கணிதம் 2020 வினாவிடை!!
==>ஒரு பலகோணத்தில் ஒவ்வொரு உட்கோணமும் பல கோணத்தில் - - - - - - ஐ விடக் குறைவாக இருந்தால் அது குவிந்த பலகோணம் எனப்படும் .
விடை : - 180°
==>ஒரு பலகோணத்தில் குறைந்தபட்சம் ஒரு கோணமாவது 180 க்கு ............ ஆகஇருந்தால் அது குழிவுப் பலகோணம் எனப்படும் .
விடை : - அதிகமாக
==>பலகோணத்தின் பக்கங்களும் கோணங்களும் சமமாக இருப்பின் அது ஓர் - - - - - - - - - - எனப்ப டும் .
விடை : - ஒழுங்கு பலகோணம்
==>- - - - - - - என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நேர்க்கோட்டு உருவம் ஆகும் . விடை : - பலகோணம்
==>இரண்டு அல்லது மூன்று உருவங்களை ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றை வைத்தால் புது உருவம் கிடைக்கிறது . இவை........... எனப்படும் .
விடை : - கூட்டு உருவங்கள்
==>ஒரு வட்டத்தில் ............கால் வட்டங்கள் உள்ளன .
விடை : - 4
==>ஒரு வட்டத்தின் ஆரம் 21 செ . மீ . எனில் அதன் கால் வட்டத்தின் சுற்றளவைக் காண்க . விடை : - 75 செ . மீ .
==>14 செ . மீ . ஆரமுள்ள அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க .
விடை : - 72 செ . மீ . , 308 செ . மீ2
==>செங்கோணத்தின் எதிர்ப்பக்கம் ? விடை : - கர்ணம்
==> இரு தள உருவங்கள் ஒன்றின் மீது ஒன்று சரியாக பொருந்தினால் அவை -.......... எனப்படும் .
விடை : - சர்வசமம்
==>கீழ்காணும் கோண அளவுகளில் எது செங்கோண முக்கோணத்தை அமைக்கும் ?
விடை : - 24° 66
==>கீழ்கண்டவற்றில் எவை ஒரு முக்கோணத்தின் கோணங்களாக அமையும் ?
விடை : - 26° 58° 96
==>கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று ?
விடை : - சமபக்க முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம்
==>ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130 , 140 எனில் மூன்றாவது வெளிக்கோணம் ?
விடை : - 90°
==>ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5 : 4 : 3 எனில் கோண அளவுகளைக் காண்க . விடை : - 75° 60° 45
ஒரு முக்கோணத்தில் சமபக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் ?
விடை : - சமம்
==>முக்கோணத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை நீட்டினால் ஏற்படும் முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் உள்ளெதிர்க் கோணங்களின் ........க்கு சமம் .
விடை : - கூடுதலுக்கு
==>வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செ . மீ . இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்பட்டுள்ளது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க .
விடை : - 55 செ . மீ .
==>கால் வட்டத்தின் மையக்கோணம் ? விடை : - 90
==>அரைவட்டத்தின் மையக்கோணம் ? விடை : - 180
Previous article
Next article
Leave Comments
Post a Comment