TNPSC GK
தரெய்ன் போர் ( 1191 - 1192 )
அச்சத்தை எதிர் கொண்டிருந்த வடஇந்தியாவின் இந்து அரசர்கள் பிருதிவிராஜ் சௌகான் தலைமையில் ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தினர் .
கி . பி . 1191ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகன் முகமது கோரியை முறியடித்தார் . இத்தோல்வியினால் , முகமது கோரிதமக்குதலைகுனிவு ஏற்பட்டதாகக் கருதினார் .
எனவே , தகுந்த பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர் கொண்ட பெரும்படையைத் திரட்டினார் . அப்படையுடன் முகமது கோரி பெஷாவர் முல்தான் வழியாக லாகூரையடைந்தார் .
தமது மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும்படியும் இஸ்லாமிய சமயத்திற்கு மாறிவிடும்படியும் பிருதிவிராஜனுக்கு பிருதிவிராஜ் சௌகான் தூது அனுப்பினார் . ஆனால் , இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த பிருதிவிராஜ் சௌகன் மீண்டும் படையெடுப்பாளரை எதிர்கொள்ள முடிவு செய்தார் . மூன்று லட்சம் குதிரைகள் , மூன்றாயிரம் யானைகள் , ஏராளமான காலாட்படை வீரர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினார் .
பல இந்து அரசர்களும் , சிற்றரசர்களும் அவருடன் இணைந்தனர் . 1192 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தரைய்ன் போரில் முகமது கோரி பிருதிவிராஜனை இறுதியாக முறியடித்து , கைப்பற்றிக் கொன்றார் . 12
இரண்டாவது தரெய்ன் போர் ஒரு தெளிவான முடிவைக் கொடுத்த போராகும் . ரஜபுத்திரர்களுக்கு அது மாபெரும் தோல்வியைக் கொடுத்தது . அவர்களது அரசியல் செல்வாக்கு சரிந்தது . சௌகன்களின் அரசு படையெடுப்பாளரின் காலடியில் கிடந்தது . இவ்வாறு இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசு ஆஜ்மீரில் நிறுவப்பட்டது .
இந்தியாவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது . தரெய்ன் போரில் பெற்ற மாபெரும் வெற்றியைச் சுமந்து , முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார் . இந்தியாவில் வெற்றிகொண்ட பகுதிகளை படைத்தளபதி குத்புதீன் ஐபக்வசம் விட்டுச் சென்றார் . டெல்லி , மீரட் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட ஐபக் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டார் .
1193 ஆம் ஆண்டு கோரி முகமதுவின் அடுத்த படையெடுப்புக்கான ஆயத்தங்களையும் செய்து கொடுத்தார் . இப்படையெடுப்பு காதவாலா அரசின் ஆட்சியாளர் ஜெயச்சந்திரனுக்கு எதிரானதாகும் . முகமது , ஜெயச்சந்திரனின் படைகளை தவிடுபொடியாக்கினார் . சந்தாவர் போருக்குப் பிறகு முஸ்லீம்கள் கனோஜ் நாட்டைக் கைப்பற்றினர் .
தரெய்ன் போரும் , சந்தாவர் போரும் இந்தியாவில் துருக்கியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழிவகுத்தன .
இந்து அரசுகளின்
தோல்விக்கான காரணங்கள்
இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்களை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தல் வேண்டும் . அவர்களுக்கிடையே ஒற்றுமையில்லாததே தோல்விக்கு அடிப்படைக் காரணமாகும் . பல அணிகளாக அவர்கள் பிரிந்து கிடந்தனர்
தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருந்த ரஜபுத்திரர்கள் வலுமையிழந்து காணப்பட்டனர் . இரண்டாவதாக , பல இந்து அரசுகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன . அவர்களது ராணுவ முறைகள் மிகவும் பழமையானவை . முஸ்லீம்களின் படைகளைவிட தரத்தில் குறைந்தவை .
இந்தியர்கள் யானைகளையே பெரிதும் நம்பியிருந்தனர் . ஆனால் முஸ்லீம்கள் விரைவாகச் செல்லக்கூடிய குதிரைப்படைகளைக் கொண்டிருந்தனர் முஸ்லீம் வீரர்கள் திறமையிலும் அமைப்பு ரீதியிலும் உயர்வாகவே காணப்பட்டனர் .
அவர்களுக்கிருந்த சமய உணர்வும் , இந்தியச் செல்வத்தின்மீது கொண்டிருந்த ஆசையும் அவர்களுக்கு பெருத்த உற்சாகம் அளிப்பதாக இருந்தன . இந்துக்களிடையே ஷத்திரியர்கள் என்ற ஒரு வகுப்பினர் மட்டுமே போரிடும் கடமையைப் பெற்றிருந்தனர் . மேலும் , இந்துக்கள் எப்போதும் தற்காப்புக்காகவே போரிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் . இது வலிமை குறைந்த நிலையின் வெளிப்பாடாகும் .
🥦🧚🏼♂️🥦🧚🏼♂️🥦🧚🏼♂️🥦🧚🏼♂️🥦🧚🏼♂️🥦🧚🏼♂️🥦🧚🏼♂️🥦🧚🏼♂️
🏂Whatsapp
Click here to join tnkural.com
⛷️Telegram

Previous article
Next article
Leave Comments
Post a Comment