Ads Right Header

பதினெண்கீழ்க்கணக்கு - 20+20 வினாவிடை!


1. பழியாபத்து ' என்ற பிரிவு எந்நூலில் உள்ளது ?
விடை : - முதுமொழிக்காஞ்சி

2. நான்மணிக்கடிகை நூலின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் கூறப்பட்டுள்ளன .
விடை : - நான்கு

3 . ஐந்து திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் உடைய நூல் எது ?
விடை : - ஐந்திணை ஐம்பது

4.காரியாசன் யாருடைய மாணவர் ? விடை : - மதுரை தமிழாசிரியர் மாக்காயனார்

5.நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார் ?
விடை : - விளம்பிநாகனார்

6.திருக்குறளின் சாரம் எனப்படுவது யாது ?
விடை : - நீதிநெறி விளக்கம்

7.சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய எப்பொருளால் ஆனது ?
 விடை : - வேர்

8.சேரமான் கணைக்காலிரும் பொறையை விடுதலை செய்வதற்காக சோழ மன்னனிடம் பொய்கையார் பாடிய பாடல் எது ?
விடை : - களவழி நாற்பது

9.ஏலாதியில் இடம் பெற்றுள்ள சிறப்பு பாயிரங்கள் எத்தனை ?
விடை : - இரண்டு

10.முதுமொழிக் எத்துறைகளுள் ஒன்று ? காஞ்சி என்பது?
விடை : - காஞ்சித்திணை

11. மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் எது ?
விடை : - திரிகடுகம்

12.முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார் ?
விடை : - மதுரைக் கூடலூர்க்கிழார்

13.இன்னா நாற்பது , இனியவை நாற்பது ஆகிய நூல்கள் எவ்வாறு போற்றப்படுகிறது ?
விடை : - இரட்டை அறநூல்கள்

14.சிறுபஞ்சமூலம் எந்த சமயத்தை சார்ந்த நூல் ?
விடை : - சமண சமயம்

15. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறத்திணை நூல் எத்தனை ?
விடை : - 1

16.நாலடியார் எத்தனைப் பாடல்களைக் கொண்டது ?
விடை : - 400

17.ஏலாதி எவ்வகைப் பொருள் ?
விடை : - மருத்துவப் பொருள்

18.ஐந்திணை ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை : - மாறன் பொறையனார்

19. எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது ?
விடை : - குறுந்தொகை

20.சிறுபஞ்சமூலத்தில் அடங்காத மருந்து பொருள் எது ?
விடை : - வில்வம்

21.எம்மதம் எவ்வினமும் எந்நாளும் சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம் - எனத் திருக்குறளைப் பாடியவர் ?
விடை : - சுத்தானந்த பாரதியார்

22. திருக்குறளின் விளக்கம் எனப்படுவது யாது ? விடை : - நாலடியார்

23.கல்வி கரையில் கற்பவர் நாள்சில என்ற அடிகளை உடைய நூல் எது ? விடை : - நாலடியார்

24. ஏலாதி நூலின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் கூறப்பட்டுள்ளன ?
விடை : - 6

25.பஞ்ச தந்திரக் கதைகள் எப்பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணலாகிறது ?
விடை : - சிறுபஞ்சமூலம்

26.நாலடியார் பாடல்கள் எத்தனை அடிகளை கொண்டது ?
விடை : - 4

27.நீதி நூல்களுள் பெரியது ?
விடை : - திருக்குறள்

28.நீதி நூல்களுள் சிறியது ?
விடை : - இன்னா நாற்பது

29.நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ - பாடியவர் யார் ?
விடை : - ஔவை

30.சங்க இலக்கியங்களுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு என்ன பெயர்?
விடை : - பதினெண்கீழ்க்கணக்கு

31.அகநூல்களில் பெரியது எது ?
விடை : - திணைமாலை நூற்றைம்பது

32.பதினெண்மேற்கணக்கு நூல்களின் எண்ணிக்கை ?
விடை : - 18

33.தமிழுக்கு கதி என அழைக்கப்படும் நூல் எது ?
விடை : - கம்பராமாயணம் , திருக்குறள்

"ஆற்றுணா" என்பது ?
விடை : - வழிநடை உணவு

34.திருக்குறள் எத்தனை இயல்களை உடையது ?
விடை : - 9

35.திருக்குறளின் முன்னோடி எனப்படுவது ?
விடை : - புறநானூறு

36.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது ?
விடை : - பன்னிரு பாட்டியல்

37.மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்?
 விடை : - திரிகடுகம் , ஏலாதி

38.ஏலாதி எத்தனைப் பாடல்களைக் கொண்டது ?
விடை : - 81 பாடல்கள்

39.நாலடியாரின் மற்றொரு பெயர் யாது? விடை : - நாலடி நானூறு

40. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு யாருடைய கூற்று ?
விடை : - ஔவையார்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY