Ads Right Header

POLITY - இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்!


இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்

 1 . கூட்டாட்சி ( கூட்டாட்சி போல்வு ) : கூட்டாட்சி என்பது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது ( அதாவது ஒரு நிலப்பரப்பை இரு அரசாங்கங்கள் ஆட்சி செய்வது )

2 . அதிகாரப்பகிர்வு : அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன .

3 . அரசியலமைப்பின் மேலாண்மை : இந்தியாவில் மிக உயர்ந்தது இந்த சட்டம் இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதை குறிக்கிறது .

4 . எழுதப்பட்ட அரசியலமைப்பு : அரசியலமைப்புச் சட்டம் இயற்ற ஒரு குழு அமைத்து தனியாக ஒரு ஆவணமாக உள்ளது . நாட்டில் உள்ள அனைத்துச் சட்டங்களும் இதற்கு உட்பட்டு இருக்க வேண்டும் .

5 . நீதிமன்றங்களின் அதிகாரம் : இந்தியாவின் மூன்று அதிகார அமைப்புகளான சட்டமியற்றும் துறை , செயல்படுத்தும் துறை (நிர்வாகத் துறை) நீதித்துறை ஆகியவற்றில் , நீதித்துறையானது மற்ற இரு துறைகளின் செயல்பாடுகளை , அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்று கவனிக்கிறது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி சட்டம் இயற்றப்பட்டாலோ அல்லது செயல்பட்டாலோ அதை செல்லாது என்று அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது .

6 . ஒன்றையாட்சி அரசியலமைப்பு வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் , அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரே ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது .


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY