Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்! (01/05/2020)


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
வேலைவாய்ப்பு அறிவிப்பு!

காலியிடங்கள்: 242.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/05/2020.

குறிப்பு: விளம்பரம் செய்யப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும், மேலும் தேர்வு முடிவடைவதற்கு முன்னர் எந்த நேரத்திலும் காலியிட நிலையைப் பற்றிய குறிப்புடன் குறைத்தல் / அதிகரிப்பு உள்ளிட்ட மாற்றங்களுக்கு இது பொறுப்பாகும்.  அவர்கள் தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள் பயிற்சியில் வைக்கப்படுவார், மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் எங்கும் சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

TNPCB அறிவிப்பு எண் 01/2019,
Dt: 06.03.2019 இன் படி விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

அரசின் அறிவிப்பைக் காண
Click here to view pdf

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஆறு மாவட்டங்களில் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ( Any Degree )
( 10 + 2 + 3 முறையில் ) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி .

பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக , பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் 
( Military Graduation ) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம் . ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் ( SSLC ) மேல்நிலைக் கல்வியும் ( HSC ) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

கீழ்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும் .
1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி ( Diploma in Cooperative Management ) புது டெல்லி , தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவு பயிற்சி ( Higher Diploma in Cooperative Management ) ,

பின்வரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள் .
*வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் , புனே வழங்கும் முதுநிலை வாணிய மேலாண்மை ( கூட்டுறவு ) பட்டம் .

* பி . காம் ( ஆனர்ஸ் ) கூட்டுறவு - எம் . காம் ( கூட்டுறவு ) - எம் . ஏ ( கூட்டுறவு ) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் , கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு ,

பி . ஏ ( கூட்டுறவு ) ,
பி . காம் ( கூட்டுறவு ) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள் , கணக்கியல் ( Book Keeping ) , வங்கியியல் ( Banking ) , கூட்டுறவு ( Cooperation ) , தணிக்கை
( Auditing ) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

இல்லையெனில் இவர்கள் கூட்டுறவு பயிற்சியினை முடித்திருக்க வேண்டும் . 2019 - 20 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கூட்டுறவு பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் .


 இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப் பெற்று வருவதற்கான சான்றிதழினை ( Bonafide Certificate ) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும் .

கூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்பித்த பின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

2019 - 20 ஆம் ஆண்டில் , புதுடெல்லி , தேசிய கூட்டுறவு பயிற்சி குழுவால் சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் கூட்டுறவு பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் .

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவு பயிற்சியினைப் பெற்று வருவதற்கான சான்றிதழினை
( Bonafide Certificate ) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும் . கூட்டுறவு பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்பித்த பின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப் படிப்பின்போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . - கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும் ( Knowledge in Computer Application ).

 இ பொது

விண்ணப்பதாரர்கள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பினராகவே ( OC ) கருதப்படுவர் .

 “ ஆதரவற்ற விதவை " என்பது அனைத்து வழியிலிருந்தும் பெறும் மொத்த மாத வருமானம் ரூ . 4 , 000 / - த்திற்கும் ( ரூபாய் நான்காயிரம் ) குறைவாகப் பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும் . இவ்வருமானம் , குடும்ப ஓய்வூதியம் அல்லது தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானம் உள்ளிட்ட மற்ற வருமானங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும் . இத்தகைய விண்ணப்பதாரர்கள் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் . விவாகரத்து பெற்றவர் , கணவனால் கைவிடப்பட்டவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்பட மாட்டார் . மறுமணம் புரிந்தவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார் .

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ . 250 / - ஆகும்.

 ஆதிதிராவிடர் , பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது .

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் . ஆதரவற்ற விதவைகள் , மேலே “ இ " - ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும் .

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கு விண்ணப்பிக்க
web: www.vpmdrb.in

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கு விண்ணப்பிக்க
www.slmdrb.in

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கு விண்ணப்பிக்க
www.cbedrb.in

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு
சங்கத்திற்கு விண்ணப்பிக்க
http://www.drbtvmalai.net

பெரம்பலூர் மாவட்டம்
www.drbpblr.net

விருதுநகர் மாவட்டம்
www.vnrdrb.net

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY