TNPSC TAMIL
மோனை, எதுகை, இயைபு, முரண்
மோனைத் தொகை:
முதல் எழுத்து ஒன்றிவர தொடுப்பது மோனை எனப்படும். ஓர் அடியில் உள்ள சீர்களில் முதலெழுத்து ஒன்றிவர தொடுப்பது சீர் மோனை எனப்படும்.
இரண்டு அடிகளில் முதல் சீர் முதலெழுத்து ஒன்றிவர தொடுப்பது அடிமோனை எனப்படும்.
எ.கா
கற்க கசடற கற்பவை கற்றபின் - இவ்வடிகளில் நான்கு சீரிலும் முதலெழுத்து ஒன்றி வர தொடுப்பதால் இது சீர்மோனை எனப்படும்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை - இக்குறளில் உள்ள இரண்டு அடிகளிலும் முதற் சீரில் செல்வத்துள், செல்வத்துள் என முதலெழுத்து ஒன்றி வர தொடுப்பதால் இது அடிமோனை எனப்படும்,
சீர் மோனை.
சீர் மோனை 7 வகைப்படும்.
1,2 சீர் - இணை மோனை
1,3 சீர் - பொழிப்பு மோனை
1,4 சீர் - ஒருஉ மோனை
1,2,3 சீர் - கூழை மோனை
1,3,4 சீர் - மேற்கதுவாய் மோனை
1,2,4 சீர் - கீழ்கதுவாய் மோனை
1,2,3,4 சீர் - முற்று மோனை
எ.கா:
இணை மோனை (1,2) - கமழக் கமழத் தமிழிசை பாடினாய்
பொழிப்பு மோனை (1,3) - நண்பாற்ற ராகி நயமில் செய்தார்க்கு
ஒரூஉ மோனை (1,4) - அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அதின்றேல்
கூழை மோனை (1,2,3) - எண்புதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
மேற்கதுவாய் மோனை (1,3,4) - பாவை விளக்கும் பலவுடன் பாப்புமின்
கீழ்கதுவாய் மோனை (1,2,4) - அலர்மதி அணைய திருநுதல் அரிவை
முற்று மோனை (1,2,3,4) - கண்ணும் கருத்துமாய் கலைகள் காத்தனர்
எதுகை தொடை:
முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை எனப்படும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது சீர் எதுகை எனப்படும்.
எ.கா:
துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாய - சீர் எதுகை
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - அடி எதுகை
சீர் எதுகை :
சீர் எதுகை 7 வகைப்படும்.
1,2 சீர் - இணை எதுகை
1,3 சீர் - பொழிப்பு எதுகை
1,4 சீர் - ஒருஉ எதுகை
1,2,3 சீர் - கூழை எதுகை
1,3,4 சீர் - மேற்கதுவாய் எதுகை
1,2,4 சீர் - கீழ்கதுவாய் எதுகை
1,2,3,4 சீர் - முற்று எதுகை
இணை எதுகை (1,2) - கற்றாறைக் கற்றது உணராத் என மதியார்
பொழிப்பு எதுகை (1,3) - கற்கை நன்றே கற்கை நன்றே
ஒரூஉ எதுகை (1,4) - ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
கூழை எதுகை (1,2,3) - நன்னிறு மென்முகை மின்னிடை வருத்தி
மேற்கதுவாய் எதுகை (1,3,4) - என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னிசை
கீழ்கதுவாய் எதுகை (1,2,4) - இன்மையுள் இன்மை விருந்தோரால் வன்மையுள்
முற்று எதுகை (1,2,3,4) - துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பாய
இயைபுத் தொடை:
செய்யுளில் அடிகளிலும் சீர்களிலும் இறுதி எழுத்தோ அசையோ, சீரோ, ஒன்றிவருவது இயைபுத் தொடை எனப்படும்.
எ.கா:
வாழிய தேவர் பிரான்,
எங்கும் நிற்கும் பிரான் - அடி இயைபு
பழமணல் மாற்றுமின் புதுமணல் புகுத்துமின் - சீர் இயைபுத் தொடை
இணைஇயைபு (1,2) - மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே
பொழிப்பு இயைபு (1,3) - மற்றதன் அயலே முத்துறழ் மணலே
ஒருஉ இயைபு (1,4) - நிழலே இனியதன் அயலது கடலே
கூழை இயைபு (1,2,3) - 'மாதர் நகிலே வல்லே இயலே'
மேற்கதுவாய் இயைபு (1,3,4) - வில்லே நுதலே வேற்கண் கயலே
கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4) - பல்லே தவளம் பாலே சொல்லே
முற்று இயைபு (1,2,3,4) - புயலே குழலே மயிலே இயலே
முரண் தொடை
அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.
எடுத்துக்காட்டு :
செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்...
இதில் சொல் முரண் ( செம்மை, கருமை) அமைந்துள்ளதைக் காண்க.
இணை முரண் (1,2) - ‘சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு'
முதலாம் இரண்டாம் சீர்களில் 'சிறுமை' 'பெருமை' என்ற முரண் சொற்கள் இடம் பெறுகின்றன.
பொழிப்பு முரண் (1,3) - 'சுருங்கிய நுசுப்பில் பெருகுவடம் தாங்கி'
முதல்சீரின் சொல்லும் மூன்றாம் சீரின் சொல்லும் தம்முள் முரணிச் சுருங்கல், பெருகல் என வருமாற்றைக் காண்கின்றோம்.
ஒரூஉ முரண் (1,4) - 'குவிந்துசுணங்கு அரும்பிய கொங்கை விரிந்து'
முதலாம் சீரில் 'குவிந்து' என்ற சொல்லும் நான்காம் சீரில் 'குவிந்து' என்பதற்கு மாறான-முரண்பட்ட விரிந்து என்ற சொல்லும் பயில்கின்றன.
கூழை முரண் (1,2,3) - 'சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்'
முதல் மூன்றில் (1,2,3 ஆம் சீர்களில்) முறையே 'சிறிய' 'பெரிய' என்ற சொற்களும் "நிகர்' என்ற ஒப்புப் பொருளமைந்த சொல்லும் வந்து தம்முள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதைக் காண்கின்றோம்.
மேற்கதுவாய் முரண் (1,3,4) – 'வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்'
முதல் சீரில் வெண்மை எனும் பண்பைக் குறித்த வெள்' என்னும் சொல் இடம் பெறுகின்றது; மூன்றாம் சீரில் செம்மையைக் குறிக்கும் 'சேய்' என்னும் சொல் காணப்படுகின்றது; நான்காம் சீரில் கருமை என்னும் சொல் வந்துள்ளது. இம்மூன்று சொல்லும் தம்முள் பொருளால் முரணுவன.
கீழ்க்க துவாய் முரண் (1,2,4) - 'இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்'
மூன்றாம் சீர் தவிர்ந்த ஏனைய ஒன்று இரண்டு நான்காம் சீர்களில் பொருள்முரண் அமைந்துள்ளது.
முற்று இயைபு (1,2,3,4) - 'துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாது'
முதல்சீரில் உள்ளது 'துவர்' எனும் சொல். இது, துவர்ப்புச் சுவை என்னும்
குளது, இரண்டாம்சீரில் உள்ளது 'தீம்' எனும் சொல். இது, இனிப்பு என்னும்
என்னும் பொருளில் வருவதாம். நான்காம் சீரில் உள்ளது 'முனி' எனும் சொல். இது, வெறுப்பு என்னும் பொருளைப் பயப்பது. இந்நான்கு சொல்லும் ஒன்றுக்கொன்று முரண்பட்டனவாதல் காணலாம்.
வாக்கிய வகை அறிதல்
செய்வினை வாக்கியம்:
எழுவாய், செயப்படும் பொருள் என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். மறைந்தும் வரலாம்.
எ.கா :
ஆசிரயர் இலக்கணம் கற்பித்தார் - இதில் ஐ (இலக்கணத்தை கற்பித்தார்) மறைந்து வந்துள்ளது.
தச்சன் நாற்காலியைச் செய்தான்
செயப்பாட்டு வினை வாக்கியம்;
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைய வேண்டும். எழுவாயோடு 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு படு, பட்டது என்ற துணை வினைகளைச் சேர்க்க வேண்டும்.
எ.கா:
இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது.
தொடர் வாக்கியம்:
ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும். ஒரு எழுவாய் பல வினை எச்சங்களைக் கொண்டு ஒரு வினைமுற்றைக் கொண்டு முடியும். தகுந்த இணைப்புச் சொல் கொண்டு வரும்.
எ.கா:
ஔவையார் அதிகமானிடம் சென்றார், அவன் தந்த உணவை உண்டார். களைப்பு நீங்கினார், அவனை வாழ்த்தினார். இதில் ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
கலவை வாக்கியம்:
ஒரு முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பலவார் வாக்கியங்கள் இணைந்து விடுவது கலவை வாக்கியம்
எ.கா:
நீ தமிழில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்மக்களே! பெண்ணினத்திற்கு மதிப்பு கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; அதுவே நாகரிகம் என திரு.வி.க கூறினார்.
தன்வினை வாக்கியம்:
கருத்தால் தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை வாக்கியம்.
எ.கா:|
நான் பாடம் படித்தேன்
அரசன் ஆணையிட்டான்
பிறவினை வாக்கியம்:
கருத்தால் பிறரைக் கொண்டு தொழிலைச் செய்வது பிறவினை எனப்படும். பிறவினையாகும் போது,
1. மெல்லினம் வல்லினமாகும்
2 - வல்லினம் இரட்டும்.
3. வி, பி, கு, சு, டு, து, பு, று விகுதிகளில் ஒன்றைப் பெற்று வரும்.
எ.கா:
தன்வினை பிறவினை
திருந்தினான் திருத்தினான்
தீ எரிந்தது தீ எரித்தது
பயிற்றினான் பயின்றான்
செய்தி வாக்கியம்;
ஒரு செய்தியைத் தெரிவிப்பதாக அமையும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்.
எ.கா
திருமாலை வணங்கும் நெறி வைணவமாகும்.
முதலமைச்சர் கோட்டையில் கொடியேற்றினார்.
வினா வாக்கியம்:
வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம் எனப்படும். சொல்லுக்கு முதலில் எ, யா என்னும் எழுத்துக்களைப் பெற்று வரும்.
எ.கா:
எவன் இதைச் செய்தான். அல்லது யார் இதைச் செய்தது.
சொல்லுக்கு ஈற்றல் ஆ. ஓ என்னும் எழுத்துக்களைப் பெற்று வரும்.
எ.கா :
இதைச் செய்தவன் அவனா? அல்லது இதைச் செய்தவன் அவனோ?
விழைவு வாக்கியம்:
கட்டளை வேண்டுகொள், வாழ்த்து வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும்.
எ.கா:
தமிழை முறையாகப் படி
தீயன் ஒழிக
உணர்ச்சி வாக்கியம்:
உவகை, அச்சம், அவலம், வியப்பு முதலிய உணர்ச்சிகளை விளக்கும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.
எ.கா
ஐயோ! அப்பா அடிப்பாரே! - அச்சம்
என்னெ தமிழின் இனிமை - உவகை
உடன்பாட்டு வாக்கியம்:
ஒரு செயலில் உடன்பாடு தெரிவது
எ.கா:
வயலில் மாடுகள் மேய்ந்தன.
நான் கொடுப்பேன்.
எதிர்மறை வாக்கியம்:
செயல் நிகழாமையைக் குறிப்பது.
எ.கா:
வயலில் மாடுகள் மேய்ந்தன
பொய்மை வெல்லாது.
தமிழ் இலக்கணம் அறிவோம்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment