TNPSC TAMIL
சேர்த்து எழுதுதல் (புணர்ச்சி)
1. புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி:
இரண்டு சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதைப் புணர்ச்சி என இலக்கணம் கூறும். அவ்விரு சொற்களில் முதலில் நிற்கும் சொல் நிலைமொழி எனப்படும்; அடுத்து சேர வரும் சொல் வருமொழி எனப்படும். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை நோக்குக.
கண்ணன் + வந்தான் = கண்ணன் வந்தான்
வாழை + கனி = வாழைக்கனி
மரம் + நிழல் = மர நிழல்
சமையல் + கலை = சமையற்கலை
மேற்கூறிய எடுத்துகாட்டுகளில் கண்ணன், வாழை, மரம், சமையல் என்பன நிலைமொழிகள், வந்தான், கனி, நிழல், கலை என்னும் சொற்கள் வருமொழிகள். முதல் எடுத்துக்காட்டில், புணர்ச்சிக்குப் பின்னர் இரு சொற்களிலும் எவ்வித மாற்றமுமில்லை;
எனவே இது இயல்புப் புணர்ச்சி எனப்படும். அடுத்த எடுத்துக்காட்டுகளில் புணர்ச்சிக்குப் பின்னர் சில மாற்றங்கள் தோன்றியுள்ளன எனவே இவை விகாரப் புணர்ச்சிகள் (விகாரம் என்றால் மாறுதல்) எனப்படும்.
இரண்டாம் எடுத்துக் காட்டில் க் என்னும் மெய்யெழுத்து புணர்ச்சிக்குப்பின் தோன்றியுள்ளதால் இது தோன்றல் விகாரப் புணர்ச்சியாகும். மூன்றாம் எடுத்துக்காட்டில் ம் என்னும் மெய்யெழுத்து புணர்ச்சிக்குப் பின் மறைந்து விட்டது அல்லது கெட்டுவிட்டது; எனவே இது கெடுதல் விகாரப் புணர்ச்சியாகும். கடைசி எடுத்துக்காட்டில் புணர்ச்சிக்குப்பின் ல் என்னும் மெய்யெழுத்து ற் என்னும் மெய்யெழுத்தாகத் திரிந்து விட்டதால் இது திரிதல் விகாரப் புணர்ச்சியாகும்.
2. சந்தி:
இரு சொற்கள் சேரும் போது நிலைமொழியின் (அதாவது முதல் சொல்லின்) இறுதி எழுத்தும், வருமொழியின் (அதாவது அடுத்த சொல்லின்) முதல் எழுத்தும் இணைகின்றன; அப்போது உண்டாகும் மாற்றமே சந்தி எனப்படுகிறது என்பதை ஏற்கனவே கண்டோம். மேலும், சொல்லின் இறுதியில் வரும் மொழி ஈற்றெழுத்துக்கள், சொல்லின் முதலில் வரும் மொழிமுதல் எழுத்துக்கள் எவையெவை என்பதையும் பார்த்தோம். இப்போது சந்தி மாற்றங்களைப் பற்றி அறிவோம்.
2.1.
நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும் உயிர் எழுத்தாக இருத்தல் (உயிர் முன் உயிர் புணர்தல், அதாவது உயிர் + உயிர்) நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துக்கள் அமைய இரு சொற்கள் இணைவதை உயிர் முன் உயிர் புணர்தல் என்பர். அவ்வாறு இரு சொற்களிலும் உயிர் எழுத்துக்கள் வந்தால் அவை இரண்டையும் ஒன்றுபடுத்தும் பொருட்டு இடையில் சில மெய்யெழுத்துக்கள் தோன்றிப் புணரும். அம்மெய்யெழுத்துக்கள் வ் மற்றும் ய் என்னும் இரண்டுமாகும். இரு உயிர்களை ஒன்றுபடுத்தும் மெய் என்பதால் இவற்றை உடம்படுமெய்கள் என அழைப்பர்; அதாவது வகர உடம்படு மெய், யகர உடம்படுமெய் என இவை கூறப்படும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக:
அடி + இணை = அடியிணை
தீ + அணைப்பு = தீயணைப்பு
வேலை + ஆள் = வேலையாள்
கோ + இல் = கோவில் / கோயில்
மா + இலை = மாவிலை
பூ + இதழ் = பூவிதழ்
சே + அடி = சேவடி
வர + இல்லை = வரவில்லை
இ, ஈ, ஐ என்பவை நிலைமொழியின் ஈறாக வந்தால் யகர உடம்படு மெய்யும், ஓ என்பது நிலை மொழியின் ஈறாக வந்தால் வகர/யகர உடம்படு மெய்களும், ஏனைய உயிரெழுத்துகள் நிலை மொழியின் ஈறாக வந்தால் வகர உடம்படு மெய்யும் புணர்ச்சியில் தோன்றும்.
2.2
நிலைமொழியின் ஈற்றில் உயிரும் வருமொழி முதலில் மெய்யும்(அதாவது உயிர்மெய்யும்) வருதல். [உயிர் முன் மெய் புணர்தல், அதாவது உயிர் + மெய்]
(i) நிலைமொழியின் ஈற்றில் அ
* அ, இ எனும் சுட்டெழுத்துக்களின் பின்னும் எ என்னும் வினா எழுத்தின் பின்னும் அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயரடைகளின் பின்னும், எந்த என்னும் வினாப்பெயரடையின் பின்னும், வல்லினம் (ஒற்று) மிகும்.
எடுத்துக்காட்டு:
அ + காடு = அக்காடு
இ + சோதனை = இச்சோதனை
எ + தோட்டம் = எத்தோட்டம்?
அந்த + பெயர் = அந்தப்பெயர்
இந்த + திருடன்= இந்தத்திருடன்
எந்த + பாடம் = எந்தப்பாடம்?
* போக, வர, படிக்க(செய) என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு:
போக + கண்டேன் = போகக் கண்டேன்
வர + சொல் = வரச்சொல்
படிக்க + படிக்க = படிக்கப் படிக்க
* நல்ல, இன்ன, இன்றைய போன்ற பெயரடைகளின் பின்னும் படித்த, எழுதாத போன்ற பெயரெச்சங்களின் பின்னும் வல்லினம் மிகாது.
எடுத்துக்காட்டு:
நல்ல + கதை = நல்ல கதை
இன்ன + பெயர் = இன்ன பெயர்
இன்றைய + தமிழ் = இன்றைய தமிழ்
படித்த + புத்தகம் = படித்த புத்தகம்
எழுதாத + கவிதை = எழுதாத கவிதை
(ii) நிலைமொழியின் ஈற்றில் ஆ
* சில தொகைச் சொற்களில் வல்லின ஒற்று மிகும் (தொகைச் சொற்கள் பற்றி இங்கு விளக்கப்படவில்லை)
எடுத்துக்காட்டு:
பலா + கொட்டை = பலாக் கொட்டை
பாப்பா + பாட்டு = பாப்பாப் பாட்டு
திருவிழா + கூட்டம் = திருவிழாக் கூட்டம்
ஊதா + பூ = ஊதாப் பூ
* சில பெயர்-வினை கூட்டுச் சொற்களில் வல்லின ஒற்று மிகும். -கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது சில இடங்களில் ஒற்று மிகும்; சில இடங்களில் மிகாது.
எடுத்துக்காட்டு:
கனா + கண்டு = கனாக் கண்டு
விலா + புடைக்க = விலாப் புடைக்க
புறா + கள் = புறாக்கள்
வெண்பா + கள் = வெண்பாக்கள்
ஆனால் வீடு + கள் = வீடுகள் என்றே வரும்.
காடுகள், புலவர்கள், பெட்டிகள், பெண்கள், பாடல்கள் ஆகியவற்றிலும் ஒற்று மிகுவதில்லை.
(iii) நிலைமொழி ஈற்றில் இ
* இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையிலும்,
பெயர்ச்சொல் அடை போன்றவற்றின் பின்னும் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
துணியை விற்கும் கடை என்னும் பொருளில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாக துணி + கடை = துணிக்கடை என வரும்.
வண்டி + காளை = வண்டிக்காளை
எலி + பொறி = எலிப்பொறி
குட்டி + பையன் = குட்டிப் பையன் (குட்டி என்பது பெயரடை)
* வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு:
தேடி + சென்றான் = தேடிச் சென்றான்
ஆடி + களித்தான் = ஆடிக் களித்தான்
ஓடி + களைத்தான் = ஓடிக் களைத்தான்
நாடி + போனான் = நாடிப் போனான்
* உம்மைத் தொகையில், முதற் சொல் வினையடியாக இருக்கையில் (வினைத்தொகையில்), -கள் பன்மை விகுதி சேர்கையில் வல்லின ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
செடி + கொடி = செடி கொடி (செடியும் கொடியும் எனும் சொற்களில் உம்
விகுதி தொக்கி/ மறைந்து வருவது உம்மைத் தொகை).
பொரி + கடலை = பொரி கடலை
வெடி + குண்டு = வெடி குண்டு
குடி + தண்ணீர் = குடி தண்ணீர்
செடி + கள் = செடிகள்
கல்லூரி + கள் = கல்லூரிகள்
(iv) நிலைமொழி ஈற்றில் ஈ
* ஈ, தீ, போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பின்னும் -கள் என்னும் பன்மை விகுதியிலும் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
ஈ + கடி = ஈக்கடி
தீ + சுடர் = தீச்சுடர்
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
ஈ + கள் = ஈக்கள்
(v) நிலைமொழி ஈற்றில் உ
* கு, சு, டு, ணு, பு, து, று, ரு, ழு, வு கிய எழுத்துக்களில் முடியும் பெயர்ச் சொற்களின் பின்னர் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
தேக்கு + கட்டை = தேக்குக் கட்டை
பஞ்சு + பொதி = பஞ்சுப் பொதி
துண்டு + தாள் = துண்டுத் தாள்
அணு + திரள் = அணுத் திரள்
மருந்து + பை = மருந்துப் பை
வம்பு + சண்டை = வம்புச் சண்டை
மாற்று + தொழில் = மாற்றுத் தொழில்
தெரு + சண்டை = தெருச் சண்டை
முழு + பொறுப்பு = முழுப் பொறுப்பு
நெசவு + தொழில் = நெசவுத் தொழில்
* டு, று என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் இறுதி இரட்டித்து வல்லின ஒற்று மிகும். -ட்டு, -த்து, -ற்று என முடியும் வினையெச்சங்களின் பின்னும் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு:
ஆடு + தலை = ஆட்டுத் தலை
சோறு + பானை = சோற்றுப் பானை
கேட்டு + சொல் = கேட்டுச் சொல்
விற்று + கொடு = விற்றுக் கொடு
செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்
* கூட்டுச் சொற்களில் முதல் சொல் வினையடியாக இருந்தால் (வினைத் தொகையில்)வல்லின ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
சுடு + சோறு = சுடு சோறு
ஆடு + களம் = ஆடு களம்
தேடு + பொறி = தேடு பொறி
* -ண்டு, -ந்து, -ய்து, -ன்று என முடியும் வினையெச்சங்களின் பின் வல்லின ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
கண்டு + திகைத்தான் = கண்டு திகைத்தான்
செய்து +பார்த்தனர் = செய்து பார்த்தனர்
வந்து + காத்திரு = வந்து காத்திரு
மென்று + சாப்பிடு = மென்று சாப்பிடு
* சு, ணு, ரு, ழு, னு ஆகியவற்றில் முடியும் ஈரசை சொற்களின் முதலெழுத்து உயிர்க்குறிலாக இருந்தால் கள் விகுதி சேரும் போது வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
கொசு + கள் = கொசுக்கள்
அணு + கள் = அணுக்கள்
தெரு + கள் = தெருக்கள்
குழு + கள் = குழுக்கள்
மனு + கள் = மனுக்கள்
ஈரசைச் சொற்களின் முதலெழுத்து உயிர் நெடிலாக இருப்பின் ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
காசு + கள் = காசுகள்
* மூவசைச் சொற்களின் பின்னும், வு என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் பின்னும் ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
கொலுசு + கள் = கொலுசுகள்
தராசு + கள் = தராசுகள்
ஆய்வு + கள் =ஆய்வுகள்
* -ட்டு, -த்து ஆகியவற்றின் பின் -கள் சேரும் போது வல்லின ஒற்று மிகலாம், மிகாமலும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டு:
பாட்டு + கள் = பாட்டுக்கள்/பாட்டுகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்
எழுத்து + கள் = எழுத்துக்கள் (letters) /எழுத்துகள் (writings)
* அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்களின் பின் வல்லினம் மிகுவது தற்காலத்தமிழில் இல்லை.
எடுத்துக்காட்டு:
அங்கு + கண்டேன் = அங்கு கண்டேன்
இங்கு + பார் = இங்கு பார்
எங்கு + செல்வது = எங்கு செல்வது?
(vi) நிலைமொழி ஈற்றில் ஊ
* பூ போன்ற ஓரெழுத்துச் சொல்லின் பின்னர் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
பூ + செடி = பூச்செடி
பூ + போல = பூப்போல
வாழைப்பூ + பொரியல் = வாழைப்பூப் பொரியல்
* க், ச், த், ப் என்பவற்றின் இன எழுத்துக்களான ங், ஞ், ந், ம் தோன்றுவதும் உண்டு.
எடுத்துக்காட்டு:
பூ + கொடி = பூங்கொடி
பூ + செடி = பூஞ்செடி
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + பாவை = பூம்பாவை
(vii) நிலைமொழி ஈற்றில் ஏ
* வல்லின ஒற்று மிகுவதில்லை.
எடுத்துக்காட்டு:
அங்கே + கண்டேன் = அங்கே கண்டேன்
இங்கே + பார் = இங்கே பார்
உள்ளே + செல் = உள்ளே செல்
வெளியே + துரத்து = வெளியே துரத்து
எங்கே + போகிறாய் = எங்கே போகிறாய்?
(viii) நிலை மொழி ஈற்றில் ஐ
* கை, தை போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பி வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
கை + துண்டு = கைத்துண்டு
தை + பொங்கல் = தைப்பொங்கல்
* இரு பெயர்கள் இணைந்து வரும்போது முதல் பெயர் சிறப்புப் பெயராகவும், இரண்டாவது பொதுப் பெயராகவும் இருப்பின் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
பச்சை + கிளி = பச்சைக்கிளி
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ,
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
சித்திரை + திங்கள் = சித்திரைத்திங்கள்
* இடப்பெயர்கள், திசைகள் ஆகியவற்றின் பின்பு பெயர்ச் சொற்கள் வந்தால் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
மதுரை + கல்லூரி = மதுரைக் கல்லூரி
கீழை + தெரு = கீழைத் தெரு
மேலை + சேரி = மேலைச் சேரி
* சில வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு:
குதிரை + குளம்பு = குதிரைக் குளம்பு
கை + தொழில் = கைத் தொழில்
மண்பானை + சமையல் = மண்பானைச் சமையல்
அவை + தலைவர் = அவைத் தலைவர்
* இரண்டாம் வேற்றுமை உருபு ஐ மறையாமல் வந்தால், அதாவது இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
கையை + பிடி = கையைப் பிடி
பழத்தை + கடி = பழத்தைக் கடி
பணத்தை + செலுத்து = பணத்தைச் செலுத்து
கதவை + தட்டு = கதவைத் தட்டு
* ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
மோர் + குடி = மோர் குடி
* உம்மைத் தொகையில் வல்லின ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டு:
கை + கால் = கை கால்
இலை + தழை = இலை தழை
சண்டை + சச்சரவு = சண்டை சச்சரவு
[நிலை மொழி ஈற்றில் ஏ, ஒ என்னும் உயிரெழுத்துக்கள் வருவதில்லை; ஓ ஆகியன வருவதும் மிக மிகக் குறைவு.]
2.3
நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்தும், வருமொழி முதலில் உயிரெழுத்தும் இருத்தல் (மெய் முதல் உயிர் புணர்தல், அதாவது மெய் + உயிர்)
(i) நிலை மொழி ஈற்றில் க்
எடுத்துக்காட்டு:
பிளாஸ்டிக் + ல் = பிளாஸ்டிக்கால்
(க் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வருமொழி வேற்றுமை உருபாக இருப்பின் க் இரட்டிக்கும்).
(ii) நிலைமொழி ஈற்றில் ங்
எடுத்துக்காட்டு:
மன்மோகன்சிங் + ஆல் = மன்மோகன்சிங்கால்
(ங் என்ற எழுத்தில் முடியும் பிறமொழிச் சொற்களோடு தமிழ் விகுதி இணையும்போது ங்-இன் இன எழுத்தான க் வந்து சேர்கிறது.)
(iii) நிலைமொழி ஈற்றில் ச்
எடுத்துக்காட்டு:
சர்ச்+ இல் = சர்ச்சில்
சர்ச் + உம் = சர்ச்சும்
(ச் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச் சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது.)
எடுத்துக்காட்டு:
பிராஞ்ச் + இல் = பிராஞ்சில்
(தனது இன எழுத்தாகிய மெல்லின ஞ் உடன் ச் வரும்போது இரட்டிப்பதில்லை.)
(iv) நிலைமொழி ஈற்றில் ட்
எடுத்துக்காட்டு:
பட்ஜெட் + ஐ = பட்ஜெட்டை
பட்ஜெட் + ஆனது = பட்ஜெட்டானது
(ட் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச்சொற்களையும் ஏற்கும் போது இரட்டிக்கிறது.)
(v) நிலைமொழி ஈற்றில் ண்
எடுத்துக்காட்டு:
பெண் + ஆசை = பெண்ணாசை
விண் + உலகம் = விண்ணுலகம்
(முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்தால் ண் இரட்டிக்கும்).
(vi) நிலைமொழி ஈற்றில் த்
எடுத்துக்காட்டு:
காமன்வெல்த் + இல் = காமன்வெல்த்தில்
குவைத் + உம்= குவைத்தும்
(த் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச்சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது.)
எடுத்துக்காட்டு:
பிரேம்சந்த் + இன் = பிரேம்சந்தின் (தனது இன எழுத்தாகிய மெல்லின ந் உடன் த் வரும்போது இரட்டிப்பதில்லை.)
(vii) நிலைமொழி ஈற்றில் ம்
எடுத்துக்காட்டு:
அகம் +இதழ் = அகவிதழ்
புறம் + ஊர் + புறவூர்
(ம் மறைந்து, வ் என்னும் உடம்படு மெய் வருவதுண்டு.)
எடுத்துக்காட்டு:
பழம் + உற்பத்தி = பழ உற்பத்தி
கணிதம் + ஆசிரியர் = கணித ஆசிரியர்
மாநிலம் + அளவில் = மாநில அளவில்
(ம் மறைந்தாலும், உடம்படு மெய் வராமல் எழுதப்படுகிறது.)
எடுத்துக்காட்டு:
ஆயிரம் + ஆயிரம் = ஆயிரமாயிரம்
குற்றம் + அனைத்தும் = குற்றமனைத்தும்
(நிலைமொழி இறுதி மெய்யும் வருமொழி முதலிலுள்ள உயிரும் இணைந்து உயிர் மெய்யாக மாறுகிறது.)
(viii) நிலைமொழி ஈற்றில் ய்
எடுத்துக்காட்டு:
மெய் + அன்பு = மெய்யன்பு
பொய் + க = பொய்யாக
(முதல் சொல் ஒரசையாகவும், அதில் வரும் உயிர் குறிலாகவும் இருப்பின் ய் இரட்டிக்கும்.)
(ix) நிலைமொழி ஈற்றில் ல்
எடுத்துக்காட்டு:
சொல் + அடுக்கு = சொல்லடுக்கு / சொல் அடுக்கு
பல் + இடுக்கு = பல்லிடுக்கு / பல் இடுக்கு
சொல் + ஆராய்ச்சி = சொல்லாராய்ச்சி / சொல் ஆராய்ச்சி
(ஈறிலுள்ள எழுத்து இரட்டித்த நிலையில் சேர்த்தும், இயல்பு நிலையில் பிரித்தும் எழுதப் படுகின்றன.)
(x) நிலைமொழி ஈற்றில் ள்
எடுத்துக்காட்டு:
எள் + அளவும் = எள்ளளவும்
கள் + உண்ணல் = கள்ளுண்ணல்/கள் உண்ணல்
(முதல் சொல் ஒரசையாகவும், அதில் வரும் உயிர் குறிலாகவும் இருப்பின் ள் இரட்டிக்கும்; இயல்பாக எழுதுவதும் உண்டு.)
(xi) நிலைமொழி ஈற்றில் ன்
* எடுத்துக்காட்டு:
சூரியன் +ஆற்றல் = சூரிய ஆற்றல்
சந்திர + ஒளி = சந்திர ஒளி
(வேற்றுமை உறவு கொண்ட சொற்களின் ந் மறையும்; ன் மறைந்தாலும், உடம்படு மெய் வராமல் எழுதப்படுகிறது)
* எடுத்துக்காட்டு:
பொன் + ஆசை = பொன்னாசை/ பொன் ஆசை
மின் + அணு = மின்னணு / மின் அணு
மின் + அஞ்சல் = மின்னஞ்சல் / மின் அஞ்சல்
மின் + இணைப்பு = மின்னிணைப்பு / மின் இணைப்பு
(முதல் சொல் ஓரசையாகவும், அதில் வரும் உயிர் குறிலாகவும் இருப்பின் ன் இரட்டிக்கும்; இயல்பாக எழுதுவதும் உண்டு.)
(xii) நிலைமொழி ஈற்றில் ஜ், ஷ், ஸ்
எடுத்துக்காட்டு:
காலேஜ் = இல் + காலேஜில்
தமாஷ் +ஆ = தமாஷாக
பஸ் + ஐ= பஸ்ஸை
(ஜி, ஷா, என உயிர் மெய்யாக எழுதப்படுகின்றன; ஸ் இரட்டித்து ஸ்ஸை வரும்)
2.4
நிலைமொழி ஈற்றிலும் மெய், வருமொழி முதலிலும் மெய் (அதாவது, உயிர் மெய்)இருத்தல் [மெய் முதல் மெய் புணர்தல், அதாவது மெய் + மெய்]
(i) நிலைமொழி ஈற்றில் ண்
* வருமொழி முதலில் க்,ச்,த்,ப்,ம் இருந்தால் மாற்றமின்றி எழுதுவதே இப்போதைய
வழக்கு.
எடுத்துக்காட்டு:
மண் + குடம் = மண் குடம்
மண் + சுவர் = மண் சுவர்
மண் + பானை = மண் பானை
கண் + மலர் = கண் மலர்
* வருமொழி முதலில் ந் இருப்பின், அது ண் என மாற்றமடையும்.
எடுத்துக்காட்டு:
தண் + நீர் = தண்ணீர்
விண் + நோக்கி = விண்ணோக்கி
(ii) நிலைமொழி ஈற்றில் ம்
* வேற்றுமை உறவில், அடை ஏற்ற நிலையில், உவமிக்கும் வகையில் இரு பெயர்ச் சொற்கள் இணையும் போது வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
மரம் + கிளை = மரக் கிளை
சட்டம் + திருத்தம் = சட்டத் திருத்தம்
காலம் + சக்கரம்= காலச் சக்கரம்
நகரம் + பேருந்து = நகரப் பேருந்து
சங்கம் + பாடல் = சங்கப் பாடல்
நாகரிகம் + செயல்= நாகரிகச் செயல்
* வருமொழி முதலில் க், ச், த், மெய்கள் உயிருடன் இணைந்து வரும்போது, நிலை மொழி ஈற்றிலுள்ள ம் அம்மெய்களின் இன எழுத்துக்களாக மாறும்
எடுத்துக்காட்டு:
மனம் + கலங்கு = மனங்கலங்கு
கடும் + சொல் = கடுஞ்சொல்
மாதம் + தோறும் = மாதந்தோறும்
நிலம் + கள் = நிலங்கள்
* வேற்றுமை உறவில் ம் என்னும் எழுத்து மறையும்.
எடுத்துக்காட்டு:
குலம் + முறை = குல முறை
திருமணம் + வாழ்த்து = திருமண வாழ்த்து
வேற்றுமைத் தொகை இல்லாத நிலையில் ம் மறைவதில்லை
எடுத்துக்காட்டு:
மாநிலம் + முழுவதும் = மாநிலம் முழுவதும்
* வருமொழி முதலில் ப் இருப்பின், ம் மறைவதில்லை.
எடுத்துக்காட்டு:
பெரும் + பங்கு = பெரும் பங்கு
மூன்றாம் + பிறை = மூன்றாம் பிறை
(iii) நிலைமொழி ஈற்றில் ய்
* வேற்றுமை உறவில், இரு பெயர்ச் சொற்கள் இணைகையில், ய் என்பதில் முடியும்
வினையெச்சத்தின் பின்னர் க், ச், த், ப் ஆகிய வல்லொற்றுக்கள் மிகும்.
எடுத்துக்காட்டு:
பேய் + காற்று = பேய்க் காற்று
தாய் + பாசம் = தாய்ப் பாசம்
வாய் + சொல் = வாய்ச் சொல்
பொய் + தூக்கம் = பொய்த் தூக்கம்
போய் + சேர் = போய்ச் சேர்
நன்றாய் + தெரிகிறது = நன்றாய்த் தெரிகிறது
(iv) நிலைமொழி ஈற்றில் ர்
* வேற்றுமை உறவில், இரு பெயர்ச் சொற்கள் இணைகையில் க், ச், த், ப் ஆகிய
வல்லொற்றுக்கள் மிகும்.
எடுத்துக்காட்டு:
நீர் + கோவை = நீர்க் கோவை
நகர் + பகுதி = நகர்ப் பகுதி
தயிர் + சோறு = தயிர்ச் சோறு
வெளிர் + பச்சை = வெளிர்ப் பச்சை
திடீர் + புரட்சி = திடீர்ப் புரட்சி
உயிர் + தோழன் = உயிர்த் தோழன்
* வினைத் தொகையில் வல்லின ஒற்று மிகுவதில்லை.
எடுத்துக்காட்டு:
உயர் + குடி = உயர் குடி
வளர் + தமிழ் = வளர் தமிழ்
(v) நிலைமொழி ஈற்றில் ல்
* சில கூட்டுச் சொற்களில் ல் என்பது ற் என மாற்றமடையும்.
எடுத்துக்காட்டு:
நெல் + கதிர் = நெற் கதிர்
கல் + சிலை + கற் சிலை
பால் + குடம் = பாற் குடம்
கல் + குவியல் = கற் குவியல்
சொல் + செட்டு = சொற் செட்டு
சொல் + கள் = சொற்கள்
ஏற்றால் + போல் = ஏற்றாற் போல்
தகுந்தால் + போல் = தகுந்தாற் போல்
* சில கூட்டுச் சொற்கள் இயல்பாகவும், சந்தி மாற்றத்துடனும் எழுதப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
முதல் + கடவுள் = முதல் கடவுள் / முதற் கடவுள்
சொல் + பயிற்சி = சொல் பயிற்சி / சொற் பயிற்சி
சொல் + தொகை = சொல் தொகை / சொற்றொகை
மனதில் + கொண்டு = மனதில் கொண்டு / மனதிற் கொண்டு
* சில கூட்டுச் சொற்களில் சந்தி மாற்றம் உண்டாவதில்லை.
எடுத்துக்காட்டு:
கேட்காமல் + கொடு = கேட்காமல் கொடு
காணாமல் + போல் = காணாமல் போ
(vi) நிலைமொழி ஈற்றில் ழ்
* பொதுவாக வல்லின ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
தமிழ் + கல்வி= தமிழ்க் கல்வி
தமிழ் + செய்யுள் = தமிழ்ச் செய்யுள்
கீழ் + கூரை = கீழ்க் கூரை
கீழ் + தாடை = கீழ்த் தாடை
கீழ் + பகுதி = கீழ்ப் பகுதி
(vii) நிலைமொழி ஈற்றில் ள்
* சந்தியில் ள் என்பது ட் என மாறுவதுண்டு; இயல்பாக எழுதப்படுவதும் உண்டு.
எடுத்துக்காட்டு:
திங்கள் + கிழமை = திங்கட் கிழமை / திங்கள் கிழமை
செய்யுள் + சிறப்பு = செய்யுட் சிறப்பு / செய்யுள் சிறப்பு
* சில இடங்களில் சந்தி வருவதில்லை.
எடுத்துக்காட்டு:
மக்கள் + தொகை = மக்கள் தொகை
தோள் + பட்டை = தோள் பட்டை
* -கள் விகுதி சேர்கையில் ள், ட் என மாறாமல் இருப்பதும், இரு வகையில் வருவதும் உண்டு.
எடுத்துக்காட்டு:
தாள் + கள் = தாள்கள்
சுருள் + கள் = சுருள்கள்
ஆள் + கள்= ஆட்கள் / ஆள்கள்
நாள் + கள் = நாட்கள் / நாள்கள்
பொருள் + கள் = பொருட்கள் / பொருள்கள்
* நிலைமொழியின் உயிரெழுத்து குறிலாக இருகும் ஓரசைச் சொற்களில், உ சாரியையுடன் ள் இரட்டித்து ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
கள் + கடை = கள்ளுக் கடை
எள் + பொடி = எள்ளுப் பொடி
முள் + செடி = முள்ளுச் செடி
(viii) நிலைமொழி ஈற்றில் ன்
* வேற்றுமை உறவு கொண்ட சொற்களிலும், வருமொழி முதலில் ந்,ம்,வ் இருப்பினும், ன் மறையும்.
எடுத்துக்காட்டு:
அரசன் + கட்டளை = அரச கட்டளை
மன்மதன் + பாணம் = மன்மத பாணம்
அரசன் + நீதி = அரச நீதி
சந்திரன் + மண்டலம் = சந்திர மண்டலம்
சூரியன் + வழிபாடு = சூரிய வழிபாடு
* சில கூட்டுச் சொற்களில் ன் எனும் எழுத்து ற் ஆக மாறுவதுண்டு.
எடுத்துக்காட்டு:
பொன் + காசு = பொற்காசு
முன் + காலம் = முற்காலம்
பொன் + சிலை = பொற்சிலை
* நிலை மொழி ஓரசைச் சொல்லாக இருந்து, வருமொழி முதலில் ந் இருப்பின் ன் இரட்டிப்பதுண்டு. தற்காலத்தில் சந்தியில்லாமலே எழுதும் வழக்கமும் உள்ளது.
எ - டு:
பொன் + நிறம் = பொன்னிறம் / பொன் நிறம்
முன் + நோக்கி = முன்னோக்கி / முன் நோக்கி
பின் + நோக்கி = பின்னோக்கி / பின் நோக்கி
இக்கட்டுரையில் சந்தி பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகள் முழுமையானவை என்று கூற முடியாது. ஆனால் போதுமான அளவு செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. சந்தி பற்றித் தமிழறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது எனவும் கூற இயலாது. மேலும் வல்லெழுத்து மிகுந்தால் ஒரு பொருளும், மிகாவிடின் வேறொரு பொருளும் தருவதால், பொருளறிந்து சந்தியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக:
ஓதி கண்டான் (கூந்தலைக் கண்டான்)
ஓதிக் கண்டான் (படித்துக் கண்டறிந்தான்)
பாடி கண்டான் (வீரர் தங்கியுள்ள பசறையைக் கண்டான்)
பாடிக் கண்டான் (பாடல் பாடி அறிந்தான்)
Whatsapp ல் இணைந்திட
Cli
சேர்த்து எழுதுதல் - முழு விளக்கம்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment