Ads Right Header

தமிழகத்தின் பொருளாதார போக்குகள்! (தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்)



தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும் . ( Economic trends in Tamil Nadu - Role and impact of social welfare schemes in the Socio - economic development of Tamil Nadu . )

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் சிறப்புகள்

* பூகோள ரீதியாக தமிழ்நாடு , இந்தியாவில் 11 வது பெரிய மாநிலமாகும் .

* மக்கள் தொகை அடிப்படையில் 6 - வது பெரிய மாநிலமாகும் .

* இந்திய மாநிலங்களில் , தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது .

* மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் இரண்டாவது இடத்திலும் , தலா வருமான முதலீடு , நேரடி அந்திய முதலீடு மற்றும் தொழிற் துறை உற்பத்தி ஆகியவற்றில் 3 - வது இடத்திலும் உள்ளது ,

* சமூக மற்றும் நலத்துறைகளில் ஏனைய மாநிலங்களை விட சிறப்பான நிலையில் உள்ளது .

*உடல் நலம் , உயர் கல்வி , குழந்தை இறப்பு விகிதம் , மகப்பேறு இறைப்பு விகிதம் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது .

*2005 ஆம் அண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது.

* தமிழ்நாடு வறுமை ஒழிப்பு செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது.

* இந்திய அளவில் ஏழைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஏழை மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைவாக உள்ளது .

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவது இடத்தில் உள்ளது .

* மனித வளர்ச்சி குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது , ( பொருளியல் 11 ஆம் வகுப்பு )

* மூலதன முதலீட்டிலும் ( 2 . 92 இலட்சம் கோடி ) , மொத்த தொழில் துறை உற்பத்தியிலும் ( 6 . 19 இலட்சம் கோடி ) மூன்றாவது இடம் வகிக்கிறது .

* தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 17 % பங்களிப்புடன்  (37000 அலகுகள்)முதலிடம் வகிக்கிறது. மேலும் தொழில் துறையில் உள்ள வேலை வாய்ப்பில்16 % பங்களிப்பு உள்ளது .

* நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதாரக் குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது .

*தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடானது கேரளம் பஞ்சாப் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது .

*தமிழகத்தில் பச்சிளங் குழந்தை இறப்பு வீதம்   14 ஆகும் . இது பிற மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவு . மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் 2014 - ல் 21 ஆகவும் , 2015 - ல் 20 ஆகவும் குறைந்துள்ளது . ( ஆதாரம் : சுகாதார மாநிலம் முற்போக்கு இந்திய அறிக்கை - 2018 - நிதி ஆயோக்)

 * உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது . மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன . வணிக வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ள கடன் வைப்பு விகிதம் மிகச் சிறப்பாக உள்ளது , குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ( MSME4 ) முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது .

* மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் , மகாராஷ்டிரா , குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகிறது.

* கேரளா கல்வியறிவு , குழந்தை இறைப்பு விகிதம் , மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது . ஆனால் தமிழ்நாடானது சுகாதாரம் உயர்கல்வி , சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி , வறுமை ஒழிப்பு , வேலையின்மை ஒழிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது .

* தமிழ்நாட்டின் 2017 - 2018 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் 215 . 81 பில்லியன் டாலர் , இந்திய மதிப்பில் 15 , 347 கோடி ரூபாய் .

* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி
( மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ) 2018 - 19 ஆம் நிதியாண்டில் 8 . 17 % ஆக இருந்தது , அதே நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 6 . 81 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது .
2018 - 19 ஆம் நிதியாண்டில் , இரண்டாம் நிலைத் தொழிகள் 6 . 59 % வளர்ச்சியையும் , சேவைத் துறை 8 . 24 % வளர்ச்சியையும் பெற்றுள்ளன .

* தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 51 , 86 % சேவைத் துறையின் பங்களிப்பிலிருந்து கிடைக்கிறது . ( பட்ஜெட் 2019 - 20 )

 * தனிநபர் வருமானம் : 2011 - 2012 ஆம் ஆண்டில் 1 , 03 , 600 ரூபாயாக இருந்த தனி நபர் வருமானம் 2017 - 2018 ஆம் ஆண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் 1 , 42 , 267 ரூபாயாக உயர்ந்துள்ளது .

* சுமார் 72 . 2 மில்லியன் மக்கள் தொகையுடன் , இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6 % த்தைக் கொண்டு , 6 வது அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது .

* இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ( 37 ) சிறப்பு பொருளாதார மண்ட லங்களை ' ( Special Economile Zones ) க் கொண்டுள்ளது.

* காற்றாலை மின் உற்பத்தியில் உலகளவில் 9 வது இடத்தைப் பெற்றுள்ளது .

 * இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் ( 37 , 220 ) கொண்ட மாநிலம் .

 * 1076 கி . மீ நீளமுள்ள கடற்கரையுடன் இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலமான தமிழ்நாடு , நான்கு பெரிய துறைமுகங்களையும் , 22 சிறிய துறைமுகங்களையும் கொண்டுள்ளது.

* தமிழ்நாட்டிலுள்ள 68 % மக்கள் தொகை 15 - 59 வயதினராக உள்ளனர் .

* இந்தியாவில் மூன்றாவது அதிக பாலின விகிதத்தைக் கொண்டுள்ள மாநிலம் .

* தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏறத்தாழ 21 % பங்கு வேளாண்மையிலிருந்து வருகிறது பெரும்பான்மையான மக்களுக்கான சமூக நலக் கொள்கைகளைக் கொண்டிருப்பதே முன்னேற்றத்திற்குக் காரணமாகும் . எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்குப் பரவலாக்கப்பட்டுள்ள பொதுவிநியோகத் திட்டம் , மதிய உணவுத் திட்டம் , பொது சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு குறிப்பிடலாம்.

* GST வரியினை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் , குறைந்த அளவிலேயே இழப்பீடு பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது .

Whatsapp ல் இணைந்திட
Click here to join group 09
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY