Ads Right Header

உயிரியல் 10+10 முக்கிய குறிப்புகள்!


1.டி . என் . ஏ மூலமாக நடத்தப்படும் மரபு செய்தியின் அலகு - கோடான்கள் எனப்படும்.

2. மரபுச் செய்திகளை கடத்தும் கோடான்களின் எண்ணிக்கை 64.

3.நமது உடலில் காணப்படும் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை 20.

4.நமது உடலிலுள்ள 20 அமினோ அமிலங்களை குறியீடு செய்ய இயலக்கூடிய கோடான்களின் எண்ணிக்கை 61 .

5.நீளமுள்ள மூன்று கோடான்கள் சுட்டுக்குறி கோடான்கள் எனப்படும் . அவை - UAA , UAG , UGA

6.மரபுச் செய்தியானது டி . என் . ஏவிலிருந்து ஆர் . என் . ஏவிற்கும் , ஆர் . என் . ஏவிலிருந்து புரதத்திற்கும் கடத்தப்படும்

7.புரத உற்பத்தி மூன்று நிலைகளில் நடைபெறும் . அவை 1 . படியெடுத்தல் 2 . மீள்படியெடுத்தல் 3 . மொழிபெயர்தலுக்கு பின் வரும் மாற்றங்கள்

8.புரோகேரியாட்டுகளில் படியெடுத்தல் நிலையில் ஜீன்கள் ஒழுங்கமைக்கப் படுகின்றன என்பதை விளக்கியவர் - ஜேக்கப் மற்றும் மோனாடு .

9.திடீர் மாற்றம் என்பது ஒரு உயிரினத்தின் ஜீன் அமைப்பில் அல்லது குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் பரம்பரையாக தொடரக்கூடிய திடீர்மாற்றங்களாகும் .

10.குரோமோசோம்களில் ஏற்படும் திடீர்மாற்றத்தால் உயிரினங்களின் புறத்தோற்றத்தில் பாதிப்பு ஏற்படும்

11.ஜீன் திடீர்மாற்றம் என்பது - புள்ளி திடீர் மாற்றம் எனவும் அழைக்கப்படுகிறது

12.திடீர் மாற்றக் கொள்கையை உருவாக்கியவர் - ஹியூகோட்வரிஸ்.

13.திடீர்மாற்றக் கொள்கையை உருவாக்குவதற்கு இவர் பயன்படுத்திய தாவரம் - - ஈனோத்தீரா லெமாாக்கியானா.

14. ட்ரோசோபைலா என்ற பழ ஈயில் ஏற்படும் திடீர்மாற்றத்தை விளக்கியவர் - மார்கன்

15.இயற்பிய திடீர்மாற்றத்தை தோற்றுவிக்கும் கதிர்கள் - - புறஊதாக்கதிர்கள் X - கதிர்கள் , ஆல்பா , பீட்டா , காமா கதிர்கள் , புரோட்டான்கள் , நியூட்ரான்கள் .

16.வேதி திமர்மாற்றத்தை கண்டறிந்தவர் - ஆயர்பாக் அம்மையார் வேதி .

17.திடீர்மாற்றத்தை தூண்டும் காரணிகள் - ஈத்தைல் மீத்தேன் சல்போனைமைடு , கெஃபெயின் , ஃபீனால்கடுகு வாயு.

18.மனிதர்களில் மச்சம் ஏற்படக் காரணம் - உடல் திடீர்மாற்றம் .

19.இனச்செல் திடீர்மாற்றத்தை எ . கா . ஹீமோகுளோபியா என்ற குருதிப் பெருக்க நோய் .

20.குரோமோசோமிலுள்ள ஜீனானது இயல்புக்கு புறம்பாக அடியோடு மாற்றமடையும் நிகழ்விற்கு - கொல்லி திடீர் மாற்றம் எனப் பெயர் .


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY