Ads Right Header

UNIT 8 - பள்ளிப் புத்தகக் குறிப்புகள்!



நேசமணி

1 . நேசமணி விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்த பள்ளியே என்னும் இடத்தில் 12 - ஜுலை 1895ம் ஆண்டு அப்பாவு - ஞானம்மா தம்பதியினருக்கு 2வது மகனாகப் பிறந்தார் .

2 . திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் B . A பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர் . பின்பு திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து டீடு பட்டம் பெற்றார் . பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921ம் ஆண்டு வழக்கறிஞர் பணியாற்றினார் .

3 . இவர் இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர் .

4 . நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர்சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் , கீழ்சாதியினர் உட்கார குத்துமனையும் இடப்பட்டியிருந்தது .

5 . முதல் நாள் பணிக்குச் சென்ற போது அந்த குத்துமமையை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து பணியை மேற்கொண்டார் .

6 . இந்தியா விடுதலைக்கு பிறகும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க பல போராட்டங்களை இவர் தலைமையேற்று நடத்தினார் .

7 . 1956 - November 1ல் குமரிமாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது .

8 . இதனால் இவரை “ குமரித் தந்தை ” எனவும் " மார்ஷல் நேசமணி ” எனவும் அழைக்கப்பட்டார் .

9 . பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் , பின்பு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும் , நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் .

முழுமையாகக் காண
Click here to view pdf

Whatsapp
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY