Ads Right Header

வேதியியல் 10+10 முக்கிய குறிப்புகள்!



1.கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் , வளையங்களையும் தோற்றுவிக்கும் பண்பிற்கு “ கேட்டினேசன் ” என்று பெயர் .

2.புவி ஓட்டில் உள்ள கார்பனின் அளவு
 - 0 . 03 % புவி ஓட்டில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடின் அளவு - 0 . 03 % .

3.ஒரு தனிமம் ஒத்த இயற்பியல் பண்புகளையும் , மாறுபட்ட வேதியியல் பண்புகளையும் கொண்டிருக்கும் நிலை - புறவேற்றுமை வடிவங்கள் எனப்படும் .

4.கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் : 1 . படிகமுள்ளவை எ - டு . கிராபைட் , வைரம் 2 . படிகமற்றவை எ - டு . நிலக்கரி , அடுப்புக்கரி மற்றும் விளக்கு கரி

5.இயற்கையில் காணப்படும் பொருட்களில் கடினமானது - வைரம்.

6. கிராபைட்டில் கார்பன் அடுக்குகள் அறுங்கோண வளையங்களுடன் கூடிய தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளது .

7.கிராபைட்டில் பல்வேறு அடுக்குகளிடையே உள்ள பிணைப்பு - வலுவிழந்த வாண்டர்வால் விசையாகும்

8.இப்பண்பே எந்திரங்களில் கிராபைட் உயவுப் பொருளாக பயன்பட உதவுகிறது.

9.வைரத்தில் கார்பன் அணுக்கள் முப்பரிமாணத்துட்ன கூடிய வலுவான விசையால் பிணைக்கப்பட்டுள்ளதால் வைரம் கடினமான பொருளாக உள்ளது.

10. மின்சாரத்தை கடத்தும் அலோகம் - கிராபைட் .

11.கிராபைடின் உருகுநிலை - 3700°C.

12. மின்கலங்களில் மின்வாயாகவும் , எந்திரங்களில் உயவுப் பொருளாகவும் , லெட் பென்சில் செய்யவும் , அணுக்கரு உலையில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் ( Moderator ) , பூச்சுகள் தயாரிக்கவும் கிராபைட் பயன்படுகிறது.

13 வைரத்தின் பளபளப்புக்கு காரணம் - முழு அக எதிரொலிப்பு.

14. வைரத்தின் அடர்த்தி - 3 . 5 A / செ . மீ

15.பாறைகளைத் துளையிடவும் , பளிங்குக்க கற்களை அறுக்கவும் , கண்ணாடியை வெட்டவும் கருப்பு வைரம் பயன்படுகிறது.

16. கார்பனின் புறவேற்றுமை வடிவமான புல்லரீன்களில் கார்பன் அணுக்கள் கோள வடிவமுடைய மூலக்கூறுகளாக ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன .

17.ஃபுல்லரீனை தயாரித்தவர் - பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீன் .

18.பக்கிபால் என அழைக்கப்படுவது -
Co ஃபுல்லரீன் .

19.கால்சியம் கார்பனேட் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் போது கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது .

20.உலர் பனிக்கட்டி என்பது - திண்ம கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY