Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்! (21/04/2020)
1. கீழ்க்கண்ட நோய்களுள் வைரஸ் நோய் அல்லாதது எது?
A.டைபாய்டு🌺
B.இன்புளுயன்சா
C.சாதாரண சளி
D.சின்னம்மை
2. பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள் மூலம் பரவும் நோய் எது?
A.டெட்டனஸ்🌺
B.ரூபெல்லா
C.மீசல்ஸ்
D.சிபிலிஸ்
3. பாக்டீரியா பற்றி தவறான கூற்றுகளை ஆராய்க?
I. பாக்டீரியா என்பவை மிகச்சிறிய புரோகேரியாட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும்.
II. பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது.
III. இவை பொதுவாக செல் சவ்வுகள் கொண்ட நுண்ணுறுப்புகளைக் கொண்டிருக்கும்.
IV. இவை திசுக்களைகளை ஊடுருவிச் செல்லும் தன்மை அற்றவை.
A. IIமற்றும் IV
B.I மற்றும்IV
C.IIமற்றும் III
D.III மற்றும்IV 🌺
4. ஆஸ்டியோமலேசியா இந்நோய் கீழ்க்கண்ட எந்த தாதுஉப்புக்கள் குறைவதால் ஏற்படுகிறது?
A. கால்சியம்
B. பாஸ்பரஸ்🌺
C. பொட்டாசியம்
D. சோடியம்
5. பொதுவான உடல் செயல்பாடுகள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் பணியை மேற்கொள்வது எது?
A. தாது உப்புக்கள்🌺
B. கார்போஹைட்ரேட்டுகள்
C. கொழுப்புகள் மற்றும் புரதங்கள்
D. வைட்டமின்கள்
6. குழந்தையின்மையும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதற்கும் காரணமான வைட்டமின் எது?
A.வைட்டமின் D
B.வைட்டமின் B
C.வைட்டமின் K
D.வைட்டமின் E🌺
7. கூற்று: அயோடின் ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச் அயோடின் கூட்டுப் பொருளாக அதாவது நீலம் கலந்த கருப்பு நிறமாக மாறுகிறது.
காரணம்: இந்த கரு நீல நிறம் உணவில் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
A. கூற்று காரணம் இரண்டும் சரி
B. கூற்று சரி காரணம் தவறு🌺
C. கூற்று தவறு காரணம் சரி
D. கூற்று காரணம் இரண்டும் தவறு
8. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை கண்டறிக.
I. அமீபா போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
II. பாரமீசியம் குறு இழைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
III. யூக்ளினா கசையிழைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
A.I மட்டும்
B.II மட்டும்
C.III மட்டும்
D. இவை அனைத்தும்🌺
9. ஜீராங் பறவைகள் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
A.சிங்கப்பூர்🌺
B.மலேசியா
C.ஹாங்காங்
D.டென்மார்க்
10. கீழ்கண்ட எந்த தாவர பகுதியில் தண்டு பகுதிகள் கூர்மையான முட்கள் போல் காணப்படுகின்றன?
A.போகன்வில்லியா🌺
B.ஒப்பன்ஷியா
C.அகேவ்
D.சப்பாத்திக்கள்ளி
11. கீழ்க்கண்ட எந்த தாவரத்தின் சிற்றிலைகள் பற்று கம்பிகளாக மாறி மேலே ஏறுவதற்கு ஏறுகொடியாக செயல்படுகிறது?
A.இனிப்பு பட்டாணி🌺
B.சங்குப்பூ
C.பாகற்காய்
D.போகன் வில்லியா
12. நீர்த்தாவரங்கள் நீரில் மிதக்க காரணம்?
A.தண்டில் காற்றறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதில் மிதக்கின்றன.
B.இலைப் பகுதியில் காற்றறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதாக மிதக்கின்றன.
C.தண்டிலும் இலைப் பகுதிகளிலும் காற்றறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதில் மிதக்கின்றன.🌺
D. நீர்த் தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி மிகுந்தவை இதன்காரணமாக இவை நீரில் எளிதாக மிதக்கின்றன
13. கீழ்க்கண்ட எந்த காய்கறி துண்டுகளின் மையப்பகுதி நீல நிறமாக மாறி இருப்பதிலிருந்து வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்?
A.கேரட்🌺
B.முள்ளங்கி
C.பீட்ரூட்
D.முட்டைக்கோஸ்
14. தவறான கூற்றுகளை தேர்ந்தெடு.
I. வேர் மூடி அதன் அடிப்பகுதியில் உள்ளது
II. வேர்களில் கணுக்களும் கணுவிடைப் பகுதிகளும் இல்லை.
III. தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு நுனி என்று பெயர்
IV. மக்காச்சோளம் சல்லி வேர் தொகுப்பு கொண்ட இருவித்திலை தாவரமாகும்.
A. I , III மற்றும் IV தவறு🦄
B. I, II மற்றும் III தவறு
C. II மற்றும் III தவறு
D. இவை அனைத்தும்
15. இம்முறைக்கு' வண்டலாக்குதல்' என்று மற்றொரு பெயரும் உண்டு?
A. கைகளால் தெரிந்தெடுத்தல்
B. வடிகட்டுதல்
C. காந்த பிரிப்பு
D. தெளிய வைத்து இருத்தல்🦄
16.400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்?
A.400 மி.லி
B.600 மி.லி
C.200 மி.லி🦓
D.800 மி.லி
17. நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையினை எவ்வாறு பிரித்தெடுக்கலாம்?
I. படிய வைத்தல்
II. தெளிய வைத்து இருத்தல்
III. வடிகட்டுதல்
IV. ஆவியாக்குதல்
V.குளிரவைத்தல்
VI. புடைத்தல்
A.I III IV
B.II IV V VI
C.I II III IV V🐮
D. இவை அனைத்தும்
18. கூற்றுகளை ஆராய்க
கூற்று: வாயுக்கள் நீர்மமாக மாற்றப்படுவதற்கு "வாயுக்கள் நீர்மமாதல் "என்று பெயர்.
காரணம்: வாயு மூலக்கூறுகள் குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலையில் மூலக்கூறுகள் நெருக்கமாக அமைந்து ஆற்றல் குறைக்கப்பட்டு வாயுக்கள் நீர்மமாக மாற்றப்படுகிறது.
A. கூற்று சரி காரணம் தவறு🐮
B. கூற்று தவறு காரணம் சரி
C. கூற்று காரணம் இரண்டும் தவறு
D. கூற்று காரணம் இரண்டும் சரி
19. திரவ துகள்களை விட வாயுத் துகள்கள் எளிதில் நகர்கின்றன இதனை எவ்வாறு அழைக்கலாம்?
A. ஊடுருவுதல்
B. விரவுதல்🐂
C. ஆவியாதல்
D. இவற்றில் எதுவுமில்லை
20. ஒரு துளி நீரில் ஏறக்குறைய எத்தனை மூலக்கூறுகள் அடங்கியுள்ளன?
A.10²¹🦓
B.10²²
C.10²³
D.10¹⁹
21. கீழ்க்கண்ட எந்த விசையானது தேங்காயை கீழ்நோக்கி இழுப்பதன் காரணமாகவே அது கீழ்நோக்கி விழுகிறது?
A.மைய நோக்கு விசை
B.மையவிலக்கு விசை
C.புவியீர்ப்பு விசை🦌
D.நேர்கோட்டில் விசை
22. கொசுக்கள் மட்டும் ஈக்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.அலைவு இயக்கம்
B.வட்டப்பாதை இயக்கம்
C.தற்சுழற்சி இயக்கம்
D.ஒழுங்கற்ற இயக்கம்🦊
23. பை போன்ற அமைப்பு கொண்ட தாவரத்தை தேர்ந்தெடு.
A.நெப்பந்தஸ்
B.வீனஸ் ஃபிளைட்ராப்
C.யூட்ரிகுலேரியா🐰
D.ட்ரஸீரா
24. முதன் முதலில் நிலத்தில் தோன்றிய தாவரம் எது?
A.மியூஸா பாராடிஸியாகா
B.பெரணி மற்றும் உல்வா
C.காரா மற்றும் மாஸ்கள்
D.மாஸ் மற்றும் லிவர்வோர்ட்ஸ்🐿️
25.கீழ்க்கண்டவற்றுள் எந்த தாவரத்தின் இலைப்பகுதி முட்களாக மாற்றடைந்துள்ளன?
A.போகன் வில்லியா
B.கிளைட்டோரியா
C.ஒபன்சியா🐥
D.அகேவ்
26. 15 மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நீழலின் நீளமானது 18.6 மீ எனில் கட்டிடத்தின் உயரமானது--------------ஆகும்.
A. 90 மீ
B. 91 மீ
C. 92 மீ
D. 93 மீ🐢
27. இரு கோணங்கள் சர்வ சமமாகவும் மிகை நிரப்பிகளாகவும் இருக்குமாயின் அவை----------ஆகும்.
A.செங்கோணம்🐢
B.சமபக்க முக்கோணம்
C.சாய்சதுரம்
D.விரிகோணம்
28.(10m²-5m) ஐ (2m-1) ஆல் வகுக்க கிடைப்பது?
A.4m
B.2m
C.10m
D. 5m🐢
29. கவிபாரதி தன்னுடைய படம் ஓட்டும் குறிப்பேட்டில் ஒரு பக்கத்திற்கு 4xy படங்களை ஒட்டினார். அதே போன்ற 100x²y³ படங்களை ஒட்டுவதற்கு எத்தனை பக்கங்கள் அவருக்கு தேவை ?(x மற்றும் y மிகைமுழுக்களாகும்)
A.50xy²
B.25xy²🐤
C.5x²y³
D10xy³
30. ஒரு கன சதுரத்தின் எத்தனை முகங்கள் உள்ளன?
A. 4
B. 6🐣
C. 8
D. 12
31. 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவிலான ஜிம்னாஸ்டிக் வழையமானது 5 சம அளவுள்ள விற்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நிறங்களில் வண்ணமிடப்பட்டுள்ளது எனில் ஒவ்வொரு வட்ட வில்லின் நீளத்தையும் காண்க.
A.6π செ.மீ
B.12π செ.மீ
C.14π செ.மீ🐧
D.8π செ.மீ
32. ஒரு சமையல் குறிப்பில், ஒவ்வொரு 3/2 கோப்பை அரிசிக்கு, 11/4 கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில், அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையேயான விகிதத்தை எழுதுக.
A.12:22
B.22:11
C.6:11🐼
D.11:6
33. ஒரு மாணவர், ஒர் எண்ணை8/9 ஆல் பெருக்குவதற்கு பதிலாக, தவறுதலாக 8/9ஆல் வகுத்து விட்டார். அவருக்கு கிடைத்த விடைக்கும், சரியான விடைக்கும் உள்ள வித்தியாசம் 34 எனில் அந்த எண்ணை காண்க.
A. 72
B. 64
C. 126
D. 144🐥
34. இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 4/5 ஆகும். ஓர் எண் 2/15 எனில், மற்றொரு எண்ணை காண்க.
A.3/2
B.2/3🌺
C.1/3
D.4
35. சுருக்குக √12×√3
A.6🐤
B.8
C.36
D.4
36.√128- √98+ √18
A. √2
B. √8
C. √48
D. √32🐨
37.10985 ஐ எந்த மிகச்சிறிய எண்ணால் வகுக்க ஈவு ஆனது ஒரு முழு கன எண்ணாகும்?
A. 5🌺
B.25
C.125
D.100
38.(-7)ˣ⁺²×(-7)⁵=(-7)¹⁰ எனில் x ஐக் காண்க.
A. -7
B. 7
C. 10
D. 3🐼
39.(p/q)¹⁻³ˣ=(q/p)¹/² எனில் x ஐக் காண்க.
A.1⁻¹
B.2⁻¹
C.3⁻¹🐼
D.4⁻¹
40. ஒரு விவசாயியிடம் 11 மாடுகளுக்கு 39 நாட்களுக்கு போதுமான உணவு உள்ளது. அவருடைய கால்நடையில் மேலும் 7 மாடுகள் சேர்ந்தால் உணவானது எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்?
A. 42
B. 44
C. 46🐨
D. 48
41. 150 மீட்டர் நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 300 மீட்டர் நீளமுள்ள ஒரு பாயினை 30 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
A. 6
B. 12🐥
C. 14
D. 16
42. 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாட்களில் கட்டி முடிப்பர். அதுபோன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
A.48 நாட்கள்🐤
B.36 நாட்கள்
C.64 நாட்கள்
D.72 நாட்கள்
43. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள் மற்றும் 9 நாட்களில் செய்வர். முதல் நாள் A ஐக் கொண்டு வேலையை தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் இருவரும் வேலையை செய்கின்றனர் எனில், வேலையானது எத்தனை நாட்களில் முடியும்?
A.18/4 நாட்கள்
B.22/3 நாட்கள்
C.31/3 நாட்கள்🐦
D. 37/2 நாட்கள்
44. A என்பவர் குறிப்பிட்ட வேலையை 25 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பர். அவர்கள் இருவரும் இணைந்து 5 நாட்கள் பணியாற்றிய பிறகு மீதம் எவ்வளவு வேலையானது நிறைவு பெறாமல் இருக்கும்?
A. 11/30
B. 15/30
C. 19/30💐
D. 12/30
45. A என்பவர் ஒரு குறிப்பிட்ட வேலையை 70 நாட்களில் செய்து முடிக்கிறார். B என்பவர் A ஐ விட 40% அதிக திறன் வாய்ந்தவர் எனில் அதே வேலையை B தனியாக செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
A. 40 நாட்கள்
B. 60 நாட்கள்
C. 50 நாட்கள்🌺
D. 45 நாட்கள்
46. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார் என்று சிறப்பு உள்ளது?
A. மதுரை
B. காஞ்சி🦀
C. புகார்
D. கொற்கை
47. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?
A.47
B.48
C.49🦀
D.51
48. பூம்புகார் துறைமுகத்தில் வட மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் எது?
A.தங்கம்🦀
B.முத்து
C.பவளம்
D.சந்தனம்
49. மற்ற நகரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் கட்டமைக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்படும் துறைமுகம் எது?
A.கொற்கை
B.மதுரை
C.காஞ்சி
D.பூம்புகார்🦀
50. பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் உவரி என்னுமிடத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது?
A. தங்கம்
B. சந்தனம்
C. பவளம்
D. முத்து🐌
51. பூம்புகார் துறைமுகம் எந்த கடலின் கரையில் அமைந்துள்ளது?
A.அரபிக்கடல்
B.வங்காள விரிகுடா🐛
C.இந்திய பெருங்கடல்
D.பசுபிக் பெருங்கடல்
52. சரியானதை தேர்ந்தெடு
A. ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையிலிருந்து உள்ளது🌺
B. கொற்கை அருகிலுள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது
C. ஈராக் நகரம் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது
D. கங்கை நதிக்கரையில் பூம்புகார் அமைந்துள்ளது
53. அபு சிம்பல் என்ற இடத்தில் இரட்டை கோயில்களை கட்டிய எகிப்து அரசர்?
A.இரண்டாம் ராமெசெஸ்🌺
B.குஃபு மன்னன்
C.முதலாம் ராமெசெஸ்
D.நம்மு என்ற அரசன்
54. ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய ஆண்டு?
A.1700
B.1900🌺
C.1600
D.1800
55. தவறான கூற்றை தேர்ந்தெடு.
I.சிந்துவெளி எழுத்துக்களை இன்று வரை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை
II.சிந்துவெளி மக்களின் முதன்மையான தொழில் பற்றி எதுவும் தெரியவில்லை
III.சிந்து சமவெளி மக்களின் வழிபாடு மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் பற்றி அறிய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை
IV.சிந்து சமவெளியில் பெண்கள் மட்டும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர்🌺
56. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தினாலான அளவுகோல்---------- வரை சிறிய அளவீடுகளை கொண்டுள்ளது?
A.1702 மி.மீ
B.1703 மி.மீ
C.1704 மி.மீ🌺
D.1709 மி.மீ
57. கொற்கை, பூம்புகார் போன்ற சங்ககால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் எந்த நாட்டில் இன்றும் உள்ளன?
A. பலுசிஸ்தான்
B. பாகிஸ்தான்
C. குஜராத்
D. ஆப்கானிஸ்தான்🌹
58. அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A. ஹரப்பா
B. மொகஞ்சதாரோ🌹
C. லோத்தல்
D. மெஹெர்கர்
59. ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் எந்த மாநிலத்தை சார்ந்தது?
A. பாகிஸ்தான்
B. பலுசிஸ்தான்
C. ஹரியானா🌹
D. குஜராத்
60. சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனும் இடத்திலிருந்து அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர்?
A.குஃபு மன்னன்
B.இரண்டாம் ராமெசிஸ்
C.சர் ஜான் மார்ஷல்
D.நாரம்-சின்🌹
61. மெஹர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட காலம்?
A.பொ.ஆ.மு 9000
B.பொ.ஆ.மு 6000
C.பொ.ஆ.மு 6500
D.பொ.ஆ.மு 7000🌹
62.கூற்று; வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டேரியா' என்பதில் இருந்து பெறப்பட்டது.
காரணம் : இதன் பொருள் வாசிப்பதன் மூலம் கற்றல் என்பதாகும்.
A.கூற்று சரி , காரணம் தவறு.🌹
B.கூற்று காரணம் இரண்டும் தவறு
C.கூற்று காரணம் இரண்டும் சரி
D.கூற்று தவறு காரணம் சரி
63. The search for the Indian's lost emperor என்னும் நூலை சார்லஸ் ஆலன் வெளியிட்ட ஆண்டு ?
A. 2010
B. 1980
C. 2002
D. 2012🌹
64. தவறானது தேர்ந்தெடு.
1) மானுடவியல் என்பது மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி படிப்பது ஆகும்
2) இது இரண்டு லத்தீன் சொற்களில் இருந்து பெறப்பட்டது ஆகும்.
3) Anthropos என்பதன் பொருள் மனிதன் மற்றும் logos என்பதன் பொருள் காரணம் என்பதாகும்.
A. 1&3 தவறு
B. 2 மட்டும் தவறு🌹
C. 2&3 தவறு
D. 1&2 தவறு
65.மனித வரலாற்றில் முதல்தரமான கண்டுபிடிப்பு எது ?
A.நெருப்பு
B.பானை
C.சக்கரம்🌹
D.கற்கருவிகள்
66. பொருத்துக:
a.கீழ்வலை 1.கோவை
b.மாவடைப்பு 2.நீலகிரி
c.உசிலம்பட்டி. 3.விழுப்புரம்
d.பொறிவரை 4. மதுரை
A.3142🌹
B.1342
C.1234
D.3124
67. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இரண்டிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்?
A. சார்லஸ் ஆலன்
B. ஜான் மார்ஷல்🌹
C. அலெக்சாண்டர் கன்னிங்காம்
D. சார்லஸ் மேசன்
68. கேலிஸ்டோ எந்த கோளின் துணைக்கோள் ஆகும்?
A.செவ்வாய்
B.வியாழன்🌹
C.சனி
D.நெப்டியூன்
69. வியாழன் கோளின் சுழலுதல் காலம்
A. 9 மணி நேரம் 51 நிமிடங்கள்🌹
B. 16 மணிநேரம் 3 நிமிடங்கள்
C. 17 மணிநேரம் 14 நிமிடங்கள்
D. 23 மணி நேரம் 56 நிமிடங்கள்
70. தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் எது?
A.புதன்
B.வெள்ளி
C.யுரேனஸ்🌹
D.நெப்டியூன்
71. குளிர்கால கதிர் திருப்பத்தின் போது சூரியனின் செங்குத்து கதிர்கள்---------------
விழுகின்றன?
A. கடகரேகை
B. மகர ரேகை🌹
C. நிலநடுக்கோட்டுப் பகுதியில்
D. தீர்க்கரேகை
72. இந்தியாவின் தென்கோடி முனையில் யாருடைய சிலையை காணலாம்?
A. மகாத்மா காந்தி
B. இந்திரா காந்தி🌹
C. திருவள்ளுவர்
D. கௌதம புத்தர்
73.பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடம் ?
A. குடும்பம்
B. சமூகம்🌹
C. கிராமம்
D. சமுதாயம்
74.மராத்தி மொழி பேசும் மக்களின் சதவீதம் ?
A. 7.90%
B. 5.89%
C. 8.30%
D. 7.09%🌹
75. 2001 ம் ஆண்டில் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளின் எண்ணிக்கை ?
A. 150
B. 122🌹
C. 599
D. 160
76. கூற்று ; முன்முடிவு வலுவாக இருக்கும்போது வேறுபட்ட கருத்து உண்டாகிறது.
காரணம் : இது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
A. கூற்று காரணம் இரண்டும் தவறு
B. கூற்று காரணம் இரண்டும் சரி
C.கூற்று சரி காரணம் தவறு
D.கூற்று தவறு காரணம் சரி🌹
77. யுனெஸ்கோவைப் பொருத்தவரை ஒரு மொழியானது பழங்கால தலைமுறையின் சில உறுப்பினர்கள் மட்டுமே பேசப்படுவது (பெரும்பாலும் பகுதி பேச்சாளர்கள்)என்றால் அந்த மொழி என்னவென்று வகைப்படுத்தப்படுகிறது?
A.பாதிக்கப்படக் கூடியது
B.நிச்சயமாக ஆபத்து
C.கடுமையான ஆபத்து
D.மிகக் கடுமையான ஆபத்து🌺
78. பாகுபாட்டை நீக்கும் வழிமுறையில் தவறானது.
A. அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்க செய்தல்
B. தற்போதைய பாலின பாரபட்சத்தை நிராகரித்தல்🌹
C. மற்ற மதங்களை பற்றி அறியும் வெளிப்படை மனநிலையை வளர்த்தல்.
D. பல தரப்பட்ட மக்களிடம் பேசுதல்.
79. விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக விளங்கிய ஆண்டுகளில் தவறானது ?
A.2000
B.2008
C.2010
D.2009 🌹
80. புமிக்கு மிக அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலம் எது ?
A.பால்வெளி அண்டம்
B.ஆண்ட்ரோமேடா🌹
C.பிராக்சிமா சென்டாரி
D.ஆல்ஃபா சென்டாரி
81. சுற்றுப்பாதையின் அடைப்படையில் தவறானது எது ?
A.புதன்
B.வியாழன்
C.வெள்ளி🌹
D.சனி
82. உட்புறக்கோள் அல்லாதது எது ?
A.வியாழன்🌹
B.செவ்வாய்
C.புதன்
D.வெள்ளி
83.சரியான கூற்றை தேர்ந்தெடு
1) வெள்ளி சூரியனை சுற்றிவர 243 நாட்களை எடுத்துக் கொள்கிறது.
2) நெப்டியூன் போல வெள்ளியும் சூரியனை கிழக்கு மேற்காக சுழல்கிறது.
3) மற்ற கோளைக்காட்டிலும் இது மிக வேகமாக சூரியனை சுற்றி வருகிறது.
4) அன்பு மற்றும் அழகை குறிக்கும் ரோமானிய கடவுளின்(வீனஸ்) பெயரால் அழைக்கப்படுகிறது.
A. 1&3 சரி
B. 3&4 சரி
C. 1 மட்டும் சரி
D. 4 மட்டும் சரி🌺
84. தவறானதை கண்டறி;
1) கனிமீடு என்பது வியாழன் கோளின் துணைக்கோள் ஆகும்.
2) டிரைட்டன் என்பது சனி கோளின் துணைக்கோள் ஆகும்🌺.
3) அதிக துணைக்கோளை கொண்டது வியாழன் கோள் ஆகும்.
4) செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் இடையே சிறுகோள் மண்டலம் காணப்படுகிறது.
85. புவியை போன்றே பனிக் கவிகைகளை கொண்ட கோள் எது ?
A.புதன்
B.வெள்ளி
C.நெப்டியூன்
D.செவ்வாய்🌺
86. கூற்று; ஜுன் 21 ம் நாள் கடகரேகை மீது சூரியனின் செங்குத்து கதிர்கள் விழும்.
காரணம்; அதனால் வட அரைக்கோளத்தில் நீண்ட இரவுப் பொழுதும் தென் அரைக்கோளத்தில் நீண்ட பகல் பொழுதும் நிகழும்.
A.கூற்று காரணம் இரண்டும் சரி
B.கூற்று சரி காரணம் தவறு🌺
C.கூற்று தவறு காரணம் சரி
D.கூற்று காரணம் இரண்டும் தவறு
87. மரியானா அகழியின் ஆழம் ?
A.10900 மீ
B.10969 மீ-
C.10994 மீ
D.10994 மீ-🌺
88. புவியின் மேற்பரப்பில் ஆறில் ஒரு பங்கை கொண்டுள்ள பெருங்கடல் எது ?
A. இந்தியப் பெருங்கடல்
B. அட்லாண்டிக் பெருங்கடல்🌺
C. பசுபிக் பெருங்கடல்
D. தென் பெருங்கடல்
89. ஃபாக்லாந்து எப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவாகும் ?
A. அட்லாண்டிக் பெருங்கடல்🌺
B. பசுபிக் பெருங்கடல்
C. இந்தியப் பெருங்கடல்
D. ஆர்டிக் பெருங்கடல்
90. அண்டார்டிக் கண்டத்தில் தங்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை ?
A. 2000
B. 3500
C. 4000🌺
D. 5000
91. தவறானதை தேர்ந்தெடு
1)தென் பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ளது.
2) இது 60° வட அட்சத்தால் சூழப்பட்டுள்ளது
3) தென் பெருங்கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலின் தென் பகுதிகளாகப் சூழப்பட்டுள்ளது.
4) இதன் மொத்த பரப்பளவு 21.69 மி.ச.கிமீ ஆகும்.
A. 1&3 தவறு
B. 1&4 தவறு
C. 2&4 தவறு🌺
D. 1&2 தவறு
92.P,Q,R,S,Tஆகிய ஐவரும் நண்பர்களாக உள்ளனர். P என்பவர் S ஐ விட அதிகமாகவும், Q என்பவர் T க்கு சமமாகவும், R என்பவர் T ஐ விட குறைவாகவும், S என்பவர் Q ஐ விட அதிகமாகவும் அறிவாளிகளாக உள்ளனர் எனில் இவர்கள் ஐவரில் அதிக அறிவுடையவர் யார் ?
A. P💐
B. Q
C. S
D. T
93. முதல் பத்து பகா எண்களின் வீச்சு யாது
A. 28
B. 26
C. 29
D. 27🌺
94.3,10,24,52,108,?
A. 230
B. 210
C. 240
D. 220💐
95. பின்வரும் கூற்றை ஆராய்க
1)A மற்றும் B ஆகியோர் ஒரே வயது உடையவர்களாகவோ அல்லது விடA என்பவர் B யை விட மூத்தவராகவோ இருக்கலாம்.
2) C மற்றும் D ஆகியோர் ஒரே வயது உடையவர்களாகவோ அல்லது D என்பவர் C யை விட மூத்தவராகவோ இருக்கலாம்.
3) B என்பவர் C விட மூத்தவர்
மேற்கூறிய கூற்றுகளை பொறுத்து கீழ்க்கண்டவற்றில் எது எந்த முடிவு சரியானது?
A. A என்பவர் C யை விட மூத்தவர்💐
B .D என்பவர் C யை விட மூத்தவர்
C.A என்பவர் B யை விட மூத்தவர்
D. Bமற்றும் D ஆகியோர் ஒரே வயது உடையவர்கள்.
96. பொருந்தாதவை கண்டுபிடி
A.டிசம்பர் 11- சர்வதேச மலைகள் தினம்
B.அக்டோபர் 16- உலக உணவு தினம்
C.மார்ச் 22- உலக நீர் தினம்💐
D.அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை- உலக வாழிட தினம்
97. கூமர் எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்
A. உத்தரப் பிரதேசம்
B. ராஜஸ்தான்💐
C. பஞ்சாப்
D. குஜராத்
98. தில்வாரா எதனுடன் தொடர்புடையது?
A.சமணம்💐
B.சமயம்
C.இஸ்லாமியம்
D.ஜொராஸ்டிரியம்
99. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி எது?
A. தமிழ்💐
B. மலையாளம்
C. தெலுங்கு
D. கன்னடம்
100. வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
A.தொல்காப்பியம்
B.மதுரைக்காஞ்சி
C.பெரும்பாணாற்றுப்படை
D.சிறுபாணாற்றுப்படை💐
Whatsapp ல் இணைந்திட
இங்கே சொடுக்கவும்...
Previous article
Next article
For english language iruka
ReplyDelete