Ads Right Header

இயற்பியல் 10+10 குறிப்புகள்!



1.ஒரு பொருள் மேல்நோக்கி எறியும் போது அடையும் பெரும உயரம்
 ( h ) = u / 2g .

2.மேல் நோக்கி எறியப்படும் ஒரு பொருள் அடையும் பெரும் உயரம் அதன் தொடக்க திசைவேகத்தின் இருமடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.

3.பறக்கும் காலத்திற்கான சமன்பாடு
 ( ti ) = 2u / g

4.எறிபொருளின் பாதை -
பரவளையம் ஆகும் .

5.ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஊர்தியிலிருந்து வெளியே எறியப்படும் ஒரு பொருள் பரவளையப் பாதையை மேற்கொள்ளும் வட்ட இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் நேர்கோட்டுத் திசைவேகத்திற்கும் , கோணத் திசைவேகத்திற்கும் இடையேயுள்ள தொடர்புக்கான சமன்பாடு V = ru.

6.கோளுக்கும் புவிக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசை - மையநோக்கு விசை.

7. வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ள காரணம் - மையநோக்கு விசை.

8. மோட்டார் சைக்கிள் வட்டப்பாதையில் இயங்கத் தேவையான மையதோக்கு விசையானது - அவ்வாகனத்தின் திசைவேகத்தையும் , வளைவு பாதை ஆரத்தையும் பொறுத்தது

9.புவிதட்டையாக இருக்கக் காரணம் - துருவப் பகுதியில் மைய விலக்கு விசை குறைவாகவும் , நிலநடுக்கோட்டுப் பகுதியில் மையவிலக்கு விசை அதிகமாகவும் இருப்பதால்.

10.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டத்திற்கும் , துருவப் பகுதியில் புவியின் விட்டத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு - 48 கி . மீ .

11.துணி துவைக்கும் எந்திரத்தின் சுழலும் கலன் செயல்படும் விதம் - மைய விலக்கு விசைக்கு உதாரணம் ஆகும் .

12.மைய விலக்கு விசையின் அடிப்படையில் செயல்படும் கருவி - வாட்கவர்னர்.

13. பாலிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்படுவதும் , பிளாஸ்மாவிலிருந்து இரத்த செல்கள் பிரித்தெடுக்கப்படுவதும் , தேனடையிலிருந்து தேன் பிரித்தெடுக்கப்படுவதும் மைய விலக்கு விசைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும் .

14.வளைவு பாதையில் மிகுந்த வேகத்தில் வாகனங்கள் செல்லும்போது கவிழக்காரணம் - பாதைக்கும் , டயருக்கும் இடையேயுள்ள உராய்வு விசையை விட வாகனங்களின் மீது மையவிலக்கு விசை அதிகமாக செயல்படுவதே ஆகும் .

15.இதனைத் தவிர்ப்பதற்காக வளைவான பாதைகள் சற்று உயர்த்தப்படுகிறது .

16.சர்க்கஸ் மரணக்கூண்டு ஓட்டுநர் தலைகிழாக அந்த கூண்டிற்குள் சுழன்றாலும் கீழே விழாமல் இருக்கக் காரணம் - ஓட்டுநர் மீது செயல்படும் மையவிலக்கு விசை.

17.புவி மையக் கொள்கையை வெளியிட்டவர் - தாலமி .

18.சூரிய மையக்கொள்கையை வெளியிட்டவர் - கோபர்நிகஸ்

19. தற்கால வானியலுக்கு அடிகோலியவர் - கெப்ளர்.

20.பாராசூட் திறக்காத நிலையில் வானத்திலிருந்து குதிக்கும் ஒருவரின் முற்றுத்திசை வேகம் - - மணிக்கு 200 கி . மீ .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY