Ads Right Header

9th Constituition - முழு விளக்கம் தமிழில்...



குடியரசு ( Republic )

மக்களிடமோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமோ உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறையே " குடியரசு " எனப்படும் .

இவ்வகை அரசாங்கத்தில் ஒரு முடிமன்னரை காட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ( அ ) நியமிக்கப்பட்ட குடியரசுத்தலைவர் இருப்பார் . ( எ . கா ) இந்தியா , ஆஸ்திரேலியா

பொ . ஆ . மு . 500ம் - ஆண்டு உங்களுக்குத் ரோம் நாட்டில் முதன் முதலில் " குடியரசு " ( Republic ) எனும் சொல் வடிவமைக்கப்பட்டது . இச்சொல் " res publica எனும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது . இதன் பொருள் " பொது விவகாரம் " ( public matter ) என்பதாகும் .

இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26 , 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு , ஜனவரி 26 , 1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது . எனவே , ஜனவரி மாதம் 26ஆம் நாள் , 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது .

மக்களாட்சி என்றால் என்ன ?

மக்களாட்சி என்பது மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஆட்சி முறையே ' மக்களாட்சி ஆகும் . இம்முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் .

மக்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கவும் , ஓர் அமைப்பை ஏற்படுத்தவும் , போராட்டங்களை நடத்தவும் உரிமை பெற்றவர்கள் ஆவர் .

மக்களாட்சி ( Democracy ) எனும் சொல் ' DEMOS ' மற்றும் ' CRATIA ' எனும் இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும் .

டெமாஸ் என்றால் மக்கள் கிரஸி என்றால் அதிகாரம் ( power of the people ) என்று பொருள்படும்

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY