Ads Right Header

Group 2 & 4 - 50 + 50 - மாதிரி வினாவிடை!



1) சக்ராதியர் என்று அழைக்கப்படும் குப்த மன்னர்?

A)1-ம் சந்திரகுப்தர்
B)2-ம்  சந்திரகுப்தர்
C)புத்த குப்தர்
D)குமார குப்தர் ✓

2) யார் ஆட்சி காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் புத்தமடம் கட்ட அனுமதி கோரினார்?

A)1-ம் சந்திரகுப்தர்
B)2-ம் சந்திரகுப்தர்
C)சமுத்திரகுப்தர் ✓
D)விஷ்ணு குப்தர்

3) குப்தர் காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக கூறியவர்?

A)காளிதாசர்
B)தன்வந்திரி
C)வாராகமிகிரர்
D)அமரசிம்மர் ✓

4 ) பெரியார் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?

A)1925
B)1937
C)1938✓
D)1944

5) சுயமரியாதை இயக்கம் பற்றியவையில் தவறனாது?

1)தேர்தல் அரசியலில் முழுமூச்சில் இறங்கியது
2)தொடங்கப்பெற்ற ஆண்டு -1929
3)தீண்டாமைக்கு எதிராக போராடி அதை ஒழித்தது
4)சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டின் தலைவர் பெரியார்

A)1&2
B)2மட்டும்
C)2&3
D)அனைத்தும் தவறு✓

6) எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி ஹிந்தி மொழி இந்தியநாட்டின் அலுவலக மொழியானது?

A)1956
B)1965✓
C)1982
D)1992

7) அறிஞர் அண்ணா ஆட்சியின் போது நடக்கபெற்ற உலகத்தமிழ் மாநாடு எது?

A)2-ம்✓
B)3-ம்
C)4-ம்
D)5-ம்

8) தமிழகத்தில் இருமொழி கொள்கையை நடைமுறை படுத்தியவர் யார்?

A)ராஜாஜி
B)காமராஜர்
C)அண்ணா ✓
D)M.G.R

9) தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்த காலம்?

A)கி. மு.3-ம் நூற்றாபின்
B)கி. பி.3-ம் நூற்றா பின்
C)கி. பி.5_ம் நூற்றாபின்
D)கி. பி. 6-ம் நூற்றாபின்✓

10) அரசுஉரிமையானது புனிதத்தன்மையுடையதாகவும், மரபுவழியானதானது எனக்கூறியவர்கள்?

A)சேர
B)சோழ
C)பாண்டிய
D)பல்லவர்கள்✓

11) விளைச்சலில் அரசன் பெறும் 1/6பங்கு எதை குறிக்கிறது?

A)பாகா ✓
B)போகா
C)அப்ரகதா
D)உபரிகாரா

12) தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது புத்தநூல் யாரால் எழுதப்பட்டது?

A)சித்தசேனா திவாகரா
B)தன்வந்திரி
C)வாராகமிகிரர்
D)வசுபந்து ✓

13) குப்தர் காலத்தில் இயற்றப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல்

A)நவநீதகம்
B)ஹஸ்த்யாயுர்வேதா✓
C)கண்டகாத்யகா
D)பிருஹத் சம்ஹிதா

14) நாளந்தா பல்கலை கழகம் அழிக்கப்பட்ட  ஆண்டு?

A)1196
B)1200✓
C)1206
D)1300

15) குப்தர் காலத்தில் கிராம பெரியவர், கிராம தலைவர், குடும்பதலைவர், எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A)மஹாதண்டநாயகா
B)மஹா சந்தி விக்ரஹா
C) மஹாதாரா ✓
D)குமாரமாத்தியா

16) குப்தர் காலத்தில் அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுவது?

A)சாஞ்சி கல்வெட்டு
B)ஈரான் தூண்கல்வெட்டு
C)பஹார்பூர் செப்பேடு✓
D)தாமோதர்பூர் செப்பேடு

17) குப்தர் காலத்தில் வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் எனக் கூறியவர்?

A)பாஹியான் ✓
B)ஹரிசேனர்
C)அமரசிம்மர்
D)R. S. சர்மா

18) குப்தவம்சத்தின் கடைசி அரசரரான விஷ்ணு குப்தர் ஆட்சி செய்த வருடம்?

A)கி.பி. 510-540
B)கி.பி. 540-550✓
C)கி.பி. 560-570
D)கி.பி. 520-550

19) தரும சாத்திரம் என்னும் நூலை இயற்றியவர்??

A) விசாகதத்தர்
B) கிருஷ்ண தேவராயர்
C) பாகியான்
D) காமந்தகர்✓

20)  குப்தர்கள் காலத்தில் சமணர்களுக்கு இடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர்?

A) விமலா
B) திக் நாதர்
C) வசுபந்து
D) சித்தசேன திவாகரா✓

21) மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு மற்றும் நிறைவேற்றியவர்?

A) 1976 (கருணாநிதி)
B) 1956 ( காமராஜர்)
C) 1974 (கருணாநிதி)✓
D) 1992 (ஜெயலலிதா)

22) 1801ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் பேசப்பட்ட மொழிகளில் தவறானது?

A) தமிழ்
B) துலு
C) கோண்டா✓
D)  தெலுங்கு

23) 1913 ம் யாருடைய புள்ளியியல்  விவரமானது 3% உள்ள பிராமணர்கள் அனைத்து வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டனர் என்பதை நிரூபித்தது ?

A) எல்லிஸ்
B) அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ்✓
C) பிரான்சிஸ் ஓயிட்
D) ஜேம்ஸ் பிரின்சிப்பே

24)  கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

அ. குப்தர்கள் காலத்தில் குடியிருக்க தகுந்த எல்லாம் வாஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
ஆ. குப்தர்கள் காலத்தில் மிகவும் செழித்த தொழில் சுரங்கத் தொழில் உலோகவியல் ஆகும்.
இ. குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட தானியம் சமயச்சார்பற்ற மானியம் என்று அழைக்கப்படுகிறது.
ஈ. குப்தர் காலத்திற்கு பின்னர் வெள்ளி நாணயங்களின் புழக்கம் குறைந்துபோனது.

A. அ மட்டும்
B. அ மற்றும் இ
C. ஈ மட்டும்✓
D.இ மட்டும்

25) 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளை
 துக்க தினமாக அனுசரித்த இயக்கம்?

A) சுயமரியாதை இயக்கம்
B) திராவிடர் கழகம்
C) திராவிட முன்னேற்றக் கழகம்✓
D) அ.தி.மு.க

26)  ""பேரரசிற்கான ஓர்
சாமானியனின் வழிகாட்டி "" என்னும் நூலின் ஆசிரியர்?

A) பெரியார்
B) எட்வின் ஸ்டாக்
C) தியாகராயர்
D)  அருந்ததி ராய்✓

27) அண்ணா தன்னுடைய ஆட்சியில் ____ மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாக்கினார்?

A) 30
B) 70
C) 35
D) 75✓

28) " சைக்கிள்‌‌ ரிக்க்ஷா ஒழிப்பை " கொண்டு வந்த முதலமைச்சர்?

A) எம்.ஜி.ஆர்
B) கலைஞர்✓
C) காமராஜர்
D) ஜெயலலிதா

29) ____ என்பது குறிப்பிட்ட கருத்திலான வரிகளை கொண்டிருப்பதாகும்?

A) கலம்பகம்
B) கோவை✓
C) பரணி
D) பாட்டு

30) பல்வேறு வகையான வரிகள் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல்?

A) குறுந்தொகை
B) அகநானூறு
C) பட்டினப்பாலை✓
D) மதுரைக்காஞ்சி

31) பண்டைய தமிழ் மதங்கள் எதனை சார்ந்து இருந்தது?

A) ஓவியம்
B) நாட்டுப்புற கலை✓
C) நாடகங்கள்
D) புராண கதைகள்

 32) கொன்றை வேந்தன் மற்றும் ஆத்திசூடியை இயற்றிய ஔவையார் எந்நூற்றாண்டை சேர்ந்தவர்?

A) 12ம் நூற்றாண்டு
B) 2 ம் நூற்றாண்டு
C) 8ம் நூற்றாண்டு
D)10ம் நூற்றாண்டு✓

33) யாருடைய அரசியல் அமைப்பு ஒரு ' மக்கள் நல அரசு' அடிப்படையில் அமைந்தது?

A) அசோகர்
B) திருவள்ளுவர்✓
C) கபிலர்
D) சேரர்

34) “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை." இக்குறட்பாவில் வள்ளுவர் யாரை எச்சரித்துள்ளார்?

A) கொடுங்கோலன்✓
B) அரசன்
C) மந்திரி
D) தளபதி

35) தன்னுடைய படைப்பில் ,தாம் மறைந்திருந்து, நாடகப் போக்கில் காதலனையும் காதலியையும் பேசச் செய்துள்ளவர்?

A) பாரதிதாசன்
B) ஔவையார்
C) திருவள்ளுவர்✓
D) பாரதியார்

36) ”நாம் ஆயிரம் பிரிவுகளாக
வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம்.
ஆனால், எப்படி இருந்தாலும் அந்நிய
படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது”. என்றவர்?

A) திருவள்ளுவர்
B) காந்தி
C) பாரதி✓
D) நேரு

37) பாரதியார் " பாஞ்சாலி சபதத்தில்" இந்தியாவை எதனுடன் ஒப்புமை படுத்தியுள்ளார்?

A) கௌரவர்களாக
B) பாண்டவர்களாக
C) திரௌபதியாக✓
D) சுதந்திர போராட்ட வீரர்களாக

38)”சுதேசகீதங்கள்” எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல்
தொகுப்பினை பாரதி வெளியிட்ட ஆண்டு?

A) 1920
B) 1902
C) 1908✓
D) 1910

39) பிரஞ்சு
புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்
போன்றவற்றை தனது குறிக்கோளாக
அறிவித்த பாரதியின் நாளிதழ் எது?

A) சுதேசகீதம்
B) இந்தியா✓
C) விஜயா
D) சுதேசமித்திரன்

40) பாரதி தன்னுடைய 11ம் வயதில் விட்ட சவாலில் எத்தலைப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?

A) தேசம்
B) கல்வி✓
C) சுதந்திரம்
D) உரிமை

41) ”சுயராஜ்ய தினம்”
கொண்டாடுவதற்காக 1908-ஆம் ஆண்டு
____ மிகப்பெரிய பொதுக்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது?

A) புதுச்சேரி
B) காரைக்கால்
C) தஞ்சை
D) சென்னை✓

42) ஆணும் பெணும் சமமாகக்
கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு
மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும் என்றவர்?

A) சுப்பையா✓
B) காந்தி
C) பெரியார்
D) அம்பேத்கர்

43) தற்கால
பெண்களுக்கு "சக்தி" என்கிற
அடையாளத்தை ஏற்படுத்தியவர்?

A) பெரியார்
B) சாவித்திரி பாபூலே
C) ஜோதிபாபூலே
D) பாரதி✓

44) தொழிலாளர் நலன்களைப் பேணும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

A) 1956
B) 1932
C) 1921
D) 1926✓

45) "தேசத்தின் பெயரால் ஓர் குழு மக்களைச்
சுரண்ட நினைத்தா ல் அத்தேசம் போராடிப்பெற்ற உண்மையான சுதந்திரம்
அதுவல்ல" என்றவர்?

A) அண்ணா
B) காந்தி
C) பெரியார்✓
D) அம்பேத்கர்

46) "சிம்ஹவிக்ரமன்" என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மன்னன்?

A) சமுத்திர குப்தர்
B) இரண்டாம் சந்திர குப்தர்✓
C) அவனி சிம்மன்
D) முதலாம் சந்திர குப்தர்

47) குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது?

A) 16
B)  6✓
C) 12
D) 3

48) கலிங்கம் வழியாக தெற்கே , காஞ்சி வரை படையெடுப்பு நடத்திய மன்னன்?

A) அசோகர்
B)  முதலாம் சந்திரகுப்தர்
C)சமுத்திர குப்தர்✓
D) ஔரங்கசீப்

49) அசோகரின் தூண் கல்வெட்டில் யார் மௌரிய பரம்பரையில் வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது?

A) கடோத்கஜன்
B) விசாகதத்தன்
C) சமுத்திர குப்தர்✓
D) சந்திர குப்தர்

50) "மஹாதண்டநாயகா" என்னும் பட்டத்தை உடையவர்?

A) லிச்சாவி
B) குமார குப்தர்
C) ஹரிசேனர்✓
D)  காளிதாசர்

51) காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுவை சேர்ந்தவர்கள் யார்?

A) குஷாணர்கள்
B) குப்தர்கள்
C) ஹுணர்கள்✓
D) சாகர்கள்

52) 25% ஆல்கஹால் கரைசல் என்பது?

A 100 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்
B. 25 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்✓
C. 75 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்
D. 25 மில்லி லிட்டர் நீரில் 75 மில்லி லிட்டர்  ஆல்கஹால்

53) மயில்துத்தம்  என்று அழைக்கப்படுவது?
A.Cuso4.5H20✓
B.Mgso4.7H20
C.Caso4.2H20
D.Feso4.7H20

54)  அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன்?

A. அதிகரிக்கும்✓
B. குறையும்
C. மாறாது
D. நிலைத்த தன்மை

55) உப்பும் சர்க்கரையும் சேர்ந்த கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. ஒரு மடிக் கரைசல்
B. இருமடிக் கரைசல்
C. பலமடிக் கரைசல்
D. மும்மடிக் கரைசல்✓

56) வேதியியல் முறைப்படி அதிகளவில் வினைபுரியும் வாயுவாக செயல்படுவது எது?

A.O2✓
B.SO2
C.N2
D.H2S

57) கலோரி மீட்டர் உருவாக்க பயன்படும் உலோகம் எது?

A. சில்வர்
B. அலுமினியம்
C இரும்பு
D. தாமிரம்✓

58) காயங்களுக்கு மருந்தாக பயன்படுவது?

 A.மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
 B.கால்சியம் ஹைட்ராக்சைடு
 C.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
 D.ஹைட்ரஜன் பெராக்சைடு✓

59) ஒரு கரைசலில் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 1×10^-8 மோல் லிட்டர்-1 எனில் அக்கரைசலின் PH மதிப்பை காண்க?

A.8✓
B.6
C.12
D.2

60) சுல்தான்கஞ்சில் உள்ள புத்தர் சிலை எத்தனை அடி உயரம் உடையது?

A) 4  1/2 அடி
B) 21 அடி
C) 7  1/2 அடி✓
D) 18 அடி

61) சமண ராமாயணத்தை இயற்றியவர்?

A) பாணிணி
B) விமலா✓
C) அசுவகோசர்
D)  தன்வந்திரி

62) கூற்று: குப்த பேரரசு 'தேசம்' அல்லது 'பக்தி' எனப்படும் மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
காரணம்:  'உபகாரிகா' என்னும்  அமைச்சரால் இது நிர்வகிக்கப்பட்டது.

A) கூற்று சரி காரணம் தவறு
B) கூற்று சரி காரணம் சரி
C) கூற்று ,காரணம் இரண்டும் சரி
D) கூற்று , காரணம் இரண்டும் தவறு✓

63) வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.இவ்வுமையினால் திருவள்ளுவர் நமக்கு உணர்த்துவது எது?

A) எந்நிலையிலும் வலிமை உடையதாக இருத்தல்
B) தீயவர்களுடன் நட்பு கொள்ளாமல் இருத்தல்
C) நடுநிலையாக இருத்தல்
D) தனக்குரிய தகுதியான இடங்களில் சிறப்பாக செயல்படுதல்✓

64)  திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்?

A அறிஞர் அண்ணா
B. அம்பேத்கர்
C. பெரியார்
D.அயோத்திதாசர்✓

65) மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்ற கண்ணகியை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர் என்று கண்ணகியின் சிறப்புகளை கூறியவர்?

A. இளங்கோவடிகள்
B. சீத்தலை சாத்தனார்
C. எரிக் மில்லர்✓
D. ஆர் பார்த்தசாரதி

66)  132 வருடமாக இருந்த  தமிழ் கூட்டமைவு என்பதை அளித்தார் என்று யாருடைய கல்வெட்டு குறிப்புகளில் காணலாம்?

A. இரண்டாம் நரசிம்மவர்மன்
B. முதலாம் மகேந்திரவர்மன்
C. கலிங்க அரசன் காரவேலன்✓
D. மூன்றாம் நந்திவர்மன்

67) பிரபந்த இலக்கியம் பல்வேறு வகையான பாடல்களைக் கொண்டு இருந்தது இதில் பொருந்தாதது எது?

A. சிற்றிலக்கியம்✓
B.கோவை
C. கலம்பகம்
D. பரணி

68) சுயராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக 1908 ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்?

A. சுப்பிரமணிய சிவா
B. வாஞ்சிநாதன்
C. மோதிலால் நேரு
D. இவற்றில் யாருமில்லை✓

69) மக்கள் பிரச்சினைகளை பொதுமக்களிடம் பேசும்போது தமிழ் மொழியிலேயே பேச வேண்டும் என உறுதியாக இருந்தவர்?

A. ஈவேரா பெரியார்
B. திரு. வி.க.
C. பாரதியார்
D. சிங்காரவேலர்✓

70) நவீன தமிழகத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்?

A.அயோத்திதாசர்
B.பெரியார்✓
C.பாரதியார்
D.மா சிங்காரவேலர்

71) முதல் பொதுவுடைமை மாநாடு கான்பூரில் நடந்த ஆண்டு?

A.1936
B.1922
C.1925✓
D.1937

72) "அஷ்டகுல-அதிகாரனா"  என்பது எத்தனை உறுப்பினர்கள் கொண்ட குழு ஆகும்?

A)  9
B) 12
C)  8✓
D)  5

73) "இரண்யவெஷ்தி" என்பதன் பொருள்?

A) கட்டாய உழைப்பு✓
B) கட்டாய வரி
C) கட்டணத் தொகை
D) மக்கள் அடர்த்தி

74) சரியான கூற்றை கண்டுபிடி

1. கவிஞர் - காளிதாசர்
2.சமஸ்கிருத புலவர் - ஹரிசேனர்
3.மருத்துவர் - அமரசிம்மர்
4.அகராதி உருவாக்கியவர் -  தன்வந்திரி

A) 1&2 சரி✓
B) 1 மட்டும் சரி
C) 1&3 சரி
D) 1&3&4 சரி

75) வாத - பூதா என்பது எதற்கான வரி?

A) ஒடுக்குமுறை வரி
B) வருவாய் மற்றும் சொத்து வரி
C)‌ நாணயங்கள் மீதான வரி
D) காற்று, ஆவிகளுக்கு சடங்கு செய்ய உதவும் வரி✓

76) கீழ்க்கண்டவற்றுள் போர் கடவுள் யார்?

A) கீர்த்தி வர்மன்
B) மங்களேசன்
C) கார்த்திகேயன்✓
D) பிரம்மேஸ்வரன்

 77)ஹுணர்களை விரட்டியடித்தவர்?

A) விஷ்ணு குப்தர்
B) ஸ்ரீ குப்தர
C) ஸ்கந்த குப்தர்✓
D) சந்திர குப்தர்

78) இரண்டாம் புலிகேசி ஐஹோல் கல்வெட்டில் எவ்வாறு குறிக்கப் பெற்றுள்ளார்?

A) பிரம்மேஸ்வராயா
B) சத்தியஸ்ராய✓
C) சந்திரேயா
D) பிரம்மதேயம்

79) ராஜசிம்மனின் அரசி ரங்கபதகாவின் உருவம் எங்கோவிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?

A) மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள்
B) தஞ்சை பெரிய கோயில்
C) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்✓
D) எலிபேண்டா குகைக் கோயில்

80) பாலகாப்யா எழுதிய "ஹஸ்த்யாயுர்வேதா" கீழ்கண்டவற்றுள் எதை பற்றியதாகும்?

A) வானியல் சம்பந்தமான நூல்
B) விலங்குகளின் மருத்துவம் பற்றிய நூல்✓
C) வேதியியல் சம்பந்தமான நூல்
D) மனிதர்களுக்கான மருத்துவம்

81) நர்மதை நதிக்கரையில் ஹர்சரை வென்றவர்?

A) முதலாம் புலிகேசி
B) முதலாம் நந்திவர்மன்
C) இரண்டாம் புலிகேசி✓
D) சமுத்திர குப்தர்

82) 1879ல் புதுச்சேரிக்கு அருகில் உள்ள உருக்காட்டுகோட்டம் என்னுமிடத்தில் லிங்கம், நந்தி பொறிக்கப்பட்ட எத்தனை செப்பு பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டன?

A) 11✓
B) 21
C) 22
D) 32

83) இரண்டாம் விக்ரமாதித்தன் _____ கைப்பற்றியதன் நினைவாக மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி "விருப்பாக்ஷா" கோவில் கட்டப்பட்டது?

A) வாதாபி
B) பட்டக்கல்
C) காஞ்சி✓
D)  ஜஹோல்

84) சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு " உள்ளூர் பிராகிருதம்" என எம்மொழியை குறிக்கிறது?

A) சமஸ்கிருதம்
B) தெலுங்கு
C)  பாலி
D) கன்னடம்✓

85) முதல் குகைக் கோவில் யாருக்காக உருவாக்கப்பட்டது?

A) பௌத்தர்கள்
B) சமணர்கள்
C) ஆசிவகர்கள்✓
D) பிராமணர்கள்

86) நந்திவர்ம பல்லவனின் ____ செப்பேட்டில் அபராதங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது?

A) கூரம்
B) வேலூர் பாளையம்
C) காசாக்குடி✓
D) ஐஹோல்

87) யுவான் சுவாங் சாளுக்கிய பகுதியில் உள்ள பௌத்த மையங்களில் மகாயான, ஹீனயான பிரிவுகளை பின்பற்றும் எத்தனை பௌத்தர்கள் இருந்ததாக கூறிப்பிடுகிறார்?

A)   5000✓
B)   1200
C) 12000
D)  3000

88) ஸ்ரீ ராமானுஜர் பின்பற்றிய கோட்பாடு?

A) வைணவம்
B) துவைதம்
C) அத்வைதம்
D) விசிஷ்டாத்வைதம்✓

89) பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது?

A) சேரர்
B) சோழர்✓
C) களப்பிரர்கள்
D) சாளுக்கியர்

90) ஆதிசங்கரர் பிறந்த ஊர்?
A) சாஞ்சி
B) ஸ்ரீ வைகுண்டம்
C) காலடி✓
D) ஸ்ரீ பெரும்புதூர்

91) வெள்ளை விட்ரியால் என்றழைக்கப்படும் உப்பு எது?

A.CuSo4.5H2o
B.ZnSo4.7H2o✓
C.Mgso4.7H2o
D. இவற்றில் எதுவுமில்லை

92. சோப்புகள், அமில நீக்கிகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செயல்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

A.w/w✓
B.v/v
C.t/t
D.m/m

93. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாக காரணம் இல்லை?

A. ஈரம் மீது அதிக நாட்டம்✓
B. ஈரம் மீது  குறைந்த நாட்டம்
C. ஈரம் மீது நாட்டம் இல்லை
D. ஈரம் இது மந்தத்தன்மை

94. கடல் நீரின் pH  மதிப்பு?

A.8✓
B.10
C.12
D.14

95. கலீனா என்பது?

A. ஆக்சைடு தாது
B. கார்பனேட் தாது
C. ஹைலைட் தாது
D. சல்பைடு தாது✓

96. கீழ்க்கண்ட எந்த குடைவரைக்கோயில் உள்ள 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன?

A. எல்லோரா✓
B. அஜந்தா
C. மாமல்லபுரம்
D. பட்டாடக்கல்

97. அஜந்தா குகைகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?

A. சாதவாகனர்✓
B. பல்லவர்கள்
C. சாளுக்கியர்கள்
D. ராஷ்டிரகூடர்கள்

98. தென்னிந்திய கட்டுமானக் கோயில்கள் முதன்மையானதாக கருதப்படுவது?

 A.மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்✓
 B.கங்கைகொண்ட சோழபுரம்
 C.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
 D.மதுரை மீனாட்சி அம்மன்

99. எம்.ஜி.ஆர் அவர்கள் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை எங்கு சிறப்பாக நடத்தினார்

 A.மதுரை✓
 B.கோவை
 C.திருச்சி
 D.சென்னை

100.Simplify: 4-[6-{12-(10-8+6)}]

A.4
B.2✓
C.6
D.8
*****************************************
Whatsapp ல் இணைந்திட
tnkural.com tnpsc 11

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY