Group 1&2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்! (18/04/2020)
1. யாருடைய ஆட்சிக்காலத்தில் விளை நிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி "உத்தரங்கம்" என அழைக்கப்பட்டது.
A.பல்லவர்கள்
B.சாதவாகனர்கள்
C.சாளுக்கியர்கள்
D.ராஷ்டிரகூடர்கள்
2. கீழ்க்கண்ட யாருடைய ஆட்சிக்காலத்தில் 'பஞ்சபிரதான்'என்ற நிர்வாக அமைப்பு ஒன்று செயல்பட்டது?
A.காகதியர்கள்
B.ஹொய்சாளர்கள்
C.சாதவாகனர்கள்
D.சாளுக்கியர்கள்
3. விருபாக்ஷர் கோயிலின் அடித்தள கட்டுமானத்தின் படி கட்டப்பட்ட பாபநாதர் கோயிலில்------------- முக்கிய காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன?
A. ராமாயணம்
B. மகாபாரதம்
C. பெரியபுராணம்
D. சிலப்பதிகாரம்
4. தெய்வீக ஆபரணம் என்று அழைக்கப்படும் கோவில் எது?
A.கம்பகரேஸ்வரர் கோவில்
B.ஐராவதீஸ்வரர் கோவில்
C.கேதாரீஸ்வரர் கோவில்
D.தட்சிண மேரு கோவில்
5. சீன அரசன் குப்லாய்கானுடன் நட்புறவு கொண்டிருந்த பாண்டிய மன்னன்?
A. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்
B. மாறவர்மன் குலசேகர பாண்டியன்
C. மாறவர்மன் சுந்தரபாண்டியன்
D. சடையவர்மன் சுந்தரபாண்டியன்
6. விருபாட்சர் கோயில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது?
A.பல்லவர்கள்
B.சோழர்கள்
C.ஹொய்சாளர்கள்
D.ராஷ்டிரகூடர்கள்
7. இவருடைய பயணக்குறிப்புகள்" ரெகிலா" என்று அழைக்கப்படுகிறது?
A. இபின் பதுதா
B. அப்துல் ரசாக்
C. நிக்கலோ கோண்டி
D. பாஹியான்
8. அக்பர் அமிர்தசரசில் பொற்கோவில் கட்டுவதற்கு நிலத்தை யாருக்கு தானமாக வழங்கினார்?
A. இஸ்லாமியர்கள்
B. பிராமணர்கள்
C. சத்திரியர்கள்
D. சீக்கியர்கள்
9. ரேவதி ஒவஜா என்பவர் இக்கோவிலின் கருவறையை வடிவமைத்தார் என்று கன்னட கல்வெட்டு குறிப்பிடுகிறது?
A.விருபாக்ஷர் கோயில்
B.ஸ்ரீரங்கம்
C.பாப நாதர் கோவில்
D.பட்டடக்கல்
10. பொருந்தாதவை கண்டறிக.
A.சாந்தி புராணம் - பொன்னா
B.நலிசம்பு - திருவிக்ரமன்
C.விக்ரமாங்க சரிதம்- கல்ஹணர்
D.ஹாளாயூதா. -கவிரஹஸ்யம்
11. நிலவரியை அதிகமாக உயர்த்திய சுல்தான் என்று அறியப்படுபவர்?
A.முகமது பின் துக்ளக்
B.பெரோஸ் துக்ளக்
C.அலாவுதீன் கில்ஜி
D.கியாசுதீன் துக்ளக்
12. 'மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன் வீடு' இதனை வணங்குதல் இறைவனை வணங்குதல் என்று கூறியவர்?
A.ராமகிருஷ்ண பரமஹம்சர
B.சுவாமி விவேகானந்தர்
C.தயானந்த சரஸ்வதி
D.ராஜாராம் மோகன்ராய்
13.' உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமமாம்' என்று மாநாட்டில் கூறி உலக சமய ஒற்றுமையை தெளிவு படுத்தியவர்?
A.சுவாமி விவேகானந்தர்
B.சாரதா தேவி
C.ராமகிருஷ்ண பரமஹம்சர்
Dஅன்னிபெசன்ட்
14. கீழ்க்கண்ட நூல்களில் அன்னிபெசன்ட் அம்மையார் உடன் தொடர்பு இல்லாதது எது?
A. மனித வாழ்வு
B. இந்தியனே விழித்தெழு
C. பொதுவாழ்வு
D. நவ இந்தியா
15. சுவாமி விவேகானந்தரும் பாஸ்கர சேதுபதியும் கீழ்க்கண்ட எந்த இடத்தில் சந்தித்தது வரலாற்று செய்தியாக கருதப்படுகிறது?
A. கத்தியவார்
B.கன்னியாகுமரி
C.பேலூர்
D.மதுரை
16. அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலின் ஆசிரியர்?
A.வைகுண்ட சுவாமிகள்
B.நாராயண குரு
C.இராம கோபால்
D.ஹிஜ்ரானந்தர்
17. மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த "துவையல் பந்தி" என்னும் முறையை தொடங்கியவர்?
A.முத்துக்குட்டி
B.நாராயண குரு
C.ராமலிங்க அடிகளார்
D.ராமகிருஷ்ண பரமஹம்சர்
18. தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
A.அயோத்திதாச பண்டிதர்
B.கர்னல் டாட்
C.ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
D.கந்துகூரி வீரேசலிங்கம்
19. பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் ராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது என்று கூறியவர்?
A.கர்னல் டாட்
B.வரலாற்றாசிரியர் சீல்
C.சர்மோனியர் வில்லியம்
D.கந்துகூரி வீரேசலிங்கம்
20. பூனாவில் விதவைப் பெண்களுக்கான இல்லத்தை நிறுவியவர்?
A. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
B. முத்துலட்சுமி
C. அன்னிபெசன்ட்
D. பண்டித கார்வே
21. பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு என்று கூறியவர்?
A.வாக்கர்
B.கிரௌதர்
C.இர்விங்பிஷர்
D.மில்டன் பிரெடுமேன்
22. உண்மையான பணவீக்கம் என்று J.M. கீன்ஸ் குறிப்பிடுவது?
A. தாவும் பணவீக்கம்
B. ஓடும் பணவீக்கம்
C.நடக்கும் பணவீக்கம்
D.தவழும் பணவீக்கம்
23.WTO வின் முக்கிய பணிகளில் சரியானது எது?
I. வாணிப பேச்சுவார்த்தைகளுக்கான மன்றம்
II. வாணிப தகராறுகளை கையாளுதல்
III. வளர்ந்துவரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி
IV. WTO உடன்படிக்கைகளை நிர்வகித்தல்
A.I, II மட்டும் III சரி
B.I, II மட்டும் IV சரி
C.I மட்டும் IV சரி
D. இவை அனைத்தும்
24.MIGA இந்தியாவில் உறுப்பினரான ஆண்டு?
A. 1996
B. 1987
C. 1975
D. 1994
25. பொருத்துக:
(அமைப்பு) (தலைமையிடம்)
SAARC 1. ஜகார்த்தா
ASEAN. 2. ஷாங்காய்
BRICS. 3. காட்மண்டு
WTO. 4. ஜெனிவா
A.4321
B.3142
C.3214
D.3124
26. உலக வங்கியின் உண்மையான பெயர் என்ன?
A.பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA)
B.பன்னாட்டு நிதி கழகம் (IFC)
C.மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி (IBRD)
D.பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA)
27. பணவீக்கம் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.
I.கூலியானது விலையை உயர்த்துவதும் விலையானது கூலியை உயர்த்துவதும் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கமாகும்.
II. விலை அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் பணவீக்கம் நடைபெறுவது "பணவீக்க சூழல்" ஆகும்.
மேற்கூறியவற்றில் சரியானது எது/ எவை?
A.I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
28. பொருத்துக:
உலகவங்கி குழுமம்-தொடங்கப்பட்ட ஆண்டு
IBRD. 1.1945
IDA. 2.1960
ICSID. 3.1966
MIGA. 4.1958
IFC. 5.1956
A.23415
B.21345
C.12345
D.32154
29. இந்தியா எப்போது பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கியின் உறுப்பினரானது?
A.1950
B.1947
C.1952
D.1945
30. பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காத பணவீக்கம் எது?
A.தாவும் படவைக்கும்
B.தவழும் பணவீக்கம்
C.ஓடும் பணவீக்கம்
D.நகரும் பணவீக்கம்
31. சார்க் வேளாண் தகவல் மையம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A.1985
B.1988
C.1992
D.1998
32. உலக வர்த்தக மையம் (WTC) தலைமையகம் எங்கு உள்ளது?
A. ஜெனிவா
B. லண்டன்
C. பெய்ஜிங்
D. நியூயார்க்
33. பணவீக்கத்தின் போது பயனடைபவர்கள் யார்?
A. கடன் பெற்றவர்கள்
B. கடன் வழங்கியோர்
C. கூலி மற்றும் சம்பளம் பெறுவோர்
D.அரசு
34. இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் எத்தனை வகையான அளவீடுகளை செய்கின்றது?
A.2
B.4
C.6
D.5
35. பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பணம் அல்லது வங்கிகளில் உள்ள பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.ரொக்க வைப்பு விகிதம்(CDR)
B.ரொக்க இருப்பு வைப்பு விகிதம்(RDR)
C.ரொக்க இருப்பு விகிதம்(CRR)
D.சட்டப்பூர்வ நீர்மை விகிதம்(SLR)
36. "குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை" இது யாருடைய கூற்று?
A.மார்ஷல்
B.பிஷர்
C.கிரிகெரி
D.கோல்பர்ன்
37. சீரான கால இடைவெளியில் அமையும் பொருளாதார ஏற்ற இறக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.வணிக சுழற்சி
B.வியாபார வளர்ச்சி
C.தொழில் ஏற்ற இறக்கம்
D.இவை அனைத்தும்
38. வேலைவாய்ப்பினை ஏற்படுத்தாமலும் உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தை திருப்பும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.பணவாட்டம்
B.பணவீக்கம்
C.தேக்க வீக்கம்
D.மீள் பணவீக்கம்
39. கீழ்கண்ட எந்த சிறிய எண்ணால் 384- ஐ வகுக்கும் போது சரியான வர்க்கமாக மாறும்?
A. 5
B. 6
C. 9
D. 4
40. ஒரு அலமாரியானது 5 % தள்ளுபடி க்குப்பின் 5225 க்கு விற்கப்பட்டது. எனில் அதன் குறிப்பிட்ட விலை என்ன?
A.₹5600
B.₹5500
C.₹5000
D.₹5800
41. ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் சராசரி எடை 60 கிலோ ஆகும். அவர்களில் மூவரின் எடை முறையே 56 கிலோ, 68 கிலோ,72 கிலோ எனில் நான்காவது நபரின் எடையை கண்டறிக.
A. 42கி.கி
B. 46கி.கி
C. 44கி.கி
D. 48கி.கி
42.0.005184 என்பதன் வர்க்கமூலம் யாது?
A. 0.072
B. 0.0072
C. 0.72
D. 0.00072
43.B-என்பவர் A-யை சுட்டிக்காட்டி, "உன் தாய் என் தாயின் இளைய தங்கை" என்கிறார் எனில் B க்கு A என்ன உறவுமுறை?
A. மாமா
B. உறவினர்
C. மருமகன்
D. தந்தை
44. கீழ்கண்டவற்றுள் உணவோடு சேர்ந்து உடலினுள் புகும் நுண்ணுயிரிகள் எதனால் கொல்லப்படுகின்றன?
A.நைட்ரிக் அமிலம்
B.பாஸ்போரிக் அமிலம்
C.ரிபோ நியூக்ளிக் அமிலம்
D.ஹைட்ரோ குளோரிக் அமிலம்
45. கீழ்க்கண்டவற்றுள் எது ஹிஸ்டமைன் என்னும் வேதிப்பொருளை சுரக்கின்றது?
A.மாஸ்ட் செல்கள்
B.சைட்டோ டாக்சிக்
C.எபிதீலிய செல்
D.எலும்பு மஜ்ஜை
46. கௌட் என்பது?
A. ருமாட்டிக் மூட்டுவலி
B. ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ்
C. தொற்று நோயினால் உண்டாகும் மூட்டுவலி
D. வளர்சிதை மாற்றக் குறைபாடு மூட்டுவலி
47. ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை கண்டறிந்தவர் யார்?
A. ராபர்ட் கோச்
B. லூயிஸ் பாஸ்டர்
C. ஜோசப் லிஸ்டர்
D. அலெக்சாண்டர் பிளமிங்
48. உயிரியலின் மையக் கருத்து செயல்திட்டம் தொடர்பான சரியான வரிசையை கண்டறிக.
A. இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிப்பெயர்த்தல்
B. நகலாக்கல், மொழிப்பெயர்த்தல், படியெடுத்தல்
C. படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிப்பெயர்த்தல்
D. படியெடுத்தல், மொழிப்பெயர்த்தல் இரட்டிப்பாதல்
49. கீழ்கண்டவற்றுள் எது பாக்டீரியா எதிர்ப்பு நொதி என அறியப்படுகிறது?
A. இன்டர்ஃபெரான்கள்
B. பெப்சின்
C. லைசோசைம்
D. பிரியான்கள்
50. கீழ்கண்டவற்றுள் குமிழ் சிறுவன் சின்ட்ரோம் என அழைக்கப்படுவது எது?
A.நிறமி குறைபாடு நோய் (அல்பினிசம்)
B.தலாசீமியா
C. ஹன்டிங்டன் கொரியா
D.தீவிர ஒருங்கிணைந்த நோய் தடைக்காப்பு குறைபாடு(SCID)
51. கீழ்க்கண்டவற்றுள் மரபுக் குறைபாடு நோய் அல்லாதது எது?
A.ஹீமோபிலியா
B.கண்புரை
C.கதிர் அரிவாள் ரத்த சோகை
D.நிறக்குருடு
52. சிறுநீரகக் கல் என்பது?
A. கொழுப்பால் நடைபெறுவது
B. புரதத்தால் நடைபெறுவது
C. சிறுநீரக பெல்விஸில் ஆக்சலேட் படிகங்கள்
D. B மற்றும் C ஆகிய இரண்டும்
53. இளம்பிள்ளை வாதம் என்னும் நோய் எதன் வழியாக உடலினுள் நுழைகிறது?
A.வாய்
B.மூக்கு
C.கண்
D.காது
54. ஜோதிராவ் பூலேவின் "குலாம்கிரி" என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு?
A.1917
B.1905
C.1919
D.1872
55. மத்திய சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் சுயராஜ்ய கட்சி 106 இடங்களில் எத்தனை இடங்களை கைப்பற்றியது?
A.101
B.42
C.24
D.84
56. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றிலேயே கீழ்க்கண்ட எந்த காங்கிரஸ் கட்சியின் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்?
A. கல்கத்தா மாநாடு
B. பம்பாய் மாநாடு
C. லாகூர் மாநாடு
D. கராச்சி மாநாடு
57. மூக் நாயக் என்ற பத்திரிக்கை தொடங்கியவர்?
A.அம்பேத்கர்
B.பெரியார்
C.மகாத்மா காந்தி
D.கோபால கிருஷ்ண கோகலே
58. தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை திருச்சி முதல் வேதாரண்யம் வரை எத்தனை மைல்கள் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது?
A.150 மைல்கள்
B.160 மைல்கள்
C.140 மைல்கள்
D.130 மைல்கள்
59. 1945 ல் சிம்லா மாநாட்டை கூட்டிய அரசப் பிரதிநிதி?
A. வேவல் பிரபு
B. லின்லித்கோ பிரபு
C. மவுண்ட்பேட்டன் பிரபு
D. கிளமெண்ட் அட்லி
60. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
A.ரங்கூன்
B.மலேசியா
C.சிங்கப்பூர்
D.இம்பால்
61.----------------- கலகத்தில் ஈடுபட்டமை பிரிட்டிஷாரை வேகமாக விடுதலை வழங்க துரிதப்படுத்தியது?
A. இந்திய தேசிய காங்கிரஸ்
B. இந்திய தேசிய ராணுவம்
C. இராயல் இந்திய கடற்படை
D. A மற்றும் B
62. குழு சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A.1939
B.1940
C.1941
D.1942
63. 1939 இல் கீழ்க்கண்ட எந்த தலைவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்காக பின்னர் காங்கிரஸ் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A.மகாத்மா காந்தி
B.நேரு ஜவஹர்லால் நேரு
C.சுபாஷ் சந்திர போஸ்
D.வினோபா பாவே
64. எந்த காங்கிரஸ் மாநாட்டில் சென்னை மகாஜன சபை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது?
A.கல்கத்தா காங்கிரஸ் மாநாடு
B.லாகூர் காங்கிரஸ் மாநாடு
C.பம்பாய் காங்கிரஸ் மாநாடு
D.லக்னோ காங்கிரஸ் மாநாடு
65. பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்திய ஆண்டு?
A.1865
B.1875
C.1885
D.1895
66. பின்வருவனவற்றுள் இதற்கான பதில் எதிர்ப்பாக தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது?
A. இரண்டாம் உலகப்போர்
B. வின்ஸ்டன் சர்ச்சிலின் கருத்து
C. ஆகஸ்ட் சலுகை
D. கிரிப்ஸ் தூதுக்குழு
67. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்?
A. கவிஞர்
B. பத்திரிக்கையாளர்
C. ராணுவ வீரர்
D. ஆசிரியர்
68. தாதாபாய் நவரோஜி லண்டனில் கிழக்கிந்திய கழகத்தைத் தோற்றுவித்த ஆண்டு?
A.1866
B.1876
C.1886
D.1896
69. காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை எத்தனை தொண்டர்களுடன் தண்டி யாத்திரை மேற்கொண்டார்?
A.72
B.78
C.75
D.77
70. சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான குழு மாண்டேகு செம்ஸ்போர்டு கருத்துக்களை எதிர்த்ததோடு கீழ்க்கண்ட எந்த பெயரில் தனது சொந்த கட்சியை தொடங்க காங்கிரசுக்கு வழிவகுத்தது?
A.சுயராஜ்ய கட்சி
B.இந்திய லிபரல் கூட்டமைப்பு
C.இந்திய பணியாளர் சங்கம்
D.பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை
71. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த இயக்கம்?
A.தலித் பகுஜன் இயக்கம்
B.கிலாபத் சிங்கம்
C.சுயமரியாதை இயக்கம்
D.சத்தியாகிரக இயக்கம்
72. கூற்று: பி.ஆர் அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தை தொடங்கினார்
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயன்றார்
A. கூற்று தவறு காரணம் சரி
B. கூற்று சரி காரணம் தவறு
C. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
73. லண்டனில் பெண்டோன்வில்லே சிறையில் தூக்கிலிடப்பட்டவர்?
A.அலி சகோதரர்கள்
B.உதம் சிங்
C.சுகதேவ்
D.சந்திரா
74. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை கருதுக.
I. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்குவதற்காக இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு 1942 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் வார்தா என்னுமிடத்தில் கூடியது.
II. ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார் மற்றும் புலாபாய் தேசாயும் ஆகியோர் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவி விலகினார்.
மேற்கூறியவற்றில் சரியானது எது/ எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
75. போர்க்கால அமைச்சரவையை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த அரச பிரதிநிதி?
A. லின்லித்கோ
B. வின்ஸ்டன் சர்ச்சில்
C. மௌண்ட்பேட்டன் பிரபு
D. மிண்டோ மார்லி
76. கீழ்கண்ட எந்த காங்கிரஸ் கூட்டத்தில் 'நாடு தழுவிய சட்டமறுப்பு போராட்டம்' நடத்த தீர்மானிக்கப்பட்டது?
A.கல்கத்தா
B.வார்தா
C.லாகூர்
D.கராச்சி
77. "தம்லுக் ஜாட்டியா சர்க்கார்" ஏற்படுத்தப்பட்ட இடம்?
A.டெல்லி
B.லாகூர்
C.கல்கத்தா
D.வங்காளம்
78. தாதாபாய் நவரோஜி 'வறுமையும் பிரிட்டனுக்கு எதிரான இந்திய ஆட்சியும்' என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு?
A.1907
B.1905
C.1903
D.1901
79. விவசாயிகளின் துன்ப நிலைக்கு முக்கிய காரணமாக இருந்த வரி எது?
A.நிலவரி
B.விளைச்சல் வரி
C.வணிக வரி
D.கோவில் வரி
80 . 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற சிம்லா மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தலைவர்கள் யார்?
I.முகமது அலி ஜின்னா
II.ஜவகர்லால் நேரு
III.சர்தார் வல்லபாய் பட்டேல்
IV. மௌலானா அபுல் கலாம் ஆசாத்
A.II மற்றும் IIII
B.II,III மற்றும் IV
C.I ,II மற்றும் III
D. மேற்கண்ட அனைத்தும்
81. ஆங்கிலேயர்கள் மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அவர்களை கீழ்கண்ட எந்த வர்க்கம் என ஏளனப்படுத்தினர்?
A. பாபு வர்க்கம்
B. அஷல வர்க்கம்
C. திசோப்பி வர்க்கம்
D. பரிஷித் வர்க்கம்
82. தவறான கூற்றை தேர்ந்தெடு
I. சதுஸ்பதி என்பது உயர்தர ராணுவம் என்று அழைக்கப்படுகிறது
II. லேவாதேவி என்பது நிலத்தை தானமாக கொடுப்போர் என்று அழைக்கப்படுகிறது.
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
83. இந்திய தண்டனைச் சட்டம்----------ன் கீழ் அடுக்குமுறை ஒழுங்காற்று சட்டம் உள்ளது?
A.114A
B.124A
C.134A
D.144A
84. கீழ்க்கண்டவர்களுள் சுயராஜ்ய கட்சியில் இணைந்தவர்கள் யார்?
I.மோதிலால் நேரு
II.ராஜகோபாலச்சாரி
III. சி ஆர் தாஸ்
IV.சத்தியமூர்த்தி
A.I,II மற்றும் III
B.I,III மற்றும் IV
C.II,IIIமற்றும் IV
D. மேற்கண்ட அனைவரும்
85."பஹிஷ்கிரித் ஹிடாகரினி" சபை தொடங்கியவர்?
A.பி ஆர் அம்பேத்கார்
B.தந்தை பெரியார்
C.ஜவகர்லால் நேரு
D.காந்தியடிகள்
86. சரியான கூற்றை தேர்ந்தெடு.
I. உப்பு சத்தியாக்கிரக நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஏ.தார்ன் அறிவித்தார்.
II. ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தின் போது காந்தியடிகள் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
III. கல்கத்தா மாநாட்டில் காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
A. I மட்டும் சரி
B.II மட்டும் சரி
C.I மற்றும் III சரி
D. I மற்றும் II சரி
87. ஆசம்கரின் ஆட்சியாளராக இருந்த புரட்சியாளர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்?
A. லின்லித்கோ
B. மவுண்ட்பேட்டன் பிரபு
C. மிண்டோ மார்லி
D. R.H.நிப்ளெட்
88. 1942ல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்?
A.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
B.மோகன் சிங்
C.G.S.தில்லான்
D.ஷா நவாஸ் கான்
89. சரியான கூற்றை தேர்ந்தெடு
I. லாகூர் வந்த காந்தியடிகள் அங்கே போலிகாத்தா என்ற மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க முடிவு செய்தார்.
II. கல்கத்தாவை காந்தியடிகள் வந்தடைந்த பின்பு அவர்" இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களை பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பாகும்" என்று வற்புறுத்தினார்.
A. I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
90. உலகை தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் எடுத்து வைப்பதாகும் என்று கூறியவர்?
A.அரவிந்த கோஷ்
B.தாதாபாய் நவரோஜி
C.பெரோஸ் மேத்தா
D.பிபின் சந்திர பால்
91. பொருத்துக
அ.ராஸ்ட் கோப்தார் 1. பால கங்காதர திலகர்
ஆ.பெங்காலி 2. வில்லியம் டிக்பை
இ.கேசரி 3. தாதாபாய் நவரோஜி
ஈ.மெட்ராஸ் டைம்ஸ்4.சுரேந்திரநாத் பானர்ஜி
A.3142
B.1234
C.4321
D.3412
92. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A.1882 டிசம்பர் 26
B.1884 டிசம்பர் 26
C. 1885 டிசம்பர் 26
D. 1881 டிசம்பர் 26
93. C.R திட்டம் ராஜாஜியால் தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 1942
B. 1944
C. 1946
D.1952
94. சுபாஷ் சந்திரபோஸ் 1944 ஜூலை 6 இல் தனது "ஆசாத் ஹிந்த்" ரேடியோவின் மூலம்--------- லிருந்து காந்தியடிகளை நோக்கி ஒரு உரையை ஆற்றினார்?
A. ரங்கூன்
B. லாகூர்
C. கராச்சி
D. டெல்லி
95. யார் அரச பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட் மசோதா மூலம் ஐரோப்பியர்களை இந்திய நீதிபதிகள் விசாரிக்க அதிகாரம் பெற்றனர்?
A.கர்சன் பிரபு
B.ரிப்பன் பிரபு
C.லிட்டன் பிரபு
D.ஹேஸ்டிங்ஸ் பிரபு
96. ஹைட்ரோபோனிக்ஸ் என்பது?
I. சோதனைக்குழாய் விவசாயம்
II. மண்ணில்லாத வேளாண்மை
III. ரசாயன விவசாயம்
IV. தொட்டி விவசாயம்
A.I மற்றும் II
B.I மற்றும்III
C.I, II மற்றும் III
D. இவை அனைத்தும்
97. கீழ்க்கண்டவற்றுள் லெகூம் அல்லாத தாவரங்களில் நைட்ரஜன் நிலைப்பாட்டில் ஈடுபடும் கூட்டுயிரி எது?
I.ஃபிரான்கியா
II.நாஸ்டாக்
III.குளோரோபியம்
IV.நைட்ரசோமோனாஸ்
A.I மற்றும் II
B.I மற்றும் III
C.I மற்றும் IV
D. இவை அனைத்தும்
98. சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர்?
A.Dr.M.S. சுவாமிநாதன்
B.சர்.T.S. வெங்கட்ராமன்
C.Dr.B.P. பால்
D.Dr.K. ராமையா
99. கீழ்க்கண்டவற்றில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது?
A.குப்பைமேனி
B.வில்வம்
C.பிரண்டை
D.நெல்லி
100. தாவர உலகின் எந்த மலரின் விதைகள் மிகவும் நீடித்த வாழ்நாளை கொண்டுள்ளன?
A.வாலிஸ்னேரியா
B.உஃல்பியா
C.அல்லி
D.தாமரை
விடைகள் மாலை பதிவிடப்படும்.
⚓ Telegram
Click here to join TG.
tnkural.com tnpsc
Previous article
Next article
Leave Comments
Post a Comment