Ads Right Header

Group 1&2 50 + 50 விடைகள்!



1.ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருளின் கன அளவு காண ______
தத்துவம் பயன்படுகிறது ?

A) வரைபடமுறை தத்துவம்
B) ஆர்க்கிமிடீஸ் தத்துவம்👍
C)அடர்த்தி,பருமன்&நிறை ஆகியவற்றின் தொடர்பு
D) பாஸ்கல் தத்துவம்

2.இரு மீட்டர் பக்க அளவு கொண்ட 10 சதுரங்களை கொண்ட பொருளொன்றின் பரப்பளவு ?

A) 10
B) 20
C) 30
D) 40🎠

3.கூற்று ; வரைபட முறையைக் கொண்டு, 
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் 
பரப்பளவினையும் காணமுடியும்.
காரணம் ;  சதுர மற்றும் 
செவ்வக வடிவ பொருள்களின் பரப்பளவினை
இம்முறையில் துல்லியமாகக் காண முடியும்.

A) கூற்று சரி காரணம் தவறு
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று சரி காரணம் கூற்றுகான விளக்கம் அன்று‌🎠
D) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம் ஆகும்

4.அடர்த்தியின் CGS அலகு யாது ?

A) கிகி/மீ^3
B) கிகி/செமீ^3
C) கி/செமீ^2
D) கி/செமீ^3🎠

5.பாதரசத்தின் அடர்த்தி ?

A) 10500 kg/m^3
B) 8900 kg/m^3
C) 13600 kg/m^3🎠
D) 19300 kg/m^3

6. I) ஒளி ஆண்டு என்பது ஒளியானது 
வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் 
தொலைவே ஆகும். (9.46×10^15)
II) ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் 
சூரியனுக்கும் இடையேயுள்ள
தொலைவு ஆகும்.(1.496×10^11)
III) ப்ராக்ஷிமா
சென்டாரி  நமது சூரிய 
குடும்பத்திலிருந்து (பூமியிலிருந்தும்) 422 ஒளி 
ஆண்டு தொலைவில் உள்ளது.
IV) பூமியானது 
அண்டத்தின் மையத்திலிருந்து 2500 ஒளி 
ஆண்டு தொலைவில் உள்ளது.

A) I & II சரி🎠
B) I & II & III சரி
C) I & III சரி
D) அனைத்தும் சரி

7.சரியானவற்றை தேர்ந்தெடு.
 I) பூனை -1.4 மீ/வி
 II) பயணிகள் விமானம்-180கிமீ/வி
 III) சைக்கிள்-  20-25கிமீ/வி
 IV) ராக்கெட் -  5200மீ/வி
 V) மனிதன்  - 14 மீ/வி

A) III&IV தவறு
B) I&IV தவறு
C) I&II&V தவறு🎠
D) அனைத்தும் தவறு

8.பேரண்டத்தில் காணப்படும் அணுக்களில்
_____ சதவீதம் ஹைட்ரஜன் அணுக்களாகும் ?

A) 74%🎠
B) 78%
C) 80%
D) 85%

9.பருப்பொருளின் நான்காம் நிலை எது ?

A) அணு
B) பிளாஸ்மா🎠
C) பனி
D) தனிமம்

10.இயற்கையில் கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை ?

A) 94🎠
B) 97
C) 24
D) 118

11.அறைவெப்பநிலையில் திரவ
நிலையில் காணப்படும் ஒரே அலோகம் எது ?

A) காலியம்
B) சல்பர்
C) புரோமின்🎠
D) பாதரசம்

12.தனிமங்களின்
குறியீடுகளை அத்தனிமங்களின் பெயர்களில்உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளைப்
பயன்படுத்தி உருவாக்கும் முறையைப்
பரிந்துரைத்தவர் ?

A) டால்டன்
B) பாஸ்கல்
C) லவாய்சியர்
D) பெர்சிலியஸ்🎠

13. கூற்று ; சேர்மங்களை இயற்பியல் முறையில்
பிரிக்க இயலாது
காரணம் ; ஏனெனில் இவற்றின் தனிமங்கள் வேதிப்பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.

A) கூற்று சரி காரணம் தவறு
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி🎠
D) கூற்று காரணம் இரண்டும் தவறு

14.மீத்தேனின் அணுக்கட்டு எண் ?

A) 12
B) 5🎠
C) 7
D) 6

15.பொருத்துக.
 பொட்டாசியம் -1)Hydrargyrum
 சோடியம் - 2)Kalium
 காரியம் - 3)Natrium
 மெர்குரி - 4)Plumbum

A) 4321
B) 1324
C) 2341🎠
D) 3142

16.தாம்சன் தன்னுடைய அணுக் கொள்கைகாக நோபல் பரிசு பெற்ற ஆண்டு ?

A) 1808
B) 1897
C) 1906🏆
D) 1908

17.I) ஒரேயொரு புரோட்டான்
இருந்தால் அத்தகைய அணு ஆக்ஸிஜன்
அணுவாகும். 
II) ஒரு அணுவின் உட்கருவினுள்
எட்டு புரோட்டான்கள் இருந்தால் அது ஹைட்ரஜன்
அணுவாகும்.

A) I & II தவறு🎠
B) I சரி
C) II சரி
D) I & II சரி

18. பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து
காணப்பட்டால் அதற்கு ____ என்று பெயர்?

A) மஞ்சரி🎠
B) ட்ரைடாக்ஸ்
C) கும்பன்ஸ்
D) புரோகும்பன்ஸ்

19.முருங்கை மரத்தினை, விதைகள் மூலமாகவும்,
______ மூலமாகவும் உருவாக்கலாம்?

A) சேர்த்து நடுதல்
B) கோர்த்து நடுதல்
C) போத்து நடுதல்🎠
D) தூவி நடுதல்

20.இலையின் மாற்றுருவான கொல்லிக்கு எ.கா?

A) ஸ்பைரோகைரா
B) கள்ளி
C) நெப்பந்தஸ்🎠
D) அவினிசியா

21.35 மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை ?

A) 10g
B) 20g
C) 15g
D) 25g🎠

22.தரைகீழ் ஓடு தண்டுக்கு எ.கா ?
A) அவினிசியா
B) காட்டு ஸ்ட்ராபெரி
C) கிரைசாந்திமம்🎠
D) வெங்காயத் தாமரை

23.தாவரங்களில் வேர்கள்
நிலமட்டத்திற்கு மேல்
தண்டிலோ, இலைகளிலோ 
காணப்படுவது ______ என அழைக்கப்படுகிறது?

A) பற்று வேர்கள்
B) மாற்றிட வேர்கள்🎠
C) முட்டு வேர்கள்
D) தூண் வேர்கள்

24.எந்த இலையின் நுனி பற்றுக் கம்பியாக 
மாறியுள்ளது ?

A) குளோரியோசா சூப்பர்பா🎠
B) பைசம் சட்டைவம்
C) அகேஷியா ஆரிகுலிபார்மிஸ்
D) நெப்பன்தஸ்

25. நாம் 80 சதவீதமான
உணர்வுகளைப் எதன் மூலமாகவே
உணர்கிறோம் ?

A) சுவை
B) பார்வை🎠
C) தோல்
D) மணம்

26.அனோரெக்ஸியா என்பது எந்நோயின் அறிகுறி ஆகும்  ?

A) டைப்பாய்டு
B) ரேபீஸ்
C) மஞ்சள் காமாலை🎠
D) தட்டம்மை

27.தோலில் சில
பகுதி அல்லது மெலனின்
நிறமி இழப்புகளால் ஏற்படும் நோய் எது ?

A) சல்மனே டைபி
B) லுகோடெர்மா🎠
C) அனோரெக்ஸியா
D) ஹைட்ரோபோபியா

28.உலகிலேயே முதன் முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து எது ?

A) ஆஸ்பிரின்
B) பென்சிலின்🎠
C) குளோரோபின்
D) மொட்டோபின்

29.சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தத ஆண்டு?

அ) 1898
ஆ)1921
இ) 1971🎠
ஈ)1975

30. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை உருவாக்கியவர்?

அ) மாவோ
ஆ)A.V.டைசி🎠
இ) அரிஸ்டாட்டில்
ஈ) ஆடம் ஸ்மித்

31. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு?

அ)50%🎠
ஆ)33%
இ)30%
ஈ) 48%

32.பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தல் விதி?

அ)14
ஆ)15
இ)16🎠
ஈ) 18

33.பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

அ) பிறப்பு,சாதி, இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிட்டும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்🎠

34)பொருத்துக:
a.விதி 14    1.பாகுபாட்டை தடை செய்கிறது
b.விதி 15    2.பொது வேலைவாய்ப்பில் c.அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தல்
d.விதி 16    3. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
e.விதி 17    4.பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது
f.விதி 18    5.தீண்டாமை ஒழித்தல்

அ)31254
ஆ)32154
இ) 31245
ஈ) 34125

35) ஒரு கட்சி நாடுகளில் வேறுபட்டவை?

அ) கியூபா
ஆ) நார்வே 🎠
இ) வடகொரியா
ஈ) சீனா

 36. கூற்றுகளை ஆராய்க.
1.மாநில சட்டமன்ற மொத்த தொகுதியில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்
2. மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

அ) 1 சரி, 2தவறு
ஆ) 1தவறு, 2சரி🎠
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு

 37)____ஆம் ஆண்டில் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னம்
ஒதுக்கப்படாத சின்னம் என இருவகை படுத்தப்பட்டது?

அ) 1968🎠
ஆ) 1986
இ) 1967
ஈ) 1988

 38) நாடுகளின் செல்வம் நூல் வெளியான ஆண்டு?

அ)1774
ஆ)1776🎠
இ)1789
ஈ)1786

 39) பொருத்துக:
  a)மக்களாட்சி           1.அரசின்     கொள்கைகளை விமர்சிப்பது
  b)தேர்தல் ஆணையம் 2.அரசாங்கத்தை அமைத்தது
 c)பெரும்பான்மை கட்சி 3.மக்களின் ஆட்சி
 d)எதிர்க்கட்சி 4.சுதந்திரமான நியாமான தேர்வு

 அ) 3412
 ஆ) 4312
 இ) 4231
  ஈ) 3421🎠

 40)  தேசிய கட்சிகள் அங்கீகாரங்களில் சரியானது?
1) மக்களவைத் தேர்தலில் அல்லது மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் 6% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்
2)ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்
3) இறுதியாக நடைபெற்ற தேர்தலில் குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்

அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி 🏅
இ) 1,2 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

 41) பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிலிருந்தும்
இயற்கை வளங்களை பிரித்தெடுப்பது?

அ) முதல் நிலை உற்பத்தி🏅
ஆ) இரண்டாம் நிலை உற்பத்தி
இ) மூன்றாம் நிலை உற்பத்தி
ஈ) நான்காம் நிலை உற்பத்தி

 42) மூன்றாம் நிலை உற்பத்தியில் வேறுபட்டவை?

அ) வங்கி துறை
ஆ)கட்டுமானத் துறை🏅
இ) போக்குவரத்து
ஈ) காப்பீடு

 43) பலகட்சி முறையில் வேறுபட்ட நாடு?

அ) பிரான்ஸ்
ஆ) பிரிட்டன்🏅
இ) ஸ்வீடன்
 ஈ)நார்வே

 44) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயது?

அ) 18
ஆ) 21
இ) 25🏅
 ஈ) 30

 45)இந்தியாவில் கட்சிகள் எத்தனை படிநிலைகளில் அமைந்துள்ளது?

அ)2
ஆ)3🏅
இ)4
ஈ) 5
46) பழமைவாத கட்சி  எந்த நாடு?

அ) பிரான்ஸ்
ஆ) பிரிட்டன்🏅
இ) அமெரிக்கா
ஈ) ஸ்வீடன்

 47) நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவை? 

அ) முதல் நிலை உற்பத்தி
ஆ) இரண்டாம் நிலை உற்பத்தி
இ) மூன்றாம் நிலை உற்பத்தி🏅
ஈ) நான்காம் நிலை உற்பத்தி

 48)பொருளியலின் தந்தை?

அ) ஆல்பர்ட் மார்ஷல்
ஆ) ஆடம் ஸ்மித்🎠
இ) ஜெ.எம்.கீன்ஸ்
ஈ) காரல் மார்க்ஸ்

49.ஒரு திண்மஅரைக்கோளத்தின் கன அளவு 29106 க. செ.மீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?

A.7
B.14
C.21🏅
D.42

50.இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகி்தம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகி்தம் காண்க.

A.4:√3
B.√2:3
C√2:√3
D.2:√3🏅

51.இரு  பெண்கள்  100  முட்டைகளைச்  சந்தைக்கு  விற்பனைக்கு  எடுத்துச்  செல்கின்றனர். இருவரிடமும் சம எண்ணிக்கையில் முட்டைகள் இல்லை எனினும் முட்டைகள் விற்ற தொகை சமம்  ஆகும்.  முதல்  பெண்,  “உனது  முட்டையை  நான்  விற்றிருந்தால்  நான் ‘15 சம்பாதித்திருப்பேன்”  என  இ்ரண்டாவது  பெண்ணிடம்  கூறினாள்.  அதற்கு  “உனது முட்டைகளை  நான்  விற்று  இருந்தால்₹ 6 2/3 ”  சம்பாதித்திருப்பேன்”  என  இ்ரண்டாவது  பெண் பதி்லளித்தாள்.  தொடக்கத்தில் இருவரிடமும் இருந்த முட்டைகளின் எணணிக்கை எவ்வளவு?

A.50,20
B.40,60🏅
C.20,30
D.55,15

52. 8x⁴y²,48x²y⁴ மீ.பொ.ம காண்க.

A.6x²y⁴
B.12x²y⁴
C.24x⁴y⁴
D.48x⁴y⁴🏅

53.ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கி்றார். 6 ஆண்டுகளில்  அவர் ₹7875-ஐச் சேமிக்கி்றார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?

A.2500
B.4000🏅
C.4700
D.5200

54.6 செ.மீ ஆரம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட ஓர் உருளை வடிவப் பாத்திரம் முழுவதும் பனிக்கூழ் (Ice-cream) உள்ளது. அந்தப் பனிக்கூழானது, கூம்பு மற்றும் அரைக்கோளம் இணைந்த வடிவத்தில்  நிரப்பப்படுகிறது. கூம்பின் உயரம் 9 செ.மீ மற்றும் ஆரம் 3 செ.மீ எனில, பாத்திரத்தில்  உள்ள பனிக்கூழை நிரப்ப எத்தனைக் கூம்புகள் தேவை?

A.6
B.14
C.12🏅
D.7

55. 1+2+3+.......+n=666 எனில் n ன் மதிப்பு காண்க.

A. 25
B. 36🏅
C. 216
D. 324

56. 396,504,636  ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.

A. 12🏅
B. 24
C. 36
D. 64

57. 17 அடி நீ்ளமுள்ள ஓர் ஏணி ஒரு சுவரின் மீது சாய்ந்துள்ளது.  தரை, ஏணி மற்றும் செங்குத்துச்சுவர் மூன்றும் ஒரு செங்கோண முக்கோணத்தை உருவாக்குகின்றன.  சுவரின் அடியிலிருந்து ஏணியின் அடி முனை வரை உள்ள தூரம் ஏணியின் மேல் முனை சுவரைத் தொடும் உயரத்தை விட 7 அடி குறைவு எனில், சுவரின உயரம் என்ன?

A.12 அடி
B.14 அடி
C.15 அடி🏅
D.21 அடி

58.704 ச. செ.மீ மொத்தப் புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 செ.மீ எனில், அதன் சாயுயரம் காண்க.

A. 15 செ.மீ
B.25 செ.மீ🏅
C.45 செ.மீ
D.64 செ.மீ

59)முஸ்லீம் மன்னர்களில் எந்த மன்னர் தான் வெளியிட்ட தங்கநாணயங்களில் பெண்தெய்வமான *லட்சுமியின்* உருவத்தை பதிப்பித்து வெளியிட்டார்? 

A)குத்புதீன் ஐபக் 
B)முகமது பின் துக்ளக் 
C) கோரி முகமது 🏅
D)முகமது பின் காசிம் 

60)"மதுரா விஜயம்" நூல் எந்த வம்சத்தை சார்ந்தது? 

A)பல்லவர்கள் 
B)பிற்காலச்சோழர்கள் 
C)விஜயநகர அரசு 🏅
D)ராஜபுத்திரர்கள் 

61)"தாரிக் இ பிரோஷாகி"நூலின் ஆசிரியர்? 

A)ஹாசன் நிசாமி 
B)ஜியா உத் பரணி 🏅
C)நிசாமுதீன் அகமத் 
D)முகமது பின் துக்ளக் 

62)"தாரிக் இ பெரிஷ்டா" என்ற நூல் எந்த வம்சத்தின் எழுச்சியை பற்றி கூறுகிறது? 

A)முகலாயர் 🏅
B)டெல்லி சுல்தானியம் 
C)ராஜபுத்திரர்கள் 
D)ஏதுமில்லை 

63)"தாரிக்"என்ற சொல்லின் பொருள்? 

A)வரலாறு 🏅
B)சுயசரிதை 
C)தலைமுறை 
D)தலைவர் 

64)வெனிஸ் நாட்டை சேர்ந்த மார்கோபோலோ *காயல்* துறைமுகத்திற்கு எத்தனை முறை வருகை புரிந்தார்? 

A)1
B)2🏅
C)3
D)4

65)டெல்லி பறந்து விரிந்த நேர்த்தியான நகரம் என்று கூறியவர்? 

A)மார்கோபோலோ 
B)நுனிஸ் 
C)இபின் பதுதா🏅
D)நிக்கோலோ கோண்டி 

66)கோவிலுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்? 

A)பட்ட விருத்தி 
B)பிரம்மதேயம் 
C) சாலபோகம் 
D)ஏதுமில்லை🏅 

67) இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் தொடங்கப்பெற்றது? 

A)முகமது பின் காசிம் 
B)கஜினி 
C)முகமது கோரி 🏅
D)குத்புதீன் ஐபக் 

68)"இக்தா "எனும் பெயரில் ஊதியம் வழங்கிய சுல்தான் யார்? 

A)குத்புதீன் ஐபக் 
B)இல்துமிஸ் 🏅
C)முகமது பின் துக்ளக் 
D)அலாவுதீன் கில்ஜி 

69)"சகால்கானி"என்ற முறையை உருவாக்கியவர்? 

A)பால்பன் 
B)இல்துமிஸ் 🏅
C)முகமது பின் துக்ளக் 
D)அலாவுதீன் கில்ஜி 

70)அலாவுதீன் கில்ஜியின் காலத்தை சேர்ந்த 30பழைய தோட்டங்களை புனரமைத்தவர்? 

A)நசுருதின் முகமது 
B)சிக்கந்தர் லோடி 
C)முகமது பின் துக்ளக் 
D)பிரோஸ் துக்ளக் 🏅

71)டெல்லி சுல்தான் வம்சத்தில் குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம்? 

A)அடிமை 
B)கில்ஜி 🏅
C)சையது 
D)லோடி 

72)எண்ணாயிரம் கிராமத்தில் வேதக்கல்லுரியை கட்டிய சோழமன்னர்? 

A)1-ம் ராஜராஜன் 
B)1-ம் ராஜேந்திரன் 🏅
C)1-ம் குலோத்தூங்கன் 
D)எவருமில்லை 

73)பிற்காலசோழர்காலத்தில் வணிகதலைமையகம்? 

A)தஞ்சாவூர் 
B)உறையூர் 
C)கங்கை கொண்ட சோழபுரம் 
D)ஐகோல் 🏅

74)பிற்காலப்பாண்டியர்களின் தொடக்கக்காலதலைநகரம்? 

A)மதுரை 
B)காயல் 
C)கொற்கை 🏅
D)கபாட புரம் 

75)பிற்காலப்பாண்டியர்களின் காலத்தில் நடைபெற்றகுதிரை வணிகம் குறித்து கூறியவர்? 

A)ஜமாலுதீன் 
B)வாசப் 🏅
C)மார்கோபோலோ 
D)இபின் பதுதா

76)மாலிக்கபூர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த ஆண்டு? 

A)1300
B)1310
C)1311🏅
D)1331

77)"வேள்விக்குடி செப்பேடு "உடன் தொடர் புடையவர்? 

A)பரமேஸ்வரன் 
B)1-ம் வரகுணன் 🏅
C)ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் 
D)3-ம் நந்தி வர்மன் 

78)"மானுர் கல்வெட்டு"-எந்த நூற்றாண்டை சார்ந்தது? 

A)கிபி 700
B)கிபி800🏅
C)கிபி900 
D)கிபி11-ம் 

79)சமணசமயத்திற்கு மாறிய அரிகேசரி எத்தனை சமணர்களை கழுவேற்றியதாக கூறப்படுகிறது? 

A)4500
B)6000
C)7000 
D)8000🏅

80)வங்கப்பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை தொடங்கியவர்? 

A)நேரு 
B)திலகர் 
C)ரவீந்தரநாத் தாகூர் 🏅
D)அரவிந்த் கோஷ்

81)"பிரிதிவி ராஜ ராசோ" என்ற நூலின் ஆசிரியர்? 

A)கல்ஹணர் 
B)விஷஹாதத்தர் 
C)ஜெயதேவர் 
D)சந்த பார்த்தை🏅

82.ஆற்றினால் தோற்றுவிக்கப்படும் பெரிய  விசிறி படிவுகள்... எனப்படும்? 

A)ஆற்று  முகத்துவாரம்  
B)ஆற்று  வளைவு  
C)ஆற்று கழிமுகம்  🏅
D)பனி அரி பள்ளம்

83)கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக  உயர்ந்து காணப்படும் போது அலை மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்து பாறை--------- எனப்படும் ?

A)கடற்குகைகள் 
B)கடல் ஓங்கல் 🏅
C)கடல் தூண்கள் 
D)கடல் வளைவு

84)கூற்று 1.கண்ட மேலோடு அதிக பருமனாக இருப்பதால் கண்ட பகுதியின் அடர்வு கடல் மேலோட்டின் அடர்வை விட அதிகமாக  காணப்படுகிறது.
கூற்று2.கண்ட மேற்பரப்பானது பசால்ட் போன்ற அடர் பாறைகளால் ஆனது.

A.கூற்று 1சரி; கூற்று 2 தவறு
B.கூற்று 1&2 தவறு🏅
C.கூற்று 1தவறு,கூற்று 2சரி
D. கூற்று 1&2சரி

85)உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலையான மவுனாலோவா எரிமலையின் உயரம்? 

A)3525 மீட்டர் 
B)3552மீட்டர் 
C)3255மீட்டர் 🏅
D)3325மீட்டர்

86)அமெரிக்காவில் உள்ள செயின்ட் ஹெலன் எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு? 

A)பல்சிட்ட கூம்பு எரிமலை  🥈
B)செயல்படாத எரிமலை 
C)செயலிழந்த எரிமலை 
D)A, B இரண்டும்

87) இந்தோனேசியாவில், கரக்காட்டாவோ தீவில் உள்ள எரிமலை எப்பொழுது வெடித்து மாக்மாவை வெளியேற்றியது? 

A)23 ஆகஸ்ட் 1883 
B )17 ஆகஸ்ட் 1883 
C)27 ஆகஸ்ட் 1884 
D)27 ஆகஸ்ட் 1883🎠

88)அ.கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது, இதன் முக்கிய கனிம கூறு சிலிக்கா மற்றும் அலுமினியம்
ஆ.மேலோட்டின் கீழ்பகுதி அடர் பசால்ட் பாறைகளின் தொடர்ச்சியாகவும்; இதன் முக்கிய மூலக்கூறு சிலிக்கா மற்றும் கால்சியம் ஆகும்.
இ.சிமா அடர்த்தி சியால் அடர்த்தி விட குறைவு

A.அனைத்தும் சரி
B.அ&ஆசரி
C.அ மட்டும் சரி🏅
D.அ&இசரி

89)எந்த ரிக்டர் அளவிற்கு மேல் அதிர்வு அலைகள் ஏற்படும் போது நிலம் பிளந்து வீழ்வது ஏற்படுகிறது?

A.4.0மேல்
B. 6.0மேல்
C.5.0மேல்🏅
D.7.0மேல்

90)கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
நிலநடுக்க நிகழ்வுகள்;
a.சாமோலி.     1.1991
b.உத்திரகாசி  2.1967
c.கெய்னா       3.1993
d.லாத்துர்        4.1999

A.3124.         
B.4123🎠
C.4132
D.1234

91)பனியாறு எத்தனை வகைப்படும்? 

A)3  
B)2  🏅
C)4  
D)5

92)எந்த பகுதியில் அமைந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் கோபி பாலைவனத்தில் இருந்து கடத்தப்பட்டவை? 

A)வடமேற்கு சீனா 
B)வடகிழக்கு சீனா 
C)மேற்கு சீனா 
D)வடக்கு சீனா🎠

93)கலஹாரி பாலைவனம் எங்கு காணப்படுகிறது?

A.வட அமெரிக்கா
B.தென் ஆப்பிரிக்கா
C.தென் அமெரிக்கா🏅
D.வட ஆப்பிர்க்கா

94)மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கை சூழலோடு படிப்பது? 

A)மனித சுழியியல்  
B)மனித அமைப்பியல்  
C)மனித மானுடவியல் 
D)மனித புவியியல்🎠

95)பஞ்சாப் ஹரியானாவில் உள்ள சிந்து கங்கை சமவெளி எதற்கு எடுத்துக்காட்டு? 

A)நேர்கோட்டு குடியிருபப்பு 
B)செவ்வக வடிவ குடியிருப்பு 
C)நட்சத்திர வடிவ குடியிருப்பு 🎠
D)வட்ட வடிவ குடியிருப்பு

96)மனித இனப்பிரிவு மதங்களில் பொருந்தாதது? 

A)ஜூடாயிசம் 
B)ஷாமானிசம் 🎠
C)இந்துமதம் 
D)ஷிண்டோயிசம்

97)ஜூடாய்ஸம் வழிபாட்டு தளம் எது?

A.பசாதி
B.அகியாரி
C.சினகாக்🎠
D.விஹாரா

98)உலக கலாச்சார பல்வகை நாள்?

A.ஜூலை 21
B.மே 11
C.மே 21🎠
D.ஜூலை 11

99)பொருத்துக;
a.மீப்பெரு நகர்                  1.டோக்கியோ
b.இணைந்த நகரம்           2.ராஜபுதனம்
c.செயற்கைகோள் நகரம்3. ஹஜிப்பூர்
d.மிகப்பெரிய நகரம்        4. குர்ஹான்

A.4231
B.2341
C.2431🎠
D.3421

100.சிரகோட்டா எரிமலை எங்கு உள்ளது?

அ) ஜப்பான்
ஆ) இந்தோனேஷியா🎠
இ) பிலிப்பைன்ஸ்
ஈ) இத்தாலி
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY