Ads Right Header

கணிதம் - எட்டாம் வகுப்பு முதல்பருவம்! (கூட்டு உருவங்கள், செய்முறை வடிவியல்)



கூட்டு உருவங்கள் பலகோணம் 

பலகோணம் என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நேர்க்கோட்டு உருவம் ஆகும் .

ஒழுங்கு பலகோணம் : பலகோணத்தின் பக்கங்களும் கோணங்களும் சமமாக இருப்பின் ,
அது ஓர் ஒழுங்கு பலகோணம்
( Regular Polygon ) எனப்படும் .

ஒழுங்கற்ற பலகோணம் : ஒழுங்கற்ற வடிவமைப்பில் உருவாகும் பலகோணங்கள் ஒழுங்கற்ற பலகோணம் எனப்படும் .

குழிவுப் பலகோணம் : ஒரு பலகோணத்தில் குறைந்த பட்சம் ஒரு கோணமாவது 180°ஐ விட அதிகமாக இருந்தால் அது குழிவுப் பலகோணம் எனப்படும் .

குவிந்த பலகோணம் : ஒரு பலகோணத்தில் ஒவ்வொரு உட்கோணமும் பலகோணத்தில் 180 ஐ விடக் குறைவாக இருந்தால் அது குவிந்த பலகோணம் எனப்படும் .

சர்வசம நேர்கோடுகள் : இரு கோட்டுத் துண்டுகளின் நீளம் சமம் எனில் அவை சர்வசமம் ஆகும் .

சர்வசமக் கோணங்கள் : சமகோண அளவுள்ள இருகோணங்கள் சர்வசமம் ஆகும் .

சர்வசமச் சதுரங்கள் : சம பக்க அளவுடைய சதுரங்கள் சர்வசமம் ஆகும் .

சர்வசம வட்டங்கள் : சம ஆர அளவுடைய வட்டங்கள் சர்வசமம் ஆகும் .


சர்வசம முக்கோணங்கள் : - இரு முக்கோணங்களில் ஏதேனும் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மூன்று கோணங்களும் முறையே மற்றொன்றின் மூன்று பக்கங்களுக்கும் மூன்று கோணங்களுக்கும் சமம் எனில் அவை சர்வசம முக்கோணங்கள் எனப்படும் .

> சர்வசம முக்கோணங்களின் ஒத்த பகுதிகள் சர்வசமம் .

> ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180* ஆகும் .

 > முக்கோணத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை நீட்டினால் ஏற்படும் முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமமாகும் .

> ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவை விட அதிகம் .

> இரு தள உருவங்கள் ஒன்றின் மீது ஒன்று சரியாகப் பொருந்தினால் அவை சர்வ சமம் எனப்படும் .

> இரு முக்கோணங்களில் ஏதேனும் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மூன்று கோணங்களும் முறையே மற்றொன்றின் மூன்று பக்கங்களுக்கும் மூன்று கோணங்களுக்கும் சமம் எனில் அவை சர்வ சம முக்கோணங்கள் எனப்படும் .


செய்முறை வடிவியல்

##ஒரு தளத்தில் நான்கு கோடுகளால் அடைபடும் வடிவம் ஒரு நாற்கரம் .

##ஒரு நாற்கரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஐந்து அளவுகள் தேவை .

##ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் சரிவகம் ஆகும் .

##ஒரு சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு அளவுகள் தேவை .

##ஒரு சரிவகத்தில் இணையில்லாத பக்க அளவுகள் சமமெனில் அச்சரிவகம் இருசமபக்க சரிவகம் ஆகும் .

##ஓர் இருசமபக்க சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை .

##ஒவ்வொரு சோடி எதிர்ப்பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் இணைகரம் ஆகும் .

##ஓர் இணைகரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை .

ஒரு நாற்கரத்தின் பரப்பளவு
A = 1 / 2 d ( h1 + h2 ) சதுர அலகுகள் .

ஒரு சரிவகத்தின் பரப்பளவு
A = 1 / 2 h ( a + b ) சதுர அலகுகள் .

ஒரு இணைகரத்தின் பரப்பளவு
A = b x h சதுர அலகுகள் .


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY