Ads Right Header

இந்திய அரசியலமைப்பின் முகவுரை குறித்த விளக்கம்!


முகப்புரை

இந்திய மக்களாகிய நாம் , இந்தியாவை ஒரு இறைமை வாய்ந்த சமநிலமை நெறி சார்ந்த சமயச் சார்பற்ற , மக்களாட்சி குடியரசாக அமைக்கவும் , அதன் குடிமக்கள் அனைவருக்கும் . சமுதாய , பொருளாதார மற்றும் அரசியல் நிதியும் சிந்தனையில் , சிந்தனை வெளிப்பாட்டில் , நம்பிக்கையில் , பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும் தகுநிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் , உறுதியாகக் கிடைக்கச் செய்யவும் . தனி ஒருவரின் மாண்புக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் , ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் உடன்பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும் விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949 , நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலமைப்பு பேரவையில் , இந்த அரசியலமைப்பை ஏற்று சட்டமாக இயற்றி , நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் .

முகப்புரை - விளக்கம்

சட்ட அறிமுகமே அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை ஆகும் * மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும் , இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம சமய மதச்சார்பற்ற , மக்களாட்சி நாடாக உள்ளது என முகப்புரைத் தெளிவுபடுத்துகிறது .

நீதி , சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் ஆகியவை நமது நோக்கங்கள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுகிறது .

ரீ பெருபாரி ( Re Berubsari ) ( 1960 ) வழக்கில் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறப்பட்டது .

 கேசவானந்த பாரதி ( 1973 ) வழக்கில் முகப்புரையானது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது .

S . R . பொம்மை ( 1994 ) என்ற வழக்கில் முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது .

கேசவானந்த பாரதி ( 1973 ) வழக்கில் முகப்புரையை திருத்தலாம் ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை கட்டமைப்புகளை  திருத்த முடியாது எனப்பட்டது .

சமத்துவமும், சமயச் சார்பின்மை  மற்றும் ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் 1976 - ஆம் ஆண்டின் 42 - வது சட்டத் திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்டது.

 இறையாண்மை

இது அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் , குறிப்பாக தேர்தல் என்னும் அதிகாரத்தில் இந்திய மக்களுக்கு முழு உரிமைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது .

மத்திய , மாநில அரசுகள் மக்களிடமிருந்துதான் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்கின்றன . குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய , மாநில அரசுகளுக்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் . இப்பிரதிநிதிகள் அரசின் நிர்வாக அதிகாரங்களை பெற்றுள்ளார்கள்.

 இப்பிரதிநிதிகள் அரசியல் நிர்வாக அதிகாரங்களை பெற்றுள்ளார்கள். இவர்கள் சட்டமன்றங்களுக்கு பொறுப்பாளர்களாகவும் , மக்களுக்கு சட்டமன்றங்களின் வழியாக பணியாற்ற கடமைப்பட்டவர்களும் ஆவர் . ஆகவே இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களே உயர் அதிகாரம் மிக்கவர்கள் , இதுவே இறையாண்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும் .

மதச்சார்பின்மை / சமய சார்பின்மை

இந்தியா மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது .
செக்யூலரிசம் ( Secularism ) என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்தது.1789 - ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி மதச் சார்பின்மையை வலியுறுத்தியது.

1791 - ம் ஆண்டு பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டம் பிரான்சு அரசை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது

மகாராஜா ரஞ்சித் சிங் முதன் முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தினார்

1888 - ல் இந்திய தேசிய காங்கிரஸ் மதச்சார்பின்மையை அறிமுகப்படுத்தியது .

மகாத்மா காந்தி துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்த போது மதச் சார்பின்மை கருத்து பிரபலமடைந்தது .

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் மதச் சார்பின்மை ஆகும் .

இந்திய அரசாங்கம் எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கவில்லை, அனைத்துக் குடிமக்களும் தமது சமயத்தின்படி சுதந்திரமாக வழிபடவும் சமூக மற்றும் அரசியலில் சமமான உரிமைகளை அனுபவிக்கவும் முடியும்.

 நாடாளுமன்ற அரசு முறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற முறை அரசு நடைமுறையில் உள்ளது.

அரசியல் நிர்வாகக்குழு , சட்டமன்ற நடவடிக்கைகள் இவைகளுக்கு இந்நாடாளுமன்றமே பொறுப்பாகும்.

 நாடாளுமன்ற அரசு முறையை பொறுப்பு அரசு அல்லது காபினேட் அரசு என்றும் அழைப்பர் .

மக்களாட்சி

மக்களாட்சி முறையில் அரசின் அதிகாரங்கள் மக்களின் கையில் கொடுக்கப்பட்டன .

மக்களாட்சியில் மக்கள் குடிமக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

மக்களாட்சியின் தூண்
என்பது தேர்தல் ஆகும் .

சமத்துவம் , உரிமை , சுதந்திரம் ஆகியவை மக்களாட்சியின் அடிப்படை ஆகும் .

மக்களாட்சியில் நேரடி மக்களாட்சி , மறைமுக மக்களாட்சி என இருவகை உண்டு .

 சுவிட்சர்லாந்து போன்ற மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது .

மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.

 இந்தியா , இங்கிலாந்து , பிரான்சு , அமெரிக்கா போன்ற நாடுகள் மறைமுக மக்களாட்சி முறையைப் பின்பற்றுகின்றன .

இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது .

இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி முறையை பின்பற்றுகிறது  மத்திய அரசில் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பு நாடாளுமன்றம் எனவும் , மாநிலங்களில் சட்டமன்றம் எனவும் அழைக்கப்படுகிறது .

 மறைமுக அல்லது மக்களின் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் பிரதிநிதிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY