Ads Right Header

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் - காமராஜர் ஆட்சி (Part -3)



பாசனத் திட்டங்கள்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார் .
அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம் , மணிமுத்தாறு திட்டம் , மேட்டுர் கால்வாய் திட்டம் , ஆரணியாறு திட்டம் , அமராவதி திட்டம் , வைகை திட்டம் சாத்தனூர் திட்டம் , கிருஷ்ணகிரி திட்டம் , 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.

இவை தவிர , இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம் , புதிய கட்டளைத் திட்டம் , வீடூர் நீர்த்தேக்கத் திட்டம் , கொடையாறு வாய்க்கால் திட்டம் நெய்யாறு திட்டம் , பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

  சென்னை நிலச் சீர்திருத்தச் சட்ட 1955 ( Madras Land Reforms Act , 1955 ) மற்றும் சென்னைப் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் , 1955 ( Madras Cultivating Plants Protection Act 1955 ) ஆகியவை காமராஜர் காலத்தில் விவசாயிகளின் நலனுக்காக இயற்றப்பட்ட முக்கிய சட்டமாகும்.

 காமராச ஆட்சியின்கீழ் நிறைவேற்றப்பட்ட 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள்

* கீழ்பவானித்திட்டம்

* மேட்டூர் கால்வாய்த்திட்டம்

* காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்

* மணிமுத்தாறு

* அமராவதி வைகை

* சாத்தனூர்

* கிருஷ்ணகிரி

* ஆரணியாறு  ஆகியவையாகும்.

மின்உற்பத்தி

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன . மின்உற்பத்தியிலும் , அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது .

 காமராஜ ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம் , குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது . நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ . 85 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது . இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன.
இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது .

 சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர் , இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி , இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார் .

அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன . நிலச் சீர்திருத்தம் காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக
' குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955 காமராஜர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது . நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962 - ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக , பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது . ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958 - ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது . தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் .373 பஞ்சாயத்து யூனியன்களும் , 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY