Ads Right Header

நடப்பு நிகழ்வுகள்! (19/04/2020) (20/04/2020)


1 ) தேசியநிகழ்வுகள்

சூம் செயலி

மத்திய உள்துறை அமைச்சகமானது அவசரகால இந்திய கணினி மீட்புக் குழுவின் அறிக்கையை மேற்கோள் காட்டி சூம் செயலி எனும் செயலியை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணையவழி ஒத்துழைப்பு மையமானது சூம் செயலியின் பயன்பாடு குறித்து எச்சரித்துள்ளது.

அரசு அலுவலர்கள் தங்களது அலுவலக பயன்பாட்டிற்கும் சூம் செயலியைப் பயன்படுத்த கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது இந்தியாவில் நீர் கிடைப்பு.

தனது 2018ஆம் ஆண்டு அறிக்கையில் நீர் மற்றும் துப்புரவு ஆர்வலர் குழுவான வாட்டர் எய்டு என்ற அமைப்பானது வீடுகளுக்கு சென்று தூய்மையான நீரை வழங்குவதில் மிகவும் மோசமாக செயல்படும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவில் முதலிடத்தில் தரவரிசை படுத்தியுள்ளது .

இந்தியாவில் சராசரி வருடாந்திர தலா நீர் கிடைப்பானது 2001 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1820 கன மீட்டரிலிருந்து 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1545 கனமீட்டராக குறைந்துள்ளது .

இது மேலும் 2025 ஆம் ஆண்டில் 1341 அளவாகவும் 2050 ஆம் ஆண்டில் 1140 என்ற அளவாகவும் குறைய இருக்கின்றது . தேசிய போலியோ கண்காணிப்பு வலையமைப்பு .

தேசிய போலியோ கண்காணிப்பு வலையமைப்பு செயல்படுத்தி கொரோனா பரவலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்துடன் இந்தியா கைகோர்த்துள்ளது .

1997 ஆம் ஆண்டு தேசிய போலியோ கண்காணிப்பு திட்டத்தின் மூலம் இந்தியா 2014 ஆம் ஆண்டில் போலியோ நோயை அகற்றியது அகில இந்திய வேளாண் போக்குவரத்து தகவல் அழைப்பு மைய வசதி .

அகில இந்திய வேளாண் போக்குவரத்து தகவல் அழைப்பு மைய வசதியை வேளாண்மை மற்றும் விவசாயிகள்
நல அமைச்சகமானது அறிமுகப்படுத்தியுள்ளது .

இந்த வசதியானது மாநிலங்களுக்கு இடையில் அழியக்கூடிய பொருள்களின் போக்குவரத்து இயக்கத்தை மேற்கொள்ள உதவும் .இந்த தகவல் மையங்களை விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு நிறுவனம் , கிசான் சஞ்சார் நிறுவனமானது இயக்க உள்ளது .

கோதுமை கொள்முதல்

கோதுமை உற்பத்தியானது எப்போதும் இல்லாத அளவில் 106 . 21 மில்லியன் டன்களுக்கு மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் விவசாய உற்பத்தியின் பரப்பளவு அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும் .

மத்திய பிரதேசம் , பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மூன்று மாநிலங்கள் நாட்டின் 90 சதவீதம் அளவிற்கு கோதுமை உற்பத்தியை மேற்கொள்கின்றன சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு .

இந்தியாவில் சுற்று சூழல் தாக்க மதிப்பீடானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 என்ற சட்டத்தால் சட்டபூர்வமாக அளிக்கப்படுகிறது.

 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறை மற்றும் செயல்முறை குறித்த பல்வேறு விதிகள் இதில் உள்ளன.

பல்வேறு நோய்களை எதிர்கொள்ள தயாரிக்கப்படும் மொத்த மருந்துகள் மற்றும் அதற்கான பல்வேறு இடைநிலை உற்பத்திப் பொருள்கள் தொடர்பான அனைத்து திட்டங்களும் செயல்பாடுகளும் தற்போதுள்ள வகை A என்ற நிலையிலிருந்து வகை B2 என்ற நிலைக்கும் மறுவகைச் செய்யப்பட்டுள்ளன.

 SAHYOG

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ளுஹழலுமழு என்ற ஒருங்கிணைப்பு புவிசார் தளம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த தளம் மூலம் நாடு முழுவதும் கோவிட் 19 பரவல் பற்றி புவிசார்ந்த கணக்கெடுப்பு நடத்த SAIIYOG என்ற ஒருங்கிணைப்பு சார்புதளம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த பயன்பாடு ஆரோக்கிய சேது உடன் இணைந்து கோவிட் 19 பற்றிய தகவல்களை பெற முடியும்.

2 ) அறிவியல்மற்றும் தொழில்நுட்பம்

 அசெஸ் கொரோனா

டெல்லி அரசானது மக்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வதற்காக அசெஸ் கொரோனா என்ற ஒரு செயலியை தொடங்கியுள்ளது .இந்த செயலியானது கொரோனாவால் நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் மண்டலங்களில் தொடங்கப்பட்டுள்ளது .

கிருஷி ரத்

இந்திய அரசானது மண்டிகளுக்கு விவசாயிகளின் விவசாயப் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவுவதற்காக கிருஷிரத் என்ற ஒரு செயலியை தொடங்கியுள்ளது. வர்த்தகர்கள் இந்த செயலியின் மூலம் வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். வர்த்தகர்கள் பல்வேறு விவசாயிகளினால் அனுப்பப்பட்டுள்ள சரக்குகளை இதன் மூலம் ஒருங்கிணைக்க முடியும் .

 3 ) சர்வதேச நிகழ்வுகள்

மியான்மர் வௌவ்வால்கள்
கொரோனா வைரஸ்

மியான்மரின் வௌவ்வால்களின் 6 புதிய கரோணா வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகையான வைரஸ்கள் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறையாகும் .இவை கோவிட் 19 வைரசிடமோ , சார்ஸ் அல்லது மெர்ஸ் எனும் மற்ற இரண்டு வகை வைரஸ்களிடமோ நெருங்கிய தொடர்புடையதாக காணப்படவில்லை.

 கூகுள் நிறுவன நிவாரண நிதி

கரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொண்டு தமது செயல்பாடுகளை பராமரிக்க போராடும் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு அவசர நிவாரண நிதியை தொடங்க கூகுள் நிறுவனமானது திட்டமிட்டுள்ளது.

 கூகுள் செய்தி முயற்சியின் ஒரு பகுதியாக கோவிட் 19 தொற்றுநோயின் காரணமான பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் செய்தி அலுவலகங்களுக்கு இந்த நிதியானது உதவி புரியும்.

 4 . பொருளாதாரம்

 OBICUS

 இந்திய ரிசர்வ் வங்கியானது OBICUS என்ற ஒன்றை தொடங்கியுள்ளது . OBICUS என்பது பதிவுகளுக்கு உத்தரவாதம் கொடுத்தல் , கையிருப்புகள் மற்றும் திறன் பயன்பாட்டு ஆய்வு என்பதை குறிக்கின்றது . இந்த ஆய்வானது இந்திய உற்பத்தித் துறையின் தேவைகளுக்கான ஒரு கண்ணோட்டத்தை வழங்குகின்றது .  இந்த ஆய்வானது கால் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது .

 IMFC சந்திப்பு

சமீபத்தில் மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் சர்வதேச நாணய மற்றும் நிதியியல் குழுவின் ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொண்டார் .

இந்த சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட விவாதங்களானது மேலாண் இயக்குனரின் உலகளாவிய கொள்கை செயல் திட்டமான " அபூர்வமான நேரம் அபூர்வமான செயல் " என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டது .

5 ) நியமனங்கள்

WWF

இந்தியாவின் தூதர் * செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலகளாவிய நிதி இந்தியா என்ற அமைப்பின் ( WWF world wide fund india ) தூதராக பெயரிடப்பட்டுள்ளார் .

இந்தியாவிலிருந்து தேர்வான முதலாவது செஸ் கிராண்ட் மாஸ்டர் இவராவர் 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.

6 ) வெளிநாட்டு உறவுகள்

உலகின் டிஜிட்டல் மிக திறன் உள்ள நாடுகள்.

உலகின் டிஜிட்டல் மிக திறன் உள்ள நாடுகளில் இந்தியா மிக வேகமாக டிஜிட்டல் நாடாக வளர்ந்து வருவதாக என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லண்டன் மற்றும் அமெரிக்காவை அடுத்த நாடுகளில் இந்தியா உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியா செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இணையதள பயன்பாடு ஆகியவற்றில் 67 % கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp ல் இணைந்திட
Click here to view
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY