்சி

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து,தோல்வியடைந்த நேரத்தில் ஆப்ரஹாம் லிங்கன் ஒரு
பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்ததும் "உங்களில் யார் சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்படுகிறார்கள் " என்று பாதிரியார் எல்லாரையும் பார்த்துக் கேட்டார்.எல்லாரும் கையைத் தூக்க லிங்கன் மட்டும் கையைத் தூக்காமல் அமைதியாக நின்றார்.

அவரைப் பார்த்து பாதிரியார்
" ஆப்ரஹாம்! நீ எங்கே போக ஆசைப்படுகிறாய்?".கேட்டார்.அதற்கு லிங்கன் " அவர்கள் சொர்க்கத்திற்கு போகட்டும்,நான் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு போகிறேன்",என்று  தோல்வியடைந்த மன நிலையிலும் உறுதியான குரலில் சொன்னார்.அதைக் கேட்ட பாதிரியார், " கண்டிப்பாக உன் ஆசை நிறைவேறும்" என வாழ்த்தினார்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாகவே மாறுவாய்"

நான் என்னுடைய மாணவர்களிடம் எப்போதும் சொல்வேன்,"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதை அடிக்கடி மனதளவில் கற்பனை செய்து பார்.இன்று உலகில் உள்ள எல்லாமே என்றோ ஒருவரின் கற்பனையில் உருவானது தான்.கற்பனைக்கு அவ்வளவு மகா சக்தி உண்டு. எப்போதும் அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.நீ கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உன்னை மனதளவில் கலெக்டர் ஆக முதலில் நினைக்க வேண்டும்.
கடவுள் உன் முன்னே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் கூட " நான் கலெக்டர் ஆக வேண்டும்"என்று சற்றும் யோசிக்காமல் சொன்னால் , நீ அதை பற்றி மட்டுமே எப்போதும் யோசித்து முன்னேறுகிறாய் என்று அர்த்தம்.

போட்டித் தேர்வில் இறுதி நிலையில் இருக்கும் interview வில் நீங்கள் என்ன டிரஸ் போட்டு போவீர்கள் என்று அடிக்கடி கற்பனை செய்யுங்கள்.
நீங்கள் வெற்றி பெற்ற பிறகு இந்த ஊர் உங்களை எப்படி கொண்டாடும் என்று கற்பனை செய்யுங்கள்.அதுவே உங்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும்.
இதற்கு பெயர் பேராசை அல்ல பெரிய ஆசை.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொல்வார்கள், என்னை பொறுத்த வரை, ஆசை துன்பத்திற்கு காரணம் அல்ல,ஆசை மட்டுமே படுவதுதான் துன்பத்திற்கு காரணம்.
ஆசைக்கு ஏற்ப உழைப்பும் அவசியம்.

"FOLLOW YOUR EFFORTS,NOT JUST PASSION"

 ஒரு முறை அதிமுக தேர்தலில் படு தோல்வி அடைந்தது,அவ்வளவுதான் இனிமேல் ஜெயலலிதா வின் அரசியல் எதிர்காலம் முடிந்து விட்டது என்று எதிரிகள் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்.
அந்த படுதோல்வியிலும் ஜெயலலிதா அவர்கள் மனம் தளராமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் "என்னுடைய மிகப் பெரிய வெற்றிகள் இனிமேல் தான் இருக்கின்றன" என்று தைரியமாக சொன்னார்.அதே போல் வென்றும் காட்டினார்.
அதே போல் நீங்களும் இனிமேல் சத்தமாக சொல்லுங்கள்
"என்னுடைய மிகப் பெரிய வெற்றிகள் இனிமேல் தான் இருக்கின்றன".

போட்டித் தேர்வுகள் எழுதும் அனைவரையும் பார்த்து இந்த ஊர் கேட்கும் கேள்வி " என்னப்பா இன்னுமா பாஸ் ஆகல...?"
இந்த கேள்வியை கேட்கும் பெரும்பாலான நபர்களுக்கு கண்டிப்பாக இந்த தேர்வுகளை பற்றிய அறிவு கொஞ்சம் கூட இருக்காது.

இது ஒரு பரமபத விளையாட்டு.
வெற்றியை நெருங்கும்போது கூட பாம்பு கொத்தி விடும்.அதையும் பொறுத்துக் கொண்டு மறுபடியும் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டித்தான் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.

வித்தை தெரியாதவர்கள் தான் விமர்சனம் செய்வார்கள்.அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இன்று ஊரெல்லாம் சொல்லாக இருக்கும் ,நாளை நீங்கள் ஜெயித்தால் ஊரெல்லாம் பல்லாக இருக்கும் என்றும் வாலி சொல்லுவார்.இது தான் உண்மை.
களத்தில் இறங்காமலே கருத்து சொல்பவர்களை பார்த்து கலங்காமல் இருங்கள்.
எதையும் செய்யாமல் துருப்பிடித்து போகிற துயரத்தை விட தேய்மானம் கவுரவ மானது.( பாலகிருஷ்ணன் IAS அவர்கள் ஒருமுறை எங்களிடம் கூறியது)

IF YOU REST,YOU RUST

களத்திற்கு போய் கத்தியை தீட்டி கொண்டு இருக்க முடியாது.இப்போது இருந்தே நன்றாக படித்தால் தேர்வு வரும்போது பயமில்லாமல் இருக்கலாம்.

நன்றி
ஹரி பிரசாத் முருகன்
கசவனம்பட்டி கிராமம்
திண்டுக்கல் மாவட்டம்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY